ஒவ்வொரு படம் வெளிவரும் போதும் அதற்கு ரசிகர்கள் அவர்கள் விருப்பத்திற்கேற்ப Fan Made Posters,Teaser என்று அவர்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதைப் பார்த்துள்ளோம்.
அதில் ரஜினி ரசிகர்கள் பல படி மேலே என்றே சொல்லலாம்.
கபாலி சமயத்தில் ரசிகர்கள் வெளியிட்ட fan made poster பார்த்து, இதை விட எப்படி அதிகாரபூர்வமாகக் கொடுப்பார்கள் என்று சந்தேகப்படும் அளவுக்கு அசத்தலாகத் தங்கள் கற்பனைகளில் உருவாக்கினார்கள்.
2.0 படத்தில் ரசிகர்களின் போஸ்டர்களை லைக்கா நிறுவனமே பெருமிதத்தோடு பகிர்ந்தது நினைவிருக்கலாம்.
ஆனால் இப்போது ஒரு முழுநீள படமே Fan Made படமாக வந்து இருக்கிறது...
First Look, Teaser என அனைத்திலும் ஹைப் ஏற்றி வைத்து இருந்தாலும், இது ஒரு மாஸான தலைவர் படம் என்ற எண்ணம் இருந்தது.
ஆனால் சென்சார் கட்ஸ் பற்றிய விவரம் வந்ததும், இது "வேற லெவல்", "வெறித்தனமான" தலைவர் படம் என ஒரு Hint கிடைத்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்பு தாறுமாறாக எகிறி இருந்தது.
இது போதாதென்று ஒரு அனல் தெறிக்கும் காட்சியும் லீக் ஆகி விட்டது. அது வெறித்தனமாக இருந்தாலும், முன்னரே லீக் ஆகி விட்டதே , அப்போ ட்ரைலரில் வேறு ஏதும் இருக்காதோ என்றே ஒரு லேசான பயம் !!!
கூடவே போலி ட்ராக்கர்கள் , வயித்தெரிச்சல் பேர்வழிகள், எப்போடா இவர் கீழே விழுவார் என எதிர்பார்க்கும் ஓநாய்கள்…
அத்தனைக்கும் சேர்த்து ஒரு நியூ இயர் விருந்தாகக் கொடுத்தார் நமது கார்த்திக் சுப்பராஜ் அவர்கள் !!!
எங்க சார் இருந்தீங்க இவ்வளவு நாளா !!! அநேகமாக ரசிகர்கள் எதிர்பார்ப்பதை ஒவ்வொரு ரஜினி ரசிகரிடம் இருந்தும் நீங்கள் சேகரித்து இருக்க வேண்டும் .
இல்லையென்றால் கிளாஸ் , மாஸ், நடிப்பு, ஸ்டைல், சிரிப்பு, கோவம், முடி கோதும் அழகு, காதல், துப்பாக்கி சுடுவது, சின்ன டான்ஸ் என ஒவ்வொரு ரசிகனும் ரசிக்கும் விதவிதமான அனைத்தையும் ஒரே ட்ரைலரில் கொண்டு வருவது சாத்தியமே இல்லை.
வெற்றிகரமாகத் தலைவர் இதில் ஹாஸ்டல் வார்டன் தான் எனத் தெரிவித்த கார்த்திக், 3 விதமான டைட்டில் கார்டை வைத்து தலைவருக்கு இரண்டு வேடமா இல்லை மூன்று வேடமா என்ற ஒரு விவாதத்தைக் கிளப்பி விட்டு விட்டார்.
பேட்ட படத்தின் முக்கிய அம்சம் அதன் நட்சத்திர பட்டாளம். ரஜினி எதிர்ப்பாளர்கள் அனைவரும் ஒவ்வொரு நடிகரின் பெயரை சொல்லி, அவர்களுக்காகப் பார்ப்பேன் எனக் கூறிக்கொண்டு திரிகிறார்கள். (ஆனால் அந்த நட்சத்திரங்கள் அனைவரும் தலைவர் வெறியர்கள் என்பது வேறு கதை !!!)
மிகப் பெரிய நட்சத்திர பட்டாளம் இருக்கும் போது அவர்களுக்குத் தேவையான Screen Presence கொடுப்பது என்பது மிகவும் சவாலான விஷயம்.
ஆனால் அத்தனைக் கதாபாத்திரத்தையும் அந்த ட்ரைலரில் புகுத்தி அதே சமயம் அந்த trailor முழுக்கத் தலைவரையும் ரஜினியிஸத்தையும் பரவ விட்டு... Wahhh !! Whatteyyy Feel !!!
