1979 ஆம் ஆண்டு ரஜினியை ராமாவரம் தோட்டத்திற்கு அழைத்து எம்.ஜி.ஆர் அடித்ததாக சமூக வலைதளங்களில் அண்மை காலமாக பரப்பப்படும் தகவலுக்கு எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளர் கே.பி.ராமகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரிடம் 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகம் தொடங்கி அரசியல் களம் வரை மெய்க்காப்பாளராக இருந்தவர் சண்டைக் கலைஞரான கே.பி.ராமகிருஷ்ணன். பல படங்களில் எம்.ஜி.ஆருக்கு டூப் போட்டு சண்டை போட்டுள்ள இவர், எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வந்த பின் அவரது நிழலாக பாதுகாப்புப் பணியை மேற்கொண்டவர்.
கடந்த 1979 ஆம் ஆண்டு ரஜினியை எம்.ஜி.ஆர் ராமாவரம் தோட்டத்திற்கு அழைத்து அடித்ததாக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவல் தவறானது என்றும் ஒரு போதும் எம்.ஜி.ஆர் ரஜினியை அடிக்கவில்லை என்று சுட்டிக்காட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்
அதே நேரத்தில் கோவையில் நடந்த கட்சிக் கூட்டத்தில் நெருக்கடியைப் பயன்படுத்தி பெண் தொண்டரிடம் சில்மிஷம் செய்த நபர் ஒருவரை எம்.ஜி.ஆர் அடித்த நிகழ்வையும் கே.பி. ராமகிருஷ்ணன் சுட்டிக்காட்டி உள்ளார்
ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்த நாள் முதல், சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக பல்வேறு விதமான கருத்து