ரியாஸ் அகமது… சூப்பர் ஸ்டார் ரஜினியின் மக்கள் தொடர்பாளர். ரஜினியின் மீடியா தளபதி. அவர் சமீபத்தில் கலாட்டா சினிமாவின் யூட்யூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டி, ரசிகர்கள் மத்தியில் வைரலாக வலம் வருகிறது. தலைவர் ரஜினிகாந்த்துடனான தனது அனுபவங்கள், ரஜினியிடமிருந்து தான் கற்றுக் கொண்டவை, ஒரு ரசிகன் கற்றுக் கொள்ள வேண்டியவை என பல விஷயங்களை அந்தப் பேட்டியில் ரியாஸ் பகிர்ந்திருந்தார்.
‘ரஜினி சார் உங்களிடம் பல விஷயங்கள் பகிர்ந்திருப்பார். அதில் உங்களை நெகிழ வைத்தது எது?’ என்று நிகழ்ச்சி நடத்துபவர் கேள்வி கேட்க, அதற்கு ரியாஸ் அளித்த பதில், ‘ரஜினியிடம் பணியாற்றுபவர்கள், ரஜினியின் காவலர்கள் எத்தனை கட்டுக் கோப்புடன் இருக்க வேண்டும்’ என்பதற்கு உதாரணம்.
அதேபோல, தனக்கு முன் கைகட்டி நிற்பதையோ, தன் காலில் விழுவதையோ ரஜினிகாந்த் என்ற பேராளுமை ஒரு நாளும் விரும்பியதில்லை என்பதையும் அழுத்தமாகப் பதிவு செய்திருந்தார்.
முதல் பகுதி பேட்டியின் இறுதியில், ரஜினி உடல் நிலை சரியில்லாமல் இருந்த தருணம் குறித்து பேச்சு வந்தபோது, தன்னை மீறி ரி்யாஸ் கலங்கி கண்ணீர் சிந்த, பார்த்துக் கொண்டிருந்த ஒவ்வொரு ரசிகரும் அவரது நிலைக்கே போய் அழ ஆரம்பித்துவிட்டார்கள் என்பதே உண்மை.
ரியாஸ் சார்… இரண்டாவது பாகத்துக்காக காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
Courtesy : www.envazhi.com
|