Nattukku Oru Nallavan
ஹலோ ரஜினி மாமா
குழு ஹலோ ரஜினி மாமா
உன்னோடு வாழ்த்துக்கள் சொல்லலாமா ( இசை )
நீ என்றும் சூப்பர் ஸ்டார்
உன் மேலே பல கண்ணும் படலாமா ( இசை )
வா வா ரஜினி மாமா நாங்கள் உனக்கு
திருஷ்டி கழிக்க தேடி வந்தோம்
கையில் தீபம் ஏற்றி சூடம் காட்டி
உன்னைப் போற்றி பாட வந்தோம்
ஆண் தாங்க்யூ மலர்களே தாங்க்யூ தளிர்களே
நான் நன்றி சொல்லவும் தமிழுக்குள் வார்த்தை இல்லை
குழு பொல்லாத நன்றி வேணா
எங்களுக்கு நல்ல கதை சொல்லு மாமா
அந்த பாட்டி கதை வேணா
நீயாச்சும் புதுக் கதை சொல்லு மாமா
ஆண் இந்த வாழ்க்கை நாடகத்தை
எழுதியவன் உயரத்தில் இருக்கின்றான்
நான் என்ன பாத்திரமோ
கேட்கிறேன் மனதுக்குள் சிரிக்கின்றான்
குழு ஓ... ஓ... ஓ... ஓ...
ஆண் எங்கோ தூர திசையில் சோகக் குரலில்
குழந்தை அழுகை கேட்கவில்லையோ
பிள்ளை தாயின் முகத்தை தந்தை முகத்தை
உலக சுகத்தை பார்க்கவில்லையோ
பெண் அது யார் அழுகையோ அது ஏன் அழுகுதோ
குழு அது யார் அழுகையோ அது ஏன் அழுகுதோ
ஆண் நம் நாடு எதிர் கொள்ளும் ஆபத்தின் அறிகுறியோ
அந்தப் பிள்ளை அழுவது உணர்ச்சியின் புது மொழியோ...
என் தாயின் மணிக் கொடியே
இருவர் என் தாயின் மணிக் கொடியே
வாழ்வோடு சங்கமம் ஆனவளே
ஓ... ஓ... ஓ... லலால லாலல லலலல லா...
உன் மூன்று நிறங்களினால்
தாய் நாட்டின் மூலங்கள் சொன்னவளே
ஓ... ஓ... ஓ... லலால லாலல லலலல லா...
இந்து கிறிஸ்து முஸ்லிம் பௌதம் சமணம்
உனது சபையில் ஒன்று அன்றோ...
நாங்கள் உண்ணும் சோறும் பருகும் நீரும்
அன்னை நீயே தந்ததன்றோ...
நீ வாழ்க தாயே நீ வெல்க தாயே
என்றும் எங்கள் கோட்டையில் ஜெயக் கொடி நீ தானே
லா லால லாலலலா லாலாலா லாலல லாலாலா
ஒன் டூ த்ரீ ஒன் டூ த்ரீ
பெண் ஒன் டூ த்ரீ ஒன் டூ த்ரீ
தாய் தந்தைக்கொரு தெய்வம் ஃப்ரீ
ஒன் டூ த்ரீ ஒன் டூ த்ரீ
பாரதம் சுற்றும் கடலும் ஃப்ரீ
குழு வி ஆர் தி சில்ட்ரன் வி ஆர் தி நேஷன்
வி ஆர் தி சில்ட்ரன் வி ஆர் தி நேஷன்
அன்புப் பாடம் சொல்லும் இந்த பள்ளிக்கூடம்
ஆண் ஜோதி... ஜோதி...
