Related Articles
100 Years of Indian Cinema Celebrations
Rajinikanth Backs Vishwaroopam, Appeals to Muslim Groups
நான் அரசியலுக்கு வந்தால் என்வழி தனிவழி!! ப சிதம்பரம் புத்தக வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டாï
12 12 12 ரசிகர்கள் நடத்திய விழாவில் கலந்துகொண்ட ரஜினி - மனதில் உள்ளதை கொட்டித் தீர்த்தார்!
சிவாஜி 3D 12.12.2012 அன்று வெளியாகிறது
2012 ஆம் ஆண்டில் ரஜினி கலந்து கொண்ட சில நிகழ்வுகள் - பகுதி 2
தமிழக முதல்வர் தலைமையேற்ற எம்.எஸ்.வி அவர்களின் பாராட்டு விழாவில் ரஜினி
சிவாஜி 3D ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார்!
கும்கி இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டாரின் உரையும் அது உணர்த்தும் பாடங்களும்!
2012 ஆம் ஆண்டில் ரஜினி கலந்து கொண்ட சில நிகழ்வுகள்

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
2013 ஆம் ஆண்டில் ரஜினி கலந்து கொண்ட சில நிகழ்வுகள்
(Friday, 4th October 2013)

Superstar Rajinikanth at 16 Vayathinelle Trailer Launch

4 October 2013

 

 

உலகம் உள்ளவரை வாலியின் தமிழ் வாழும்! -  ரஜினி அஞ்சலி!

19 July 2013

சூப்பர் ஸ்டாருக்கு விஜய் விருது அழைப்பிதழ்!

8 May 2013

ஆண்டுதோறும் நடக்கும் விஜய் விருதுகள் நிகழ்ச்சிக்கு இந்த முறை வித்தியாசமாக அழைப்பிதழை வடிவமைத்துள்ளனர்.  விவிஐபி மற்றும் விருதுக்குப் பரிசீலிக்கப்படுவர்களின் புகைப்படங்களை பெரிய ஓவியங்களாக வரைந்து அவற்றை சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கி வருகின்றனர். ஐரோப்பிய மன்னர்களின் கெட்டப்பில் இந்த ஓவியங்களை வரைந்துள்ளார் ஓவியர் ஏபி ஸ்ரீதர்.

சூப்பர் ஸ்டார் ரஜினியையும் இதுபோல வரைந்து அழைப்பிதழ் கொடுத்துள்ளனர் விஜய் டிவி நிர்வாகிகள். இன்று ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தபோது எடுத்த படம் இது.

 

Rajini paid tribute to late Actress Manjula Vijay Kumar 

24 July 2013

 

 

மறைந்த பத்திரிகை அதிபர் சிவந்தி ஆதித்தன் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி

20 April2013

 

இலங்கைக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டம்: சூப்பர் ஸ்டார் ரஜினி

2 April 2013

 

 

 

 

 

 

 

 

 

கோச்சடையான் டப்பிங்கில் சூப்பர் ஸ்டார் ரஜினி! – ஸ்பெஷல் படம்

28 March 2013

கோச்சடையான் – தி லெஜன்ட் டப்பிங் பணிகள் படுவேகமாக நடந்து வருகின்றன. சூப்பர் ஸ்டார் ரஜினியும் இதில் பங்கேற்று தனக்கே உரிய வேகத்தில் பாதிப் படத்துக்கு ஒரே நாளில் டப்பிங் பேசி முடித்துவிட்டார்.

இது தொடர்பாக நேற்று இரு படங்களை சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி வெளியிட்டிருந்தார். இன்று இன்னொரு புகைப்படத்தை படத்தின் இயக்குநர் சௌந்தர்யா வெளியிட்டுள்ளார்.

கோச்சடையான் காட்சிகளை ரஜினி பார்த்து ரசித்து சிரிப்பது அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளது. ரஜினியுடன் இயக்குநர் கே எஸ் ரவிக்குமாரும் சௌந்தர்யாவும் படத்தில் உள்ளனர்.

இதுகுறித்து தனது ட்விட்டரில் சௌந்தர்யா தெரிவித்துள்ளதாவது:

“Hey guys.. Dubbing progressing in good pace. Appa completed first half in a day :) our thalaivar rocks!!! Hectic work in all departments!!!”

 

Sanjay Dutt celebrated Pongal in Tamil Nadu and also met Rajinikanth (23 January 2013)

Rajinikanth disturbed over verdict on Sanjay Dutt (23 March 2013)

 

தந்தையை இழந்த மோகன் பாபுவை ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் சூப்பர் ஸ்டார் ரஜினி​

18 February 2013

 

ரசிகரின் திருமணத்தில் பங்கேற்று ஆசி வழங்கிய சூப்பர் ஸ்டார் – சிறப்புப் படங்கள்

15 Feb 2013

 

ஒழுங்காக வரி செலுத்தாதவர்களை தண்டிக்க சட்டங்களைக் கடுமையாக்க வேண்டும்! – ரஜினி

7 January 2013


சென்னை: கறுப்புப் பணம் ஒழிய வேண்டும். அதற்கு இப்போதுள்ள வரிகளை சரியாகக் கட்டாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டங்களைக் கடுமையாக்குங்கள், திரையுலகினருக்கு விதிக்கப்பட்டுள்ள சேவை வரியை திரும்பப் பெறுங்கள், என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

