காஷ்மீர் பிரச்சினையில் அதிரடி காட்டிய மத்திய அரசின் செயலானது பலதரப்பட்ட மக்களால் பாராட்டும் சிலரால் கண்டனம் செய்யப்பட்டும் வருகிறது.
1996ல் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது எனச் சொன்னவர்... வீரப்பனை வீழ்த்தியது தான் எதிர்த்த ஜெ என்பதால் பாராட்டாமல் இருந்துவிடவில்லை. "தைரியலட்சுமி" அவரிடத்தில் குடிகொண்டுள்ளார் என மேடையில் பாராட்டினார்.
கலைஞருடன் நெருங்கிய நட்பு பாராட்டினாலும்...அன்றைய காலகட்டத்தில் தமிழ்சினிமாவைச் சேர்ந்தவர்கள் எவ்வாறு மிரட்டப்பட்டு, கட்டாயத்திற்க்கு ஆட்பட்டு விழாவில் கலந்து கொள்ள நேர்கின்றது என்பதை அஜீத் சொன்ன போது... கலைஞருக்கு அருகிலேயே உட்கார்ந்திருந்த ரஜினி எழுந்து நின்று பாராட்டினார் என்பதும் வரலாறே!
நிற்க... ஏன் இந்த ஃப்ளாஷ்பேக்?
ரஜினியின் பாராட்டும் கண்டனமும் always based on issues not on his personal situation.
உள்துறை அமைச்சரின் பணியைப் பாராட்டிய அடுத்தகணமே .. பிரதமரும் உள்துறை அமைச்சரும் "கிருஷ்ணர் - அர்ஜுனன்" போன்றவர்கள் எனச் சொல்லிவிட்டு... யார் கிருஷ்ணர்; யார் அர்ஜூனன் என்பது அவர்கள் இருவருக்கும் மட்டுமே தெரியும் என்பதை தனது ட்ரேட்மார்க் சிரிப்புடன் தொடர்ந்தார்.
அதனைத் தொடர்ந்து எத்தனை விவாதங்கள், பொருமல்கள்.
அரசியல் என்பது மக்கள் / தேசிய நலன் சார்ந்தது என்பது மறக்கடிக்கப்பட்டு கட்சியும் அதன் தலைவர்கள் நலன் சார்ந்ததாக மாறி பல ஆண்டுகள் ஆன நிலையில் ரஜினியின் பாராட்டு கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில்.. நேற்று மீண்டும் தான் முன்பு சொன்னதை ஆழமாக, தீர்க்கமாக வலியுறுத்தினார்.
நேற்றைய பேட்டியில்... ரஜினியின் பேச்சில், குரலில் ஒரு உறுதியும், பார்வையில் தீர்க்கமும்.. உடல்மொழியில் உறுதியும் அருமை.
காஷ்மீரில் உள்ள தீவிரவாதம், 144 உத்திரவு, ராஜ்யசபாவில் முதலில் தீர்மானம் நிறைவேறிய பின்னரே மக்களவையில் நிறைவேறியது, தேச நலன் முக்கியம் எனச் சொன்னவர் அடுத்து சொன்னதை இன்றைய அரசியல்வாதிகளால் கடைபிடிக்க முடியாத ஒன்று.
"தேச நலன் சம்பந்தப்பட்ட விஷயங்களை அரசியலாக்க வேண்டாம்".
இந்த விவாதம் நடைபெற்று வந்த அதே வேளையில்.... 2020 ஏப்ரலில் கட்சி அறிவிப்பு எனச் செய்திகள் வரத் தொடங்கின. அதற்கும் தெளிவான பதில் அளித்தார்.
ரஜினி படத்தில் பஞ்ச் வசனங்கள் எப்போதும் அதிரடியாக இருக்கும். அவரது நிஜ வாழ்க்கையில் பேசுவது எல்லாமே " பஞ்ச்"
"தமிழக அரசியலில் மீண்டும் போயஸ் கார்டன் அதிகார மையமாக உருவெடுக்குமா"? என்ற கேள்விக்கு " காத்திருந்து பாருங்கள்" என அர்த்தம் பொதிந்த புன்னகையுடன் முடித்தார்.
தெய்வீகமும் தேசியமும் எனது இரு கண்கள் என்ற திரு. முத்துராமலிங்க தேவர் அவர்களின் கூற்றினைப் போலவே ரஜினியும் இறை நம்பிகையும் இந்திய தேசத்தின் மீது தீராத நம்பிக்கையும் பற்றும் கொண்டவர்.
- ராம் (விஜய்)
|