இசை சரணம் - 1
பெண் ஃபோர் ஃபை சிக்ஸ் ஃபோர் ஃபை சிக்ஸ்
பருவ காலங்கள் என்றும் சிக்ஸ்
ஃபோர் ஃபை சிக்ஸ் ஃபோர் ஃபை சிக்ஸ்
வேத சாஸ்திரங்கள் அதுவும் சிக்ஸ்
குழு வி ஆர் தி லாங்குவேஜ் வி ஆர் தி கரேஜ்
வி ஆர் தி லாங்குவேஜ் வி ஆர் தி கரேஜ்
அன்புக் கோயிலாம் இந்த பள்ளிக்கூடம்
ஆண் நௌ த டைம் இஸ் லவ் டைம்
இசை சரணம் - 2
பெண் செவன் எய்ட் நைன் செவன் எய்ட் நைன்
சுற்றி வருகின்ற கோள்கள் நைன்
செவன் எய்ட் நைன் செவன் எய்ட் நைன்
வீரம் முதலான் ரசங்கள் நைன்
குழு வி ஆர் தி நேச்சர் வி ஆர் தி ஃபியூச்சர்
வி ஆர் தி நேச்சர் வி ஆர் தி ஃபியூச்சர்
நேர்மை தீபம் நெஞ்சில் ஏற்றும் பள்ளிக்கூடம்
ஆண் ஜோதி... ஏய் ஜோதி
பத்து முறை பத்து முறை
முத்தம் தரலாமா நூறு முறை
பத்து முறை பத்து முறை
இன்பம் பெறலாமா விடியும் வரை
குழு வி ஆர் தி லவர்ஸ் வி ஆர் தி ஃப்லவர்ஸ்
வி ஆர் தி லவர்ஸ் வி ஆர் தி ஃப்லவர்ஸ்
லெவனு ட்வல்வு தர்டீன் ஃபோர்டீன்
ஆகஸ்ட் ஃபிஃப்டீன்
இசை சரணம் - 3
ஆண் பதினாறானாலே பூந்தேகம் மெருகேறும்
பதினேழானாலே மனதோரம் அலை மோதும்
பதினெட்டானாலே விழியோரம் கதை பேசும்
பத்தொன்பதானாலே தேனாறு பாய்ந்தோடும்
எழில் வாலிபம் இருபதில் பூத்தாடுமே
பெண் இளம் தோள்களை தாயகம் எதிர் பார்க்குமே
குழு வி ஆர் தி சோல்ஜர்ஸ் வி ஆர் தி லீடர்ஸ்
வி ஆர் தி சோல்ஜர்ஸ் வி ஆர் தி லீடர்ஸ்
என்றும் எங்கள் காவல் இந்த பள்ளிக்கூடம்
இசை சரணம் - 4
ஆண் ட்வன்டி ஒன் பின்னாலே ட்வென்டி டூ
பஸ் ஸ்டாண்ட் க்யூ
பொண்ணு கேட்டாளே ஹௌ டு யூ டூ
ஐ லவ் யூ
ட்வென்டி த்ரீ பஸ் ஸ்டாப்பில் ட்வென்டி ஃபோர்
தங்க தேரைப் போல்
குலுங்கி போகின்ற நடைய பார் இடையை பார்
இருவர் உறங்காமலே டீனேஜ் போராடுமே
போராட்டமே ஓல்ட் ஏஜில் நினைவாகுமே
வி ஆர் தி லவர்ஸ் வி ஆர் தி ஃப்லவர்ஸ்
வி ஆர் தி லவர்ஸ் வி ஆர் தி ஃப்லவர்ஸ்
தேர்டி ஃபாட்டி ஃபிஃப்டிக்கு மேலே
பூமிக்கு குட் பை ( இசை )
ஆண் ஒரே மூச்சு போனா போச்சு
எந்நாளுமே உண்மைக்கு போராடு ஓ... ஓ...
புயல் போலே எழுந்தாலே
எப்போதுமே தோல்விகள் கிடையாது ஓ... ஓ... ( இசை )
பெண் ஒரே மூச்சு போனா போச்சு
எந்நாளுமே உண்மைக்கு போராடு ஓ... ஓ...
புயல் போலே எழுந்தாலே
எப்போதுமே தோல்விகள் கிடையாது ஓ... ஓ...
