திமுகவிற்கு பாய்ந்தோடிய முன்னாள் ரஜினி மக்கள் மன்ற கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் மதியழகனுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
கட்சியே இல்லாத ரஜினியின் மன்றத்தில் இருந்து வருபவரை, 70 வருட பழமை மிக்க கட்சியின் தலைவர் வரவேற்கிறார். இதை விட தலைவரின் ஆளுமையை யாரால் புரியவைக்க முடியும்.
நன்றி மதியழகன் அவர்களே!
பணம், பதவி ஆசை பிடித்தவர்கள் என் கிட்டயே வர கூடாது என்ற தலைவரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, திமுகவிற்கு தாவியதற்கு நன்றிகள்.
நீங்கள் சொல்லலாம், உங்களுக்கு மரியாதை கொடுக்கவில்லை, அதனால் விலகி விட்டேன் என்று. ஆனால் அந்த பதில் தான் உங்கள் மீதான வெறுப்பை அதிகமாக்குகிறது.
உங்களுக்கு ஒரு சின்ன நினைவூட்டல். இளவரசன் அவர்களால் நீக்கப்பட்ட நிர்வாகிகள், கொந்தளித்த போது எவ்வாறு செயல்பட்டார்கள் என நினைவு இருக்கிறதா ?
அப்போது அவர்களது கோவம் கூட, தலைவருக்கு தெரியாமல் தவறு நடக்கிறதோ என்று தானே தவிர, தலைவர் மீதல்ல.
என்னுடைய ஒப்புதலோடு தான் நீக்கம் செய்தார்கள் என தலைவர் கூறிய பின்பு நடந்தது நினைவிருக்கிறதா?
'நீங்கள் நீக்கினீர்கள் என்றால் நாங்கள் முழுமையாக கட்டுப்படுகிறோம்', 'நீங்கள் நீக்கும் அளவிற்கு தவறாக நடந்து கொண்டதற்கு மன்னித்து விடுங்கள் தலைவா' என அவரது வீட்டிற்கு சென்று கட்டி பிடித்து அழுதனர்.
இது தான் உண்மையான ரஜினி ரசிகனின் பாசம், தலைவர் மீதான மரியாதை.
அப்படி மரியாதை மட்டும் தான் உங்கள் குறையாக இருந்தால், மன்றத்தில் இருந்து விலகி மட்டும் தான் இருப்பீர்கள். திமுகவில் இணைந்த போதே அதில் உங்கள் சுயநலம் இருப்பது அப்பட்டமாகி விட்டது.
ஒன்றை நினைவூட்ட விழைகிறேன். நீங்கள் மதியழகனாக திமுகவில் சேர்ந்து இருந்தால் லோக்கல் சேனல் கூட சீண்டி இருக்காது.
கிருஷ்ணகிரி RMM மா.செ வாக சென்றதால் தான் இன்று தலைப்பு செய்தியாக உள்ளீர்கள். அந்த அடையாளத்தை உங்களுக்கு தந்தது ரஜினி.
நீங்கள் ஆயிரக்கணக்கான உறுப்பினர்களை மக்கள் மன்றத்தில் இணைத்து விட்டதாக பெருமை கொள்ள தேவை இல்லை.
உங்களுக்கு முகஸ்துதி பாடுபவர்கள் வேண்டுமானால் உங்களுக்காக இணைந்து இருக்கலாம். ஆனால் 99 சதவிகித மக்கள் மன்ற உறுப்பினர்கள் ரஜினி என்ற ஒற்றை சொல்லுக்காக தான் இணைந்தார்கள்.
உங்கள் இணைப்புக்கு ஸ்டாலின் அவர்களே வந்து இருந்தது, உங்களின் கடந்த கால வரலாற்று சாதனைகளுக்காக இல்லை. ரஜினியின் கூடாரத்தில் இருந்து வந்துள்ளீர்கள். அவ்வளவு தான்.
கட்சியே ஆரம்பிக்காமல் இருந்தாலும் உங்களுக்கு 70 வருட வரலாறு கொண்ட கட்சி மரியாதை அளித்ததற்கு காரணம் ரஜினி !! ஆனால் நீங்கள் சொல்லும் காரணம் உங்களுக்கு இங்கே மரியாதை இல்லை என்று !! வேடிக்கை !!
தலைவரின் மன்றத்தில் இருந்து இல்லாமல் நீங்கள் அங்கே சென்றிருந்தால் உன்ளளுக்கு யார் மரியாதை கொடுத்திருப்பார்களோ ?? அது உங்களுக்கே வெளிச்சம்
மற்ற கட்சிகளுக்கு ஒன்றை கூற விரும்புகிறேன். தலைவர் நினைத்தால் இது போல நடந்து கொள்ள முடியும் ஆனால், இந்த கேவலமான அரசியலுக்கு ஒரு மாற்றம் வேண்டும் என்று தான் அவர் களம் காண்கிறார்.
75 வருட முரசொலி வரலாற்றில் எத்தனை முறை மன்னிப்பு கேட்டுள்ளது திமுக ? நல்ல உள்ளங்களை புண்படுத்தியதாக உங்களை மன்னிப்பு கேக்க வைத்த அவருக்கு, அந்த நல்ல உள்ளங்களை தன் பக்கம் இழுக்க எவ்வளவு நேரம் ஆகும் ?
பாராளுமன்ற தேர்தலிலாவது மக்கள் நம்பிக்கையை பெற பாருங்கள்.
மதியழகன் அவர்களே! தலைவர் பாராளுமன்ற தேர்தலை புறக்கணித்ததால் கூட உங்களுக்கு ஏமாற்றம் இருந்திருக்கலாம்.
தவறில்லை. ஆனால் தலைவரின் அரசியல் பிரவேசத்திற்கு 25 வருடங்கள் பொறுத்து இருந்த (தலைவரின் ரசிகன் என்று சொல்லிக்கொள்ளும்) நீங்கள், இன்னொரு ஒன்றரை வருடம் பொறுமையாக இருக்க முடியாதது உங்கள் நம்பகத்தன்மையை கேலிக்கூத்தாக்குகிறது.
இருக்கும் அரசியலில் மாற்றம் வேண்டும் என்று எண்ணுபவர்கள் தான் RMM இல் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆனால், அதில் ஒரு உயர்ந்த பொறுப்பில் இருக்கும் நீங்கள் சுயநலத்திற்காக கட்சி தாவி இருக்கிறீர்கள்.
அங்கே போய் காமராஜர் போலவா தூய்மையாக இருப்பீர்கள் ...?
நீங்கள் போனது எங்களை பொறுத்த வரை சமுத்திரத்தில் ஒரு குடம் நீர் போனதற்கு சமம். உங்களின் இடத்திற்கு உங்களைவிட திறமையான 1000 பேரை தலைவரால் நியமிக்க முடியும் .
ஆனால், மீண்டும் ஒரு மதியழகனை நியமிக்க கூடாது என தலைவருக்கு உணர்த்தியதற்கு நன்றி !!!
பரவாயில்லை, ஆனது ஆகட்டும். அங்கேயாவது உண்மையா இருங்க சார் !!
- விக்னேஷ் செல்வராஜ்
|