ஸ்ரீதேவி திருமணம்...தலைவர் வாழ்த்து!
சூப்பர் ஸ்டார் ரஜினியின் நலம் விரும்பிகளுள் ஒருவரான நடிகர் விஜயகுமார் - மஞ்சுளாவின் மகள் ஸ்ரீதேவிக்கும், நிஜாமாபாத்தைச் சேர்ந்த நரசிம்மராவ்-உமா தம்பதியரின் மகன் ராகுலுக்கும் இன்று காலை சென்னையில் திருமணம் நடந்தது.
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸில் நடந்த இந்த திருமணத்துக்கு காலை 7.30 மணிக்கே மனைவி லதாவுடன் வந்தார் ரஜினி.
புதுமணத் தம்பதிகளை ஆசீர்வதித்த ரஜினி, அவர்களுக்கு தனது பரிசுப் பொருட்களையும் வழங்கினார்.
-சங்கநாதன்


