ரகசிய ஏஜென்ட் ரஜினி - ஒரு அட்டகாச காமிக்ஸ்!
ஹாலிவுட்டில் பிரபல ஹீரோக்களை மைய்யப்படுத்தி காமிக்ஸ் புத்தகங்கள் இப்போதும் கூட வருகின்றன. இதற்கென நிறைய இணைய தளங்களும் கூட உள்ளன.
ஆனால் இந்திய திரையுலகில் அப்படி எதுவும் பெரிய அளவில் இல்லை.
ஷாஹென்ஸா, ஹம் போன்ற படங்கள் வந்த காலத்தில் இந்தியில் அமிதாப் பச்சனை மையப்படுத்தி சில காமிக்ஸ் கதைகள் வந்துள்ளன.
ஆனால் தமிழில் ரஜினிக்கு மட்டுமே காமிக்ஸ் கதைகள் வந்துள்ளன. ராணி காமிக்ஸ் மற்றும் பூந்தளிர் போன்ற இதழ்களில் அத்தகைய கதைகள் வந்துள்ளதாக நமது நண்பரும் (சக நிருபர்தான் அவரும்...)ரஜினியின் தீவிர ரசிகர்களில் ஒருவருமான திரு. முருகேசன் தெரிவித்தார்.
இணையத்தில் அப்படி அவர் பார்த்த ஒரு காமிக்ஸ் கதையை நமக்கு அனுப்பி உதவினார். உண்மையிலேயே மிக அசத்தலாக இருந்தது அந்த 6 பக்க சிறிய கதை. ரஜினியின் ஒரு விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சியைப் பார்த்த நிறைவைத் தந்தது. ரஜினியின் உருவத்தை அந்த ஓவியர் வரைந்திருந்த விதமும் அருமையாக இருந்தது.
கதையைப் படியுங்கள்... உங்கள் கருத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள். முடிந்தால் நீங்களும் இதுபோன்ற காமிக்ஸ் கதைகளை உருவாக்கும் முயற்சிகளில் இறங்குங்கள்!
-சங்கநாதன்





