பொதுவாகவே தமிழக மக்களையும் சினிமாவையும் பிரித்து பார்க்க முடியாது. ஒவ்வொரு நாளும் சினிமாவைத் தொடாமல் நம்மால் இருக்க முடியாது. முன்னர் எல்லாம் ஒவ்வொரு படமும் சில்வர் ஜூப்லி விழா 175 நாள் விழா என கொண்டாடி இருப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் அப்படி கொண்டாடுவது இல்லையே ?? ஏன் என யோசித்தது உண்டா ?
பொதுவாக சினிமாவை பற்றி எழுதுபவர்கள் ரஜினி வருகைக்கு முன், ரஜினி வருகைக்கு பின் என பிரிப்பார்கள். காரணம் ஒரு ஹீரோவின் அடிப்படை அம்சத்தையே மாற்றி அமைத்தார் ரஜினி. அவர் நடிக்க துவங்கியது முதல் இப்போது வரை அவர் நடித்த டெம்ப்லேட்களில் தன படங்கள் வருகின்றன.
அதே போல தமிழ் சினிமாவின் வியாபாரத்தை பற்றி எழுதுபவர்கள் அனைவரும் ஜூன் 15 2007 முன் பின் என்று தான் பிரிப்பார்கள். காரணம் அன்று தான் சிவாஜி திரைப்படம் வெளியான நாள்.
ஷங்கருடன் இந்தியன் வாய்ப்பை ரஜினி மிஸ் செய்த போதும் சிறிது கவலை பட்ட தமிழ் சினிமா, முதல்வன் வாய்ப்பும் விடுபட்ட பின்னர் துடித்து தான் போனது. ஷங்கருடன் எப்போது ரஜினி கை கோர்ப்பார் என காத்துகொண்டு இருந்தது.
அப்போது தான் சந்திரமுகியின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ஷங்கருடன் கைகோர்க்கிறார் ரஜினி என்ற அந்த முத்தாய்ப்பான செய்தி வந்தது. கருப்புப்பண ஒழிப்பு எனும் கதையில் இவர்கள் இணைந்ததால் எதிர்பார்ப்பும் எகிறியது !!!
கருப்பு பணம் என்பது சினிமாவில் கரைபுரண்டு ஓடும் என்பது ஒரு பெரும் குற்றச்சாட்டு. அதை மாற்றும் விதமாக, தனியாரிடம் கடன் வாங்காமல், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் முறையாக கடன் பெற்று படத்தை துவங்கினர். ரஜினி அவர்களும் வெறும் ரூ.1,001/- ஐ மட்டும் முன்பணமாக பெற்று படத்தில் வரும் லாபத்தில் மட்டும் பங்கு கொடுங்கள் என கூறி படத்தின் பட்ஜெட்டை பெரும் அளவுக்கு குறைத்தார்.
பிரமாண்ட இயக்குனர் ஷங்கருடன் பிரமாண்ட ஏ வி எம் நிறுவனமும் காய் கோர்த்ததால், அப்போதைய மிக பெரிய பட்ஜெட் படமாக சிவாஜி அமைந்தது. அவ்வளவு பெரிய பட்ஜெட்டை எப்படி வசூல் செய்வது ? ரஜினி படத்திற்கு வசூலில் குறை இருக்காது... ஆனால் பெரும் பட்ஜெட் என்பதால் வசூல் வந்து கொண்டே இருந்தாலும், முழு பணமும் வருவதற்குள் வட்டி ஏறி விடுமே?
ஆதனால் தான் படக்குழு ஒரு அதிரடி முடிவில் இறங்கியது. ஒரு ஊரில் 1 தியேட்டரில் ரிலீஸ் செய்து 200 நாள் ஓடுவதை விட, ஒரு ஊரில் அனைத்து தியேட்டரிலும் ரிலீஸ் செய்து 50 நாள் ஓடினால் ??
அதே தான் சிவாஜி படமும் செய்தது. அனைத்து தியேட்டரிலும் ரஜினி படம் என்பதால் அணைத்து மக்களும் உடனடியாக பார்க்க ஆர்வதுடன் திரையரங்கிற்கு படையெடுத்தனர். பெண்கள் பால் குடம் தூசாகுவது போன்ற ரஜினி படத்துக்கே உரித்தான விஷயங்களும் அரங்கேறின...
குறைந்த நாட்கள் ஓடினாலே வசூலை அள்ளிவிடலாம் என்ற ரீதியில் வெளியான சிவாஜி படம், 175 நாட்கள் ஓடியதால் மூலம் வசூலில் புதிய உச்சத்தை தொட்டது. அப்போதைய ரெக்கார்டுகளை சல்லி சல்லியாக நொறுக்கிய இப்படத்தின் வசூலை அடுத்த பத்து வருடங்களில் இரண்டு படம் தான் முறியடித்தது..... எந்திரன் மற்றும் கபாலி....
தமிழ் சினிமாவின் இந்திய அடையாளமாய் இருந்த ரஜினி, இப்படத்தின் மூலம் உலகம் எங்கிலும் கோலிவுட்டின் அடையாளமாய் மாறினார். UK வில் டாப் 10 weekend collection இல் இப்படமும் இடம் பெற்றது தமிழ் நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டியது !!!
இதன் பிறகே விஜய் அஜித் சூரிய பிற நடிகர்களால் தங்களது எல்லையை இந்திய அளவில் விரிவாக்கம் செய்ய முடிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தியாவின் முதல் 100 கோடி வசூல் படம் ஹிந்தி கஜினியா அல்லது சிவாஜியா என்ற விவாதம் இன்று வரை தொடர்ந்து வருகிறது... சிவாஜியின் போஸ் ஆபீஸ் ருத்ரதாண்டவம் நாம் அறிந்து இருந்தாலும் நம்மூரில் பல இடங்களில் முறையான வாசொல் கணக்குகள் பராமரிக்கப்படுவதில்லை.
இப்போது வரை பி மற்றும் சி சென்டர்களின் வசூல் நிலவரங்கள் ட்ராக்கர்கள் என சிலர் நிர்ணையிப்பதை வைத்தே நம்பப்படுகிறது. வெளிப்படையான கோல்லேச்டின் ரிப்போர்ட் இருக்கும் சென்டர்களான சென்னை பிற நகரங்களில் சிவாஜியின் வாசொல் வேட்டையை வைத்தே அதன் ஒட்டுமொத்த வசூல் கணக்கிடப்படுகிறது.
இது உலகம் முழுதும் பறந்து விரிந்த தமிழ் சினிமாவிற்கு நல்லதல்ல. எதிர்கால தமிழ் சினிமாவின் தரம் உயர வெளிப்படை தன்மை மிக அவசியம். எந்த ஒரு தமிழ் சினிமா ரசிகனின் ஆசையும் அதுவே !!!
- விக்னேஷ் செல்வராஜ்.
|