ஜெயிலர் 2 ரிலீஸ்: ஆட்டம், பாட்டம், பட்டாசு… திருவிழாவாகக் கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெயிலர் 2 திரைப்படம் வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானதைத் தொடர்ந்து, தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ரசிகர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் அதிகாலை முதலே திரையரங்குகள் முன்பு திரண்ட ரசிகர்கள், பட்டாசு வெடித்தும், மேளதாளங்கள் முழங்க நடனமாடியும், தலைவரின் பிரம்மாண்ட கட்-அவுட்களுக்குப் பாலாபிஷேகம் செய்தும் படத்தின் வெளியீட்டைக் கொண்டாடினர்.
முதல் நாள் முதல் காட்சியைக் காண ரசிகர்கள் அலைமோதிய நிலையில், திரையரங்குகள் முழுவதும் திருவிழாக் கோலம் பூண்டன. சமூக வலைத்தளங்களிலும் ரசிகர்களின் ஆட்டம், பாட்டம், உற்சாகக் கொண்டாட்டங்கள் தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.
தலைவரின் படம் என்றாலே கொண்டாட்டம்தான்… அதுவும் ஜெயிலர் 2 என்றால் சொல்லவா வேண்டும்!
இதோ, நாடு முழுவதும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கொண்டாடிய உற்சாகமான தருணங்களின் புகைப்படத் தொகுப்பு!