பொதுவாக மற்ற படங்களைப் பார்க்கும் போது சில காட்சிகளில் ஏதாவது ஒரு ரஜினி படம் நமது நினைவிற்கு வரும்... ஆனால் இந்த ட்ரைலரில் ஒவ்வொரு காட்சியும், ஒவ்வொரு நொடியும், ஏன் ஒவ்வொரு Frame மும் ஒரு தலைவர் படத்தை நினைவூட்டுகிறது.
துப்பாக்கியை கையில் சுழற்றும் ஸ்டைல், அய்யயோ நான் கண்ண தொறந்தே வெச்சிக்கிறேன் என்று கூறும் காதலுடன் கூடிய பாவம், Stylea Naturally என்ற அந்தக் குறும்புத்தனம், ட்ரொவுசரோட ஓட விடுவேன் என்ற நக்கலுடன் கூடிய கோவம், கொலை காண்டுல இருக்கேன் என்ற ஆக்ரோஷம், தரமான சம்பவம் என்று கூறும் வெறி, சீரியசான நேரத்தில் ஸ்வீட் சாப்பிடலாம் எனக் கூறும் அந்தப் பஞ்ச், Last But Not Least அந்த முறுக்கு மீசையுடன் நடனமாடும் அந்தத் துள்ளல்.... போதும் கார்த்தி, திகட்ட திகட்ட நாங்கள் விரும்பிய அந்த ரஜினியிஸத்தை விருந்தாகப் படைத்தது விட்டீர்கள்... இதற்கு மேல் நாங்கள் என்ன கேட்க போகிறோம்....
என்ன தான் ஹாலிவுட் தரத்தில் தலைவரை கண்டு களித்தாலும், நம்ப ஊரு Style ல ஊரு தர லோக்கல் படம் வேணும் இல்லையா !!!
கிளாஸ் மாஸ் எனச் சில எலிமெண்ட்ஸ் உடன் கபாலி காலா எனத் தலைவர் கலக்கி இருந்தாலும் 'ஏதோ ஒன்று குறைகிறது' என்ற உணர்வு அனைத்து தலைவர் ரசிகரிடமும் இருந்தது....
அந்தத் தொலைந்து போன "ரஜினியை" திரும்பக் கொண்டு வந்ததிலேயே வென்று விட்டீர்கள்!
தலைவரின் முழு மாஸ், அந்த வெறித்தனத்தை முழுமையாக உணர ; அனுபவிக்கக் கபாலி காலாபோன்ற ஒரு கிளாஸ் இடைவேளை தேவை பட்டது உண்மை தான்.
இல்லையென்றால் இது பத்தோடு பதினோராவது ரஜினி படமாகப் போயிருக்கவும் வாய்ப்புள்ளது.... ஆனால் இப்போது "இது தான் ரஜினி" படம் எனச் சொல்லும் அளவிற்குக் கார்த்திக் சுப்பாராஜ் அவர்ளுக்குக் காலம் பொன்னான வாய்ப்பை வழங்கியது..
கபாலி நேரத்தில் இந்த வாய்ப்பு நழுவியபோது கண்டிப்பாகக் கார்த்திக் வருந்தி இருப்பார்.. ஆனால் இப்போது இத்தனை தலைவர் ரசிகர்களின் வாழ்த்துக்குச் சொந்தக்காரர் ஆகி இருக்கிறார் !!!!
போதாக்குறைக்கு இப்போது haters யையும் திடீர் ரஜினி ரசிகன் ஆக்கி விட்டு இருக்கிறார்.
வருடங்களுக்கு முன்னர் ரஜினியை எப்படித் தான் மக்கள் ரசிக்கிறார்களோ எனக் கிண்டலாக ட்வீட் செய்தவர் கூட இவர் தன இவர் மட்டும் தான் சூப்பர் ஸ்டார் எனச் சொல்ல வைத்து விட்டீர்கள்.
எவ்வளவு பெரிய வெற்றியை அடைந்தாலும் சூப்பர் ஸ்டாரை "தலைவர்" என்றே அழைக்கும் உங்கள் நல்ல மனதிற்கு எப்போதும் தலைவரின் ரசிகர்கள் ஆதரவு உண்டு.
கடைசியாக.... நாங்கள் தான் அடுத்தச் சூப்பர் ஸ்டார்... ரஜினியை முந்திட்டோம் டாவ்வ்வ் எனக் கூவும் கூட்டத்திற்கு..... கொலை காண்டுல இருக்கோம்.... அப்புடியே ஓடி போய்டுங்க !!!
பொங்கலுக்குப் பேட்ட பராக் !!!
- விக்னேஷ் செல்வராஜ்
|