ஒரே முறை தான் இங்கே பிறப்பு
சும்மா இருந்தால் உண்டோ சிறப்பு
தியாகம் நீயும் செய்தால் போதும்
தெய்வம் வந்து மாலை போடும்
ஊருக்குள் வாழ்பவர் பலராவார்
உள்ளத்தில் வாழ்பவர் சிலராவார்
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்
காவியம் போல உன் பேர் வாழும்
ஒரே மூச்சு போனா போச்சு
எந்நாளுமே உண்மைக்கு போராடு ஓ... ஓ...
ஆண் துப்பாக்கி சத்தத்தில் என்றும் சத்தியங்கள் சாகாது
காலத்தின் தீர்ப்புக்கு எங்கும் அப்பீலே கிடையாது
இருவர் வி ஆர் தி போலீஸ் வி ஆர் தி ஜஸ்டீஸ்
வி ஆர் தி போலீஸ் வி ஆர் தி ஜஸ்டீஸ்
தீயின் மேலே தினமும் பூக்கும் புரட்சிப் பூக்கள் ( இசை )
ஒரே மூச்சு போனா போச்சு
எந்நாளுமே உண்மைக்கு போராடு ஓ... ஓ...
புயல் போலே எழுந்தாலே
எப்போதுமே தோல்விகள் கிடையாது ஓ... ஓ...
ஒரே முறை தான் இங்கே பிறப்பு
சும்மா இருந்தால் உண்டோ சிறப்பு
தியாகம் நீயும் செய்தால் போதும்
தெய்வம் வந்து மாலை போடும்
ஊருக்குள் வாழ்பவர் பலராவார்
உள்ளத்தில் வாழ்பவர் சிலராவார்
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்
காவியம் போல உன் பேர் வாழும்
ஒரே மூச்சு போனா போச்சு
எந்நாளுமே உண்மைக்கு போராடு ஓ... ஓ...
இசை சரணம் - 1
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...
அன்பே தானே எங்கள் வேதம்
அன்பே தானே எங்கள் பாடம்
செய்யும் பாவம் எங்கே போகும்
வரும் காலம் பதில் கூறும்
நன்மைகள் வாடுது பூவாக
தீமைள் ஆடுது தேளாக
தர்மங்கள் ஏங்குது தானாக
வஞ்சங்கள் ஓங்குது வீணாக
ஒரே மூச்சு போனா போச்சு
எந்நாளுமே உண்மைக்கு போராடு ஓ... ஓ...
புயல் போலே எழுந்தாலே
எப்போதுமே தோல்விகள் கிடையாது ஓ... ஓ...
சின்னக் கண்ணம்மா
ஆண் சின்னக் கண்ணம்மா சின்னக் கண்ணம்மா
அம்மாவுக்கு வீடெங்கே அக்கம் பக்கமா
எங்க கிட்டே மாட்டிக்கிட்டே எக்கச்சக்கமா
சின்னக் கண்ணம்மா சின்னக் கண்ணம்மா
ரோந்து சுத்தி வாரியே ரோட்டு பக்கமா
கூட்டம் போட்டு கேக்குறோம் ஓட்டு என்னம்மா
கொள்ளை அழகே நீ அள்ளிக் கொடம்மா
உன் வெள்ளி சிரிப்பு அது வெள்ளிக் காசம்மா
தங்க நகைய நாங்க கொள்ளை அடிச்சோம்
எங்க மனச நீ கொள்ளை அடிச்சே
கன்னம் இரண்டில் கன்னம் வைக்க சம்மதம் சொல்லம்மா
நீ சம்மதம் சொல்லம்மா ஓன் சங்கதி என்னம்மா ( இசை )
பெண் ஆத்தாடி நான் அன்னக் கிளி தான் ( இசை )
ஆத்தாடி நான் அன்னக் கிளி தான்
பாத்தாலே நான் பச்சக் கிளி தான்
அன்னையவள் பிறந்தது கங்கைக் கரையில்