தமிழ் திரையுலகினர் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 12.36 சதவீத சேவை வரிக்கு எதிராக இன்று வள்ளுவர் கோட்டம் எதிரில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். இன்று தமிழகத்தில் திரைப்படக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திரையுலகின் அனைத்துப் பணிகளும் இன்று ஒரு நாள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினி, இரண்டு மணிநேரம் மேடையில் அமர்ந்திருந்தார். பின்னர் அவர் பேசுகையில், “கறுப்புப் பணத்தை வெளியில் கொண்டுவர, மத்திய அரசு பெரிய பெரிய திட்டங்களைப் போடும்போது, வரிகளை மேலும் மேலும் உயர்த்துகிறது. ஆனால் இப்படிச் செய்வதால் கறுப்பு பணம்தான் அதிகரிக்கும் என்பது அரசுக்கு தெரியாததல்ல.

கறுப்புப் பணத்தை ஒழிக்க, வரி செலுத்தாதவர்களை தண்டிக்க கடுமையான சட்டங்களைக் கொண்டு வந்தாலே, அரசுக்கு நிறைய பணம் வரும். அதே நேரம், இந்த கோரிக்கைகளை ஏற்று சேவை வரியை திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்,” என்றார்.

 

புகைப்பழக்கத்தைக் கைவிட்ட ரசிகர்களை நேரில் பாராட்டிய சூப்பர் ஸ்டார்!

1 January 2013

சென்னை: புத்தாண்டையொட்டி புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்ட ரசிகர்களையும் உடல் உறுப்பு தானம் செய்தவர்களையும் ரஜினி சந்தித்துப் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினி, அவர்களுக்கு தனது பாராட்டுகளையும் வாழ்த்தையும் தெரிவித்தார்.

கடந்த மாதம் 12-ந்தேதி தனது பிறந்த நாளையொட்டி ரசிகர்களை ரஜினி சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார். பின்னர் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்த பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசும்போது, “புகைப் பிடிக்கும் பழக்கம் இருந்ததால் தனது உடல் நலம் பாதித்தது என்றும், சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ள ரசிகர்கள் அதனை கைவிட வேண்டும்,” என்றும் கேட்டுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து புகைப் பழக்கத்தை பலரும் கைவிட்டனர் இதையடுத்து ஏராளமான ரசிகர்கள் சிகரெட் பழக்கத்தை கைவிட்டனர்.

சைதாப்பேட்டையில் மன்ற நிர்வாகி சைதை ரவி தலைமையில் ரசிகர்கள் சிகரெட் பாக்கெட்டுகளை எரித்தனர். பொன்னேரி பகுதியில் பொன்னேரி சேகர் தலைமையில் ரசிகர்கள் சிகரெட் பழக்கத்தை கைவிட வற்புறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினார்கள்.

இந்த நிலையில் பிறந்த நாள் விழாவை சிறப்பாக நடத்திய ரசிகர்களை ராகவேந்திரா மண்டபத்தில் நேரில் சந்தித்து அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார் ரஜினி. அப்போது தலைவர் ரஜினியிடம் தாங்கள் புகைப் பழக்கத்தைக் கைவிட்டது குறித்து தெரிவித்த ரசிகர்கள், ரஜினிக்கு புத்தாண்டு வாழ்த்து கூறினர்.

சூப்பர் ஸ்டாரிடம் ரசிகர்கள் கூறும்போது, “தினமும் ஆறு பாக்கெட் சிகரெட் பிடிப்போம் தலைவா… உங்கள் அறிவுரையை ஏற்று அப்பழக்கத்தை விட்டுவிட்டோம். இதனால் தினமும் ரூ. 300 வரை மிச்சமாகிறது. குடும்பத்தினர் சந்தோஷப்படுகிறார்கள்”,என்றனர்.

ரொம்ப மகிழ்ச்சி என்று கூறிய ரஜினி, இதைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.

பின்னர் 20 ரசிகர்கள் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்து பத்திரங்களை ரஜினியிடம் வழங்கினார்கள். அதை அவர் பெற்றுக் கொண்டார்.

இந்த சந்திப்பின்போது, ரசிகர் மன்ற நிர்வாகிகள் என்.ராம்தாஸ், ஆர்.சூர்யா, கே.ரவி, சூளைமேடு ஆர்.ரவிச்சந்திரன், ரஜினி ஆனந்தன், ரஜினி சுகுமார், ரஜினி டில்லி, எழில்அரசு, சைதை ஜி.ரவி, சைதை ஆர்.முருகன், சூளைமேடு கோ.சம்பத்குமார், ரஜினி கேசவன், ஜி.மணி, டி.முருகன், ரஜினி பித்தன், பன்னீர்செல்வம், பி.செல்வம், ஜி.எஸ்.ஸ்ரீகாந்த், டி.தாமஸ், நியூஸ் பேப்பர் சீனு, சண்முக பாண்டியன், டி.சுந்தர் ஆகியோர் ரஜினியை சந்தித்தார்கள்.

புத்தாண்டையொட்டி தமிழ்நாடு முழுவதும் மேலும் நூற்றுக்கணக்கான ரஜினி ரசிகர்கள் இன்று முதல் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டுவிட்டதாக அறிவித்துள்ளனர்.

 

 

 






 
0 Comment(s)Views: 490

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information