ஈழத் தமிழர்கள் துன்புறும் வேளையில் என் பிறந்தநாளைக் கொண்டாடாதீர்கள் என அறிவித்த தலைவர், பின்னர் ரசிகர்களின் ஏற்பாடுகளை அறிந்து, நலப் பணிகள் மற்றும் உதவிகள் வழங்குவதற்கு மட்டும் அனுமதி அளித்திருந்தார்.
இந்த ஒன்று போதாதா... அமைதியாக, ஆனால் பார்த்த மற்ற பொறாமைக்காரர்களுக்கும், ‘ரஜினி அரசியலுக்கு வந்துவிடக் கூடாதே’ என்று கடவுளை வேண்டிக் கொண்டிருக்கும் சில கட்சிக்காரர்களுக்கும் உள்காய்ச்சல் வருமளவுக்கு கலக்கிவிட்டார்கள்.
12-ம் தேதி ஒரு தேசியத் தலைவரின் பிறந்த தினமாக பார்க்கப்பட்டது. பார்க்குமிடமெல்லாம் தலைவரின் புகழ் பாடும் போஸ்டர்கள், கட் அவுட்டுகள், வினைல் போர்டுகள்...
‘என்னய்யா… ரஜினி வேணாம்னு சொன்ன பிறகும் இவ்வளவு அமர்க்களம் பண்றாங்கன்னா... அவர் ஒண்ணும் சொல்லாம விட்டிருந்தா தீபாவளியை விட அதகளம் பண்ணியிருப்பாங்களே...’ என எதிர் முகாம்களில் இருப்பவர்கள் கேட்குமளவு, ரசிகர்கள் சிறப்பான ஏற்பாடுகளை பல மாவட்டங்களிலும் செய்திருந்தார்கள். அவற்றைப் பற்றி ஒவ்வொன்றாக இங்கே தர இருக்கிறோம்.
குறிப்பாக திருப்பூர் நகர தலைமை மன்றம் மற்றும் இதர கிளை மன்றங்கள் இணைந்து, நகரின் பல பகுதிகளில் கட்அவுட்டுகள், பேனர்கள், பிரமாண்ட போர்டுகள் வைத்து அந்தப் பகுதி மக்களையே அதிசயிக்க வைத்திருந்தனர்.
வாழும் எம்ஜிஆருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
இன்றே சொல்... நன்றே நடக்கும்
எங்கள் குல தெய்வமே ஆணையிடு
எங்கள் ஐயனே ஆணையிடு
எதற்கும் அஞ்சா சிங்கக் கூட்டம் சார்பில் எங்கள் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
-இப்படி பேனர்களின் வாசகங்கள், எளிமையாக ஆனால் மக்கள் மனதை ஊடுருவும் வகையில் அமைந்திருந்தன.
ரஜினி பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி காலை 9 மணிக்கு திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே ஸ்ரீசுந்தரமூர்த்தி விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. வந்திருந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
திருப்பூர் தலைமை மன்றத்தின் நிர்வாகிகள் எம்.ரவிக்குமார், எம்.சந்திரமோகன், டி.ராஜ்குமார், ஆர் சந்திரன் உள்ளிட்ட திருப்பூர் மாவட்ட மன்ற நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
இங்கே தரப்பட்டுள்ள திருப்பூர் மன்ற பேனர்களையும், போஸ்டர்களையும் பாருங்கள்... நமது நண்பர்களின் ‘தரம்’ தெரியும்... நமது ரசிகர்களுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம் புரியும்!!
-எஸ்.சங்கர்
படங்கள் ஏற்பாடு: டி.ஜவஹர்
|