கேள்வி: உங்கள் பூர்வீகமான கிருஷ்ணகிரியில் உள்ள நாச்சிக்குப்பத்தில் உங்கள் தாய் தந்தைக்கு நினைவிடம் அமைப்பீர்களா?
ரஜினி: (இதைக் கேட்டதும் ஒரு நிமிடம் ரசிகர்களை புன்முறுவலுடன் பார்த்த ரஜினி, இந்தக் கேள்வியைக் கேட்ட ரசிகர் யார் எனக் கேட்க, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கார்த்திக் என்ற ரசிகர் எழுந்து கைத் தூக்கினார். அவரைப் பாராட்டினார் ரஜினி) ஒரு நல்ல விஷயத்தைக் கூறினீர்கள். அது பற்றி யோசிப்பேன்.
-சமீபத்திய ரசிகர் மன்ற நிர்வாகிகள் சந்திப்பின் போது இந்த ஒரு கேள்விக்கு இரண்டு வரிகளில் ரஜினி சொன்ன பதில், இப்போது அந்த ஊருக்கு நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுத் தந்துள்ளது.
மேலும் சமீபத்தில் ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா அவர்கள் அந்த ஊருக்கு வந்துபோனது அந்த ஊர் மக்களை உற்சாகமடைய வைத்துள்ளது.
தை மாதம் இந்த ஊரில் தலைவரின் தாய் தந்தைக்கு நினைவிடம் அமைக்கும் பணி துவங்கக் கூடும் என்ற சத்யநாராயணாவின் வார்த்தைகள், நாச்சிக் குப்பத்தை நிரந்தர சுற்றுலாத் தலமாக்கிவிடும் என நம்புகிறார்கள் அந்தப் பகுதி மக்கள்.
இதோ அதுகுறித்த செய்தி:
-சங்கநாதன்
|