நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 21 ஜூலை 2001 அன்று காலமானார். இந்திய சினிமா பிரமுகர்களும் ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர்.
நடிகர் சிவாஜி கணேசனின் இறுதி ஊர்வலம் சென்னை தி.நகர் செளத் போக் ரோட்டில் உள்ள அவரது இல்லத்திலிருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டலாரியில் அவரது உடல் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது.
இறுதி ஊர்வலத்தில் திரையுலமும் ஆயிரக்கணக்கான ரசிகர்களும் நடந்து சென்றனர்.
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், சத்யராஜ், பாரதிராஜா மற்றும் பல சினிமா காரர்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். கூட்டம் மிக அதிக அளவில் இருப்பதால் மிக மெதுவாகவே இறுதி யாத்திரை நடந்து வருகிறது.
ரஜினி யார் இறுதி ஊர்வலத்திலும் கலந்துகொண்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
|