ரஜினி நடிக்கும் குசேலன் படப்பிடிப்பு, சென்னையில் பிப்ரவரி 15-ந் தேதி தொடங்குகிறது.
தமிழ்-தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் படம் தயாராகிறது. தெலுங்கு படத்தில், ரஜினிகாந்த் நண்பராக ஜெகபதி பாபு நடிக்கிறார்.
இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடி இல்லை என்றாலும், அவர் நடிகராக வருகிற காட்சிகளில், அவருடன் ஒரு பிரபல கதாநாயகிபங்குபெறுகிறார். பசுபதியின் மனைவியாக நடிக்க, இந்தி நடிகை தபுவிடம் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
ரஜினி இப்போது இமயமலையில், ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, பிப்ரவரி 14-ந் தேதி சென்னை திரும்புகிறார்.
மறுநாள் (பிப்ரவரி 15-ந் தேதி), குசேலன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்குகிறது.
மம்முட்டி நடித்த வேடத்தில் ரஜினிகாந்த் நடிப்பது பற்றி..
கத பறயும் போல் படத்தின் வெற்றிக்கு அந்த படத்தின் கதையும், கதாபாத்திரங்களும்தான் முக்கிய காரணம். இளமை பருவத்தில் ஏழையாக இருந்து, கஷ்டப்பட்டு சினிமாவில் புகுந்து, படிப்படியாக முன்னேறி, சூப்பர்ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்ந்த நடிகராக நான் நடித்து இருந்தேன்.
இந்த கதாபாத்திரத்துக்கு என்னைவிட, ரஜினிகாந்த் மிக பொருத்தமாக இருப்பார். சொந்த வாழ்க்கையில், நான் வசதியான குடும்பத்தை சேர்ந்தவன். வக்கீல் தொழில் செய்து கை நிறைய சம்பாதித்து இருக்கிறேன். ஆனால் ரஜினிகாந்த் நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்தவர். ரொம்ப கஷ்டப்பட்டு திரைப்பட கல்லூரியில் படித்து, ஒரு சின்ன வேடத்தில் சினிமாவில் அறிமுகமாகி, அவருடைய கடின உழைப்பால் சூப்பர்ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்ந்தவர்.
எனவே என்னைவிட, ரஜினிகாந்த்தான் அந்த வேடத்துக்கு பொருத்தமானவர். மலையாள படத்தைப்போல் தமிழ் படமும் மிகப்பெரிய வெற்றியை பெறும்.
- மம்முட்டி
|