#27YearsOfUzhaippali
படம் பற்றிய பதிவல்ல! ரஜினி எனும் நடிகனைச் சுற்றி பல ஆண்டுகளாக பின்னப்பட்டு வரும் சூழ்ச்சி வலைகளின் சிறிய தொகுப்பும், பட வெளியீட்டின் பொழுது நடைபெற்ற சில சம்பவங்களின் தொகுப்பும்...
1. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு விஜயா கம்பைன்ஸ் படத் தயாரிப்பில் இறங்க முடிவு செய்து தொடங்கிய படம்
2. படத்தின் பூஜை தொடங்கும் முன்னரே படத்தின் செலவைக் கட்டுக்குள் வைக்க நடிகர்கள் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டுமென்ற கோரிக்கை அதிகமானது.
3. அப்போது திரைப்பட விநியோகிஸ்த்தர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த திரு. சிந்தாமணி முருகேசன் ஒரு பேட்டியில் "தமிழ்த் திரையுலகை அழிவிலிருந்து காக்க உதவுமாறு முதல்வர் ஜெ.விடம் கோரிக்கை வைத்தோம். முதல்வர் திரையுலகிலிருந்து வந்தவர்... எங்களிடம் நடிகர்களின் சம்பளத்தை குறைத்தாலே பெருமளவில் செலவைக் குறைக்கலாமே என்றார். இனி நடிகர்களுக்கான சம்பளம் கட்டுக்குள் வைக்கப்படும் எனக் கூறியிருந்தார்.
(ரஜினியைக் குறி வைத்துத்தான் காய்கள் நகர்த்தப்படுகின்றன என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்)
4. இதுப் பற்றி விவாதிக்க நடந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த ரஜினி கூறியதின் சாராம்சம் : நடிகர்கள் ரேஸ் குதிரைகளைப் போன்றவர்கள். மார்க்கெட் இருக்கும் வரைதான் அவர்கள் நிலைத்து நிற்க முடியும். சம்பளத்தை குறைத்துக் கொள்ள முடியாது" எனச் சொல்லிவிட்டுக் கிளம்பிச் சென்று விட்டார்.
5. விநியோகஸ்த்தர்கள் சங்கம் ரஜினிக்கு "ரெட் கார்ட்" விதித்தது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற "உழைப்பாளி" படத்தின் பூஜையில் தமிழ்த் திரையுலகம் கூடியது.
6. பட வெளியிட்டீன் போது நடைபெற்ற கொண்டாட்டங்களை இன்றைய வாட்ஸப் தலைமுறையினரால் உணர்ந்து கொள்ள முடியாது.
7. எம்ஜிஆர், சிவாஜி போன்ற ஜாம்பவான்களுக்குக் கூட கிடைக்காத பெரும் பேற்றினை திரு. நாகிரெட்டி ரஜினிக்கு வழங்கினார் . 101 சவரன் பொற்காசுகள்.
தயாரிப்பாளர் முதல் திரையரங்கு உரிமையாளர்கள் வரையிலான நலன் கருதும் உச்சநட்சத்திரத்துக்கு அவர் அளித்த கெளரவம்.
2008-10ம் வருடத்திற்குப் பிறகு ரஜினி ரசிகர்களானவர்களுக்கு இது புதிதாக இருக்கலாம். ஆனால், தொடக்கத்திலிருந்து ரஜினியைத் தொடர்ந்து வரும் ரசிகனுக்கும் ரஜினிக்கும் இது புதிதல்ல. இப்போது வதந்தீகள், பொறாமை கொள்பவர்களின் எண்ணிகை கூடியள்ளது, விஞ்ஞான வளர்ச்சியில் விரைவில் பரவுகின்றது... அது மட்டுமே வித்தியாசம்!
இணையம், மொபைல் இல்லாத காலத்தில் மொத்தமாக கூடிய ரஜினி ரசிகர்களின் வேகமும் வீரியமும் இனி வரும் காலங்களில் நடிகர்களுக்கு அமைவது மிகக் கடினமே!
- Ram Swami
|