பிரபல தமிழ் பாடகரான மலேசியா வாசுதேவன் பல பேர் இசையில் பாடியிருக்கிறார். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் இசையமைப்பாளர் வி.குமாரில் ஆரம்பித்து இசைஞானி இளையராஜா, எம் எஸ் வி, குன்னக்குடி வைத்தியநாதன், தேனிசை தென்றல் தேவா, இசைப்புயல் ஏ ஆர் ரகுமான், வித்யாசாகர் போன்ற இசையமைப்பாளர்களுக்கு பாடியிருக்கிறார். இவருக்கு யுகேந்திரன், பிரசாந்தினி மற்றும் பவித்ரா என மூன்று குழந்தைகள் உள்ளனர்.
யுகேந்திரன் தனது அப்பாவின் 76வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக 75 இயர்ஸ் ஆப் மலேசியா வாசுதேவன்னு ஒரு ட்ரிபுயூட் பன்க்ஷன் திட்டமிட்டு இருந்தார். ஆனால் லாக் டவுன் காரணமாக இந்த நிகழ்ச்சி பண்ண முடியாமல் போய்விட்டது. அதனால் நிகழ்ச்சி மாதிரி இல்லாமல் ஒரு ஆன்லைன் லைவ் ப்ரோக்ராம் ஒன்னு நடத்தி முடித்தார்கள். இந்த லைவ் ப்ரோக்ராமில் சிங்கப்பூர் மற்றும் மலேசியா ல இருந்து சிங்கர்ஸ் ,இசையமைப்பாளர்கள் என்று பல பேர் கலந்து கொண்டார்கள்.
இதில் மிகவும் சிறப்பான விஷயம் என்னவென்றால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தோட வாய்ஸ் நோட் தான். மலேசியா வாசுதேவன் அவர்களுடைய குரல் நம்ம சூப்பர் ஸ்டார்க்கு ரொம்ப பொருத்தம்னு நம்ம எல்லார்க்கும் தெரியும். அதில் குறிப்பிடும் படி சொல்லவேண்டும் என்றால், படிக்காதவன் படத்தில இருந்து சொல்லி அடிப்பேனடி, அடுத்த வாரிசுல இருண்டு ஆசை நூறுவகை, முரட்டு காளைல இருந்து பொதுவாக என் மனசு தங்கம் மாவீரன் படத்துல இருந்து வாங்கடா வாங்க, காளி படத்துல இருந்து அடி ஆடு இந்த மாதிரி பல பாடல்கள் பாடியிருக்கார். சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவரோட வாய்ஸ் நோட்ல அவர் நல்ல மனிதர் பாடகர், நடிகர் மற்றும் என் நெருங்கிய நண்பர்னு சொல்லியிருக்கிறார். அவரோட கடைசி காலத்துல அவர் என்ன பாக்கணும்னு ஆசைபட்டார், மலேசியா வாசுதேவனோட பேரும் புகழும் என்றும் நிலைத்து இருக்கும்னு சொல்லி அவரோட குடும்பத்துக்கு வாழ்த்து சொல்லியிருக்கிறார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
|