எந்தன் தந்தை வளர்த்தது காவிரியில்
என் வீடு தானே பாரதம் எல்லோரும் இங்கே ஓர் குலம்
தன்மானம் தானே சீதனம் பெண் மானம் இன்று கேவல்ம்
காந்தி வாழ்ந்த தேசம் இது புத்தன் வந்த பூமி இது
இசை சரணம் - 1
ஆண் சின்னக் கண்ணம்மா சின்னக் கண்ணம்மா
தப்பி செல்ல பாக்குறே ரொம்ப தப்பம்மா
பெண் கற்பு கொண்ட பெண் கிளி கையில் சிக்குமா
ஆண் வெக்கக் கேடம்மா வெக்கக் கேடம்மா
ஓ வீதி வந்த பெண்ணுக்கு வேலி என்னம்மா
பெண் கண்ணி வெச்சா மின்னல் என்ன கையில் சிக்குமா
ஆண் சுட்டு விரல நீ தொட்டுச் செல்லம்மா
எட்டு நாடிக்கு பதினெட்டு போதும்மா
புத்தன் காந்திக்கு நாம மால போடலாம்
ஒண்ணே ஒண்ணத் தான் வா ஏலம் போடலாம்
கோழிக் குஞ்சே உன்ன நாங்க கொள்ளை அடிப்போமே
பல பங்கு பிரிப்போமே ஒரு பந்தி விரிப்போமே ( இசை )
பெண் தாய் நாடா என் தாய் நாடா ( இசை )
தாய் நாடா என் தாய் நாடா
பெண்ணைப் பார்த்தால் இது பேய் வீடா
பெண் உடம்பில் இருப்பது சதை மட்டுமா
உடம்புக்குள் மனசுண்டு ஒப்புக் கொள்ளம்மா
ஆண் வேதாந்தம் இங்கே வேண்டுமா
வென்னீரில் மீன்கள் வாழுமா
பெண் மண்ணோடு வானம் மாறலாம்
பெண் என்ற தன்மை மாறுமா
ஆண் இன்று மட்டும் வாழ்ந்துவிடு
பெண் இல்லை இல்லை ஆளை விடு
இசை சரணம் - 2
ஆண் சின்னக் கண்ணம்மா நீ எந்த ஊரம்மா
வேள கெட்ட வேளையில் வேல என்னம்மா
பெண் போலீஸ் பொண்ணையா நான் உள்ளூர் தானையா
பொம்பளைக்கு ஊருக்குள் காவல் இல்லையா
ஆண் கன்னி மயிலே துணை யாரும் வல்லையா
பெண் காவல் துறையில் ஓர் ஆணும் இல்லையா
ஆண் ஐயா யாருன்னு நீ கேட்டதில்லையா
பெண் ஆண்மை இருக்கா வீண் ஜம்பம் ஏனையா
காக்கிச் சட்ட போட்டவருக்கு கத்தியும் இல்லையா
அட புத்தியும் இல்லையா ஒரு லத்தியும் இல்லையா
( இசை )
ஆண் சுதந்திரம் தான் இருக்கின்றதா
நடுத் தெருவில் அது கெடக்கின்றதா
பெண்கள் நிலை இன்று என்ன கடச் சரக்கா
கண்ணகியும் வந்த மண்ணில் இந்தக் கிறுக்கா
பெண் பேரில் இங்கே ஆலயம்
பெண் பாடு ஏனோ கேவலம்
என் உள்ளம் என்ன தாங்குமா
என் துப்பாக்கி என்ன தூங்குமா
பெண் காக்கிச் சட்டை மன்னவரே
கை கொடுங்கள் காவலரே
ஆண் போனாளே நம் பொட்டக் குருவி
பறந்தாளே நம் சிட்டுக் குருவி
கையில் வந்த கனி அது விழுந்திருச்சே
பையில் வந்த சில்லறையும் தொலஞ்சிருச்சே
யாரோடு யார் தான் என்பது உண்டாகும் போதே உள்ளது
வானோடு நீலம் சேர்ந்தது வாழ்வோடு இன்பம் சேர்ந்தது
கங்கை நதி வந்ததென்ன காவேரியில் சேர்ந்ததென்ன...
