Related Articles
என் வானிலே ஒரே வெண்ணிலா - ஜானி
வேட்டையன் வெற்றிக் கொண்டாட்டம்.. தன் கையால் பிரியாணி பரிமாறிய ஞானவேல் மற்றும் ரித்திகா சிங்
Vettaiyan smashes box office crosses Rs 240 crore globally
வேட்டையன் விமர்சனம் : ரஜினியின் மாஸ் + ஞானவேலின் மெசேஜ் ... குறி தப்பாத வேட்டையன்
வேட்டையன் பட ரிலீஸ்... ரசிகர்கள் மலர்களை ரஜினி போஸ்டர் மீது தூவியும், வெடி வெடித்தும் கொண்டாட்டம்
வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் 52 நிமிடம் பேசிய தலைவர் ரஜினி
மலேசியா வாசுதேவனின் AI-குரலில் வேட்டையன் முதல் சிங்கிள் மனசிலாயோ பாட்டுக்கு தலைவர் பட்டையைக் கிளப்புகிறார்
Rajinikanth is the Most Purest Person - Tamannaah Bhatia
ரஜினி பற்றி 50 மணி நேரம் பேச்சு.. உலக சாதனை படைத்த ஆர்.ஜே.விக்னேஷ்
வேட்டையன் அக்டோபர் 10 ரிலீஸ்... வேட்டையனுக்கு வழிவிட்ட கங்குவா

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2024 2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
கூலி படத்தின் சிக்கிட்டு கிலிம்ஸி - செம்ம வைப் மூடில் டான்ஸில் தெறிக்கவிட்ட தலைவர்!
(Thursday, 12th December 2024)

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் அப்டேட் இன்று (டிசம்பர் 12) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்த் நடிப்பில், கூலி என்ற படத்தை இயக்கி வருகிறார். 40 வருட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தின் மூலம் நடிகர் சத்யராஜ் – ரஜினிகாந்த் கூட்டணி இணைந்துள்ளதால் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதேபோல் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார்.மேலும் மலையாள சினிமாவில் இருந்து சௌபின், கன்னட சினிமாவில் இருந்து உபேந்திரா, தெலுங்கில் இருந்து நாகர்ஜூனா ஆகியோர் கூலி படத்தில் இணைந்துள்ள நிலையில், தங்க கடத்தலை மையமாக வைத்து இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டைட்டில் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில், அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் நடித்து வரும் நடிகர் நடிகைகளின் கேரக்டர் பெயர்கள் வெளியிடப்பட்டது. இதில் சௌபின் தயால் என்ற கேரக்டரிலும், நாகர்ஜூனா சைமன் கேரக்டரிலும், ஸ்ருதிஹாசன் ப்ரீத்தி என்ற கேரக்டரிலும், சத்யராஜ் ராஜசேகரன் என்ற கேரக்டரிலும், உபேந்திரா காலீஷா என்ற கேரக்டரிலும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில் ரஜினிகாந்த் ரஜினிகாந்த் தேவா என்ற கேரக்டரில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே, இன்று (டிசம்பர் 12) ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு, கூலி படத்தின் அப்டேட் மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்த நிலையில், இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 

இதனிடையே தற்போது படத்தில் இருந்து 57 வினாடி கொண்ட சிக்கிட்டு வைப் என்ற பாடலின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோ பதிவு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

எல்லாம் "சிக்கிட்டு வைப்" பாடலின் தாளத்தில் நடனமாடி, ரஜினிகாந்த் போல நடனமாடிய வீடியோக்களை டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துகொண்டு பரவலாக ஸ்மிரிஷ் செய்யின்றனர்!






 
0 Comment(s)Views: 600

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information