சூரியை பாராட்டிய ரஜினிகாந்த் – மேடையில் ரஜினி போல பேசிய சூரி
நடிகர் சூரியின் சமீபத்திய திரைப்படமான ‘மண்டாடி’ படத்தை பார்த்த ரஜினிகாந்த், சூரிக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். இந்த தகவலை சூரி சமூக வலைதளத்தில் பகிர்ந்து, ரஜினியின் வார்த்தைகள் தனக்கும் படக்குழுவினருக்கும் மிகப்பெரிய ஆசீர்வாதம் என்று கூறியிருந்தார்.
இதனை ‘மண்டாடி’ வெற்றிவிழாவில் பகிர்ந்துகொண்ட சூரி, ரஜினிகாந்தின் குரல் மற்றும் பேச்சு பாணியை அப்படியே நகலெடுத்து, ரஜினி தன்னிடம் பேசிய விதத்தை மேடையில் நடித்துக் காட்டினார்.
“சூரி எப்படி? எப்படி? எப்படி? ரொம்ப ரொம்ப நல்லா இருக்குல…” என்று ரஜினி கேட்டதாக சூரி ரஜினி பாணியில் பேசியது விழாவில் கலகலப்பை ஏற்படுத்தியது.
மேலும், படம் முழுவதையும் தான் எழுந்திருக்காமல் பார்த்ததாகவும், சூரி மற்றும் முழு படக்குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்ததாகவும் ரஜினி கூறியதாக சூரி தெரிவித்தார்.
ரஜினியின் பாராட்டை மிகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்த சூரிக்கு, இந்த தொலைபேசி அழைப்பு தனது திரைப்பயணத்தில் மறக்க முடியாத தருணமாக அமைந்துள்ளது.