தென்றலே தென்றலே
பெண் தென்றலே தென்றலே தென்பொதிகை தென்றலே
நெஞ்சிலே நெஞ்சிலே பொங்குதம்மா காதலே
ஆண் வாலிப நெஞ்சங்கள் முத்தம் கொஞ்சவே
துடிக்கிறதே துடிக்கிறதே உதடுகளே
பெண் மோகனச் சந்தங்கள் நித்தம் சொல்லவே
அழைக்கிறதே அழைக்கிறதே பருவங்களே
ஆண் தென்றலே தென்றலே தென்பொதிகை தென்றலே
நெஞ்சிலே நெஞ்சிலே பொங்குதம்மா காதலே
இசை சரணம் - 1
ஆண் இனிக்குமா இனிக்குமா
இதயம் இனிக்குமா தொடாமலே
பெண் உறங்குமா விழிகளே உனது மூச்சு தான் படாமலே
ஆண் பறக்குது மனம்
பெண் தவிக்குது தினம்
ஆண் வா தென்றலே
பெண் வா தென்றலே
ஆண் தேன் மழை தேன் மழை வானத்திலே தேன் மழை
பூ மழை பூ மழை தேகத்திலே பூ மழை
பெண் தூங்கிய மல்லிகை மின்னல் பட்டதும்
விரிகிறதே விரிகிறதே விரிகிறதே
ஆண் ஏங்கிய உள்ளங்கள் ஏக்கம் தீரவே
பொழிகிறதே பொழிகிறதே பொழிகிறதே
பெண் தேன் மழை தேன் மழை வானத்திலே தேன் மழை
பூ மழை பூ மழை தேகத்திலே பூ மழை
இசை சரணம் - 2
பெண் சிரிக்குமா மலர்களே அமுத மழைத் துளி விழாமலே
ஆண் மணக்குமா தேகமே புதிய சுகங்களை பெறாமலே
பெண் சின்னஞ்சிறு கொடி
ஆண் சிரித்திடும் படி
பெண் தாலாட்டுதே
ஆண் நீராட்டுதே
பெண் பனியே பனியே பக்கமெல்லாம் பனியே
தனியே தனியே மாட்டிக்கிட்டேன் தனியே
ஆண் ஊடல் என்றுமே வெளிப் பனியில்
கரைகிறதே கரைகிறதே கரைகிறதே
பெண் போர்வை போலவே ஒட்டிக் கொள்ளவே
பூ உடலே சிலிர்க்கிறதே கலங்கிறதே
ஆண் பனியே பனியே பக்கமெல்லாம் பனியே
தனியே தனியே மாட்டிக்கிட்டேன் தனியே
இசை சரணம் - 3
ஆண் இளமையே ஏங்குதே புதிய உறவுகள் கொண்டாடுதே
பெண் இனியுமே கலக்கம் ஏன்
இரண்டு மனங்களும் ஒன்றாகவே
ஆண் வழிந்தது பனி
பெண் கனிந்தது கனி
ஆண் வா பொன்மணி
பெண் வா வெண் பனி
இருவர் பனியே பனியே பக்கமெல்லாம் பனியே
தனியே தனியே மாட்டிக்கிட்டேன் தனியே
நல்லவன் நல்லவன் நாட்டுக்கொரு நல்லவன்
நல்லவன் நல்லவன் நாட்டுக்கொரு நல்லவன்
உன்னைப் போல யாரு தம்பி
வல்லவன் வல்லவன் வீட்டுக்கொரு வல்லவன்
வந்து சேர வேணும் தம்பி ( இசை )
நல்லவன் நல்லவன் நாட்டுக்கொரு நல்லவன்
உன்னைப் போல யாரு தம்பி
வல்லவன் வல்லவன் வீட்டுக்கொரு வல்லவன்
வந்து சேர வேணும் தம்பி
இசை சரணம் - 1
யானைக் கூட்டம் போலே சேனை கொண்டு
வந்ததென்று சொல்லு வெற்றி கொள்ளு
எறும்புக் கூட்டம் போலே சுற்றி வந்து
அணி வகுத்து நில்லு மோதிக் கொல்லு
பாம்பு போலே ஊர வேண்டும்
பறவை போலே மாற வேண்டும்
