எதிரிகள் சொல்வது போல் இவர் கலைதுறையில் உச்சமா இருக்கலாம் ஆனா அரசியலுக்கு புதுசு...எந்த பின்பலம் இல்லாம ஒரு சாதாரண துணை நடிகனா இருந்து கொண்டு மெல்ல மெல்ல வளர்ந்து, தனக்கென்ன ஒரு தனித்துவத்தை ஏற்படுத்தி கொண்டு தமிழகத்தில் மூலை முடக்கலாம் மக்கள் மனதில் வீட்டில் ஒருவனாக திகழ்ந்து தமிழை உலகறிய பங்கெடுத்தாலும், சூப்பர் ஸ்டாராக ஆனாலும் அரசியலில் என்ன செய்தார்???
1980 களில் ஆரம்பித்து இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுத்தாலும், ஈழ தமிழர்கள் வாழும் முகாம்களுக்கு மறைமுகமா, protocol படி உதவி செய்தும், கோயம்புத்தூர் குண்டுவெடிப்பின் போது இஸ்லாமியர்களுக்காக முதன் முதலில் குரல் கொடுத்தாலும், காவேரி, ஹொககெனக்கல் பிரச்சனைகளில் பகிரங்கமாக கர்நாடகவை எதிர்த்து குரல் கொடுத்தாலும், மேலும் பல பிரச்சனைகளுக்கு தன் சொந்த பணத்தில் உதவிகளை செய்து ஆதரவை தெரிவித்து வந்தாலும் அவருக்கு ஒரு ரசிகராவே இருந்தேன்..
பின்னர் அரசியலுக்கு வருவேன் என்று தீர்க்கமாக சொல்லி நடக்கும் பிரச்சனைகளில் தன் கருத்துகளை கூறி வந்தார். ஆனால் சமீப காலமா நடக்கும் பிரச்சனைகளில் அவர் கருத்தை இங்க உள்ள தேச பிரிவினைவாத சக்திகள், கட்சிகளின் கட்டுபாட்டில் இருக்கும் மீடியாக்கள் திரித்து சொல்ல பட்டனவையா இருந்தாலும்...
ஒரு மனிதன் இவ்வளவு பேரும் புகழுடன் உச்சத்தில் இருந்து கொண்டு, இங்கே இப்ப இருக்கும் மொழி, மதம், இனம் பிரிவினைவாதிகள் குரல்கள் ஓங்கி இருப்பதை தெரிந்து கொண்டும், எதிர் கட்சிகளின் கட்டுபாட்டில் இருக்கும் அனைத்து மீடியாக்களும் சொன்னதை திரிச்சி சொல்லும் என்பதை தெரிந்து கொண்டும், தன் கருத்தால் எதிர்வினை ஆக்கி தன் பேர், புகழை கெடுக்க முயற்சிப்பார்கள் என்று தெரிந்தும், தான் இவ்வளவு ஆண்டுகளாக உழைச்சு சேர்த்து வச்ச பேரை கெடுக்க பார்பார்கள் என்பதை தெரிந்தும், தான் அரசியலுக்கு வராமல் இருந்தால் இங்க இருக்கும் கட்சிகளை தன்னை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் என தெரிந்தும் எவனுக்கும் அஞ்சாமல், கெஞ்சாமல், தளராமல்...
மக்களுக்காக மக்கள் நலனுக்காக, வன்முறையில் இருந்து மக்களை மீட்க, பொய்யான, உசுப்பேத்தி வெறுப்பு அரசியல் செய்யும் அரசியல்வாதிகளிடம் இருந்து நாட்டை பாதுகாக்க உண்மையை உரக்க சொல்லும் இந்த மனிதனை பார்த்து இப்படி தன் பெயரை கெடுத்துகிறாரே என்று நான் ரசிகனாக கோபபட்டாலும், ஆதங்கபட்டாலும்..
ஒரு குடிமகனா, ஒரு தேசியவாதியா, ஒரு மொழி பற்று உள்ளவனா,இப்படி மதம் பேதம் பார்க்காத (சும்மா பேச்சிலோ, பேஸ்புக்கிலோ மட்டும் இல்லாம வாழ்க்கையில் கடைபிடிக்கும்) ஒரு நடுநிலையாளனா...
இந்த மனிதன் தான் இக்காலத்தில் தமிழகத்திற்கு தேவையான தலை சிறந்த தலைவர் என்று சாதாரண ரசிகன் என்ற அடையாளத்தை தூக்கி எறிய முடிவெடுத்து தொண்டனாக மாற முடிவெடுத்தாச்சு...
1967 தமிழகத்திற்கான முதல் Check point காமராஜர தோற்க்கடித்து வருத்த பட்ட காலம் அதே போல் 2021 தமிழகத்திற்கான அடுத்த Check point. இழந்த நேர்மையான, உண்மையான சமூக நீதிக்கான, உண்மையான சாதி, மதம் சார்பற்ற அரசியல் மீட்டெடுக்க ஒரு வாய்ப்பு. கடவுள் இருக்காரா என்பது தெரியாது ஆனா இந்த இயற்கை சக்தியில் உண்மை, நியாயம் , தர்மத்திற்கு மதிப்பு இருக்குமேயானால் இவர் வெற்றி உறுதி. இவர் வென்றாலும் வரலாறு, தோல்வி அடைந்தாலும் வரலாறு.
- விமல்
|