ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நேற்று நெல்லை மாவட்ட ரசிகர்களை சந்தித்தார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் .முந்தைய  கூட்டங்களில் ரஜினியின் காணொளி காட்சி ஒளிபரப்பப்பட்ட நிலையில் முதல் முறையாக ரஜினிகாந்த்  நேரில் கலந்துரையாடினார்.

ரஜினிகாந்த் அவர்களிடையே பேசும் போது ரஜினிகாந்த் கூறியதாவது:-

1. ரசிகர்கள் எல்லோரையும் ஒரே நேரத்தில் சந்திக்க சில நாட்கள் ஆகும்

2.மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும்; நாம் நமது வேலையை அமைதியாக பார்ப்போம்

3.ஒரு குடும்பம் நடத்தணும்னா குடும்பத்தலைவன் சரியாக இருக்கணும்; இந்த குடும்பத்தை பொறுத்தவரை நான் சரியாக இருக்கிறேன்

4.இது சாதாரண பில்டிங் கிடையாது. 32 ஃப்ளோர். 32 மாவட்டம், அதனால் ஃபவுண்டேஷனை ஸ்ட்ராங்காக போடனும் .

5.அரசியலில் எந்த விஷயத்தையும் கவனமாக கையாள்வது அவசியம்

6.அடித்தளத்தை வலுவாக அமைக்க வேண்டும் என்பதால்தான் நாம் இந்த நிலையில் இருக்கிறோம்

7.எனது ரசிகர்களுக்கு மற்றவர்கள் அரசியல் கற்றுத்தர வேண்டாம்; அவர்கள் மற்றவர்களுக்கு கற்றுத்தருவார்கள்.

8.விரைவில் உங்கள் அனைவரையும் உங்கள் மாவட்டத்தில் சந்திக்கிறேன்

9. காவிரி விவகாரத்தில் அனைத்துக்கட்சிக் கூட்டத்தை வரவேற்கிறேன்

10.கமல்ஹாசனின் அரசியல் பொதுக்கூட்டம் மிகவும் நன்றாக இருந்தது; கமல் சிறப்பாக செயல்படுவார்

11.32 மாவட்ட நிர்வாகிகளை ஒரே நேரத்தில் சந்திக்க சிறிது நேரம் ஆகும்; நேரம் வரும்போது நேரடியாக சுற்றுப்பயணம் மூலம் ரசிகர்களை சந்திப்பேன்

12. நானும் கமலும் வேறு வேறு பாதையில் சென்றாலும் இருவரின் நோக்கமும் மக்களுக்கு நல்லது செய்வதே