சிங்கம் போலே பார்வை வேண்டும்
புலிகள் போலே பாய வேண்டும்
முன்னேறு ஞானமுண்டு நெஞ்சோடு
போராடு வீரமுண்டு தோளோடு
நல்லவன் நல்லவன் நாட்டுக்கொரு நல்லவன்
உன்னைப் போல யாரு தம்பி
வல்லவன் வல்லவன் வீட்டுக்கொரு வல்லவன்
வந்து சேர வேணும் தம்பி
இசை சரணம் - 2
நாளை நாளை என்று தள்ளி விட்டு
லாபம் ஒன்றும் இல்லை நேரம் இல்லை
இன்றே இன்றே என்று எட்டு வைத்து
எட்ட வேண்டும் எல்லை தோல்வி இல்லை
ரெண்டு வானம் விண்ணில் இல்லை
ரெண்டு வாழ்க்கை மண்ணில் இல்லை
புள்ளி இன்றி வட்டம் இல்லை
ரத்தம் இன்றி யுத்தம் இல்லை
போராடு கை இரண்டு வாளாக
முன்னேறு ஏழு மலைகள் தூளாக
நல்லவன் நல்லவன் நாட்டுக்கொரு நல்லவன்
உன்னைப் போல யாரு தம்பி
வல்லவன் வல்லவன் வீட்டுக்கொரு வல்லவன்
வந்து சேர வேணும் தம்பி ( இசை )
வீடு கட்டி விளையாடலாமா
பெண் வீடு கட்டி விளையாடலாமா
ஆத்தங்கரையில் குதிச்சோடலாமா
உயிரே... ஓ... ஓ... ஓ... ஓ... உன்னை மறப்பதில்லை
மறந்தாலே நான் இல்லை எந்த நாளுமே
ஆண் மறக்காதே என்னை நேசிக்கிறேனே உன்னை
பெண் மறக்காதே என்னை நேசிக்கிறேனே உன்னை
இசை சரணம் - 1
பெண் கண்ணும் கண்ணும் சந்திப்பதாலே
காதல் தோன்றுது
காதலுக்கு கண் இல்லை என்று
எதற்கு சொல்வது ( இசை )
ஆண் காதலுக்கு கண்கள் உண்டு உனக்கு புரியுமா
நினைக்கும் இந்த நெஞ்சுக்கு கண்கள்
இல்லை தெரியுமா
பெண் பச்சக் குதிர பச்சக் குதிர தாண்டிப் பாரு
பச்சக் குதிர
மானா மதுர மானா மதுர மதுர பக்கம்
மானா மதுர
ஓடும் நதிக்கு கடலே எல்லை
காதல் நதிக்கு கரையே இல்லை
ஆண் உயிரே... ஓ... ஓ... ஓ... ஓ... உன்னை மறப்பதில்லை
மறந்தாலே நான் இல்லை எந்த நாளுமே
பெண் மறக்காதே என்னை நேசிக்கிறேனே உன்னை
ஆண் மறக்காதே என்னை நேசிக்கிறேனே உன்னை
இசை சரணம் - 2
பெண் உலகில் இங்கு வாழ்ந்திடத் தானே காதல் கொள்வது
காதலித்து சாவது தானா உலகில் பெரியது ( இசை )
ஆண் சொர்கத்திலே திருமணம் இல்லை மண்ணில் உண்டம்மா
உணமைக் காதல் தோன்றுவதெல்லாம் சொர்கம் தானம்மா
பெண் கண்ணாமூச்சி கண்ணாமூச்சி
புடிச்சிப் பாரு கண்ணாமூச்சி
தொட்டா போச்சு தொட்டா போச்சு
பட்டாம் பூச்சி தொட்டா போச்சு
வாழ்க்கை பயணம் முள்ளின் மேலே
காதல் பயணம் பூக்கள் மேலே
இருவர் உயிரே... ஓ... ஓ... ஓ... ஓ... உன்னை மறப்பதில்லை
மறந்தாலே நான் இல்லை எந்த நாளுமே
மறக்காதே என்னை நேசிக்கிறேனே உன்னை
மறக்காதே என்னை நேசிக்கிறேனே உன்னை
|