Related Articles
44 வருடத்தில் என்னவெல்லாம் நடந்தது - A Nostalgia
கிருஷ்ணனும் அர்ஜுனனும் நுண்ணரசியலும்....
கலைஞானி கண்டு எடுத்த கலை உலக ராஜா
என் கஷ்டத்தை தெரிஞ்சி உதவி செஞ்ச ரஜினி - நடிகை விஜயலட்சுமி
படையப்பன் கற்பூரம் மாதிரி யார் கொளுத்தினாலும் ஜோதியை தருவான்!!!
Superstar Rajinikanth looks dashing in new Darbar stills
சூர்யா பேசியது பிரதமர் மோடிக்கு கேட்டுள்ளது - காப்பான் இசை வெளியீடு விழாவில் தலைவர்
ரஜினியின் மறுபிறவி - என்னவெல்லாம் நடந்தது?
தண்ணீர் பஞ்சம் போக்குவதில் ரஜினியின் பங்கு என்ன?
ரஜினி மக்கள் மன்றத்தினர் பணிகள் மக்களுக்கும் கடவுளுக்கும் தெரியும் .. அது போதும்!

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2024 2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
What Rajini films taught you? 44 years of Rajinism
(Sunday, 18th August 2019)

What Rajini films teach you...44 things that I noted 
#Rajinism 44

1.God is inside you - சாமியை உள்ளேயே வச்சிக்கிட்டு வெளியே தேடுறாங்க

2.Trust in God - படைப்பு இருக்குமிடத்தில் படைத்தவன் இருக்கான், so ஆண்டவன் இருக்கான் 

3. Who is God - உறுமினா தான் சிங்கம், சுத்துனா தான் பூமி, உதவினால் தான் கடவுள்

4.About Life Partner- நீ விரும்புற பொண்ணை விட உன்னை விரும்புற பொண்ணைக் கல்யாணம் பண்ணு , உன் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும் 

5.Need for Training/Skilling - போர் தொழில் பழகணும் கொழந்தே 

6.Importance of Innovation - என் வழி தனி வழி 

7.Anger Management - கோபத்தோடு எழுகிறவன் நஷ்டத்தோடு உட்காருகிறான் 

8.Building Self Confidence - உன் வாழ்க்கை உன் கையில் 

9.Never Dwell on Past - கடந்து போறது தானே வாழ்க்கை 

10.Forgiveness - எதிரிகளை ஒழிக்க எத்தனையோ வழிகள் உண்டு, அதில் முதல் வழி மன்னிப்பு.

11.Finance  - கடன் வாங்குறதும் தப்பு கடன் கொடுக்குறதும் தப்பு 

12. Marriage - காதலிக்கும் போது பெத்தவங்களை மறந்துடுறீங்க, கல்யாணத்துக்கு அப்புறம் காதலை மறந்துராதீங்க 

13.Strategy - அன்பானாலும் சரி அடியானாலும் சரி, முதல்ல வாங்கிக்குவேன் அப்புறம் தான் திருப்பிக்கொடுப்பேன் 

14.Planning - யோசிக்காமல் எதையும் செய்யுறதில்ல செஞ்சதுக்கு அப்புறம் யோசிக்கிறது இல்ல 

15.Avoid Fear on future - சாகுற நாள் தெரிஞ்சா வாழுற நாள் நரகமாயிடும்

16. Work with sincerity - பாத்து வேலை செய், பாத்த உடனே வேலை செய்யாதே 

17. Fate: கிடைக்கிறது கிடைக்காமல் இருக்காது, கிடைக்காமல் இருப்பது கிடைக்காது.

18.Respect Mother - Mother first, all next Including God

19.Man and Woman - அளவுக்கு அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும் அளவுக்கு அதிகமா கோபப்படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே கிடையாது 

20.Respect for Profession - வேலை தான் சாமி 

21.About Money: பணம் கொஞ்சம் இருந்தா அதை நம்மை காப்பாத்தும் பணம் அதிகமா  இருந்தா நாம் அதைக் காப்பாத்தணும் 

22.Stay Alert- ஏமாத்துறவனை விட ஏமாறுகிறவன் தான் குற்றவாளி 

23.About Life: பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட கொஞ்ச காலத்தை தான் வாழ்க்கைன்னு சொல்லுறாங்க  அதில் யாருக்கும் துரோகம் செய்யாமல் கெடுதல் செய்யாமல் கூடி வாழுவது தான் வாழ்க்கை 

24.Bird Philosophy : பறவைன்னாலே பறக்கறது தான், அது தான் அதோட குணம் அதை பறக்க விடு, வாழ்வா சாவான்னு  அது முடிவு பண்ணட்டும் 

25.About Friend: மாதா பிதா குரு நல்ல நண்பன் அதுக்கு பிறகு தான் தெய்வம் 

26. About Job: எந்த வேலை செய்யுறோம்ன்னு முக்கியம் இல்ல, செய்யிற வேலை மனசுக்கு பிடிச்சு செய்யுறோம்ங்கறது தான் முக்கியம் 

27.Happiness: மனத்தில் சந்தோசம் இருந்தால் எங்கே போனாலும் சந்தோசம் தான், மனத்தில்  சந்தோசம் இல்லை என்றால் எங்கே போனாலும் சந்தோசம் இருக்காது 

28.How to see view Failure: I havent failed, but postponed my success

29.Team Building : என் கிட்ட இருக்கது அன்பாலே சேர்ந்த கூட்டம், தானா சேர்ந்த கூட்டம் 

30.Patience: தண்ணீரைக் கூட கையால் அள்ளலாம் அது பனிக்கட்டி ஆகும் வரை காத்திருந்தால் 

31.Respect Teachers : நம்மை உக்கார வச்சு நின்னுக்கிட்டே பாடம் நடத்துறவங்க ஆசிரியர்கள்,  நாம் எங்கேயோ போயிடுறோம், ஆனா ஆசிரியர்கள் அங்கேயே நின்னுக்கிட்டே இருக்காங்க, அப்படிப்பட்ட ஆசிரியர்களை எப்போவும் மதிக்கணும் 

32.Why to marry: கல்யாணம் இல்லாத காதல் நூல் இல்லாத காத்தாடி மாதிரி,  வாழ்க்கையில் மேல் போறதுக்கு தேவை படுற பிடிப்பு தான் marriage 

33.Hardwork: வாழ்க்கையில் கஷ்ட்டப்படாமல் எதுவும் கிடைக்காது, கஷ்டப்படாமல் கிடைக்கிறது என்னிக்குமே நிலைக்காது 

34.What is Wealth: வீடு வாசல் சொத்து சுகம் இருக்கிறவன் மட்டும் பணக்காரன் இல்ல, யாருக்கு நல்ல தகப்பன் தாய், நல்ல மனைவி, நல்ல குழந்தைகள், நல்ல நண்பர்கள் இருக்காங்களே அவங்க எல்லாருமே பணக்காரன் தான் 

35.What is Contentment- எப்போவுமே ஒண்ணை விட ஒண்ணு better ஆ தான் இருக்கும்

36.Generosity: கேக்காம கொடுக்குறது பழக்கம் கொடுத்ததை கேட்பது  பழக்கம் இல்லை 

37.Timing sense - எப்போ வருவேன் எப்டி வருவேன்னு யாருக்கும் தெரியாது ஆனா வரவேண்டிய நேரத்துக்கு கரெக்டா வருவேன்

38.Dress: காந்தி சட்டை கழட்டினத்துக்கும் அம்பேத்கர் கோட்டு போட்டதுக்கும் நிறைய காரணம் இருக்கு, அரசியல் 

39 Food and Health: பணம் பேர் புகழ் இருக்கும் மனுஷன் எல்லாம் சந்தோசமானவன் இல்லை, எந்த மனுஷன் உடம்பில் வியாதியும், மனத்தில் வேதனையும் இல்லையோ அவன் தான் சந்தோசமான மனிதன், பால் சாப்பிடுறவனுக்கே வியாதி வரும் காலம் இது, விஷத்தை சாப்பிட்டா.. 

40.Money & Life: சாப்பிட்ட சாப்பாடு உடம்பிலே தங்கிட்டா உடம்பு கெட்டு போய்டும், சம்பாதிச்ச பணம் எல்லாம் நாமே வச்சுகிட்டா வாழ்க்கை கெட்டு போய்டும் 

41.Political Freebies: சேலை வேட்டி கேக்காதீங்க வேலை வெட்டி கேளுங்க, அது இருந்தா சேலை வேட்டி நாமளே வாங்கிக்கலாம் 

42.Who is a Philosopher - யாரும் பிறக்கும் போது ஞானியா பிறப்பது இல்லை சந்தர்ப்பமும் சூழ்நிலையும் தான் அவனை ஞானி ஆக்குகிறது  

43.Economy - The rich gets richer and the poor gets poor

44.Remember this : கெட்டு போனவன் வாழலாம் ஆனா நல்லா வாழ்ந்தவன் கெட்டுப் போக கூடாது

- Dev






 
1 Comment(s)Views: 1566

R. Prasanna,Madurai
Sunday, 18th August 2019 at 03:03:30

திரு. தேவ் ; உங்களின் கானொலி ரஜினிபை யில் வராவிட்டாலும் ரஜினி.காம் மில் உங்கள் கட்டுரை வருவது மகிழ்ச்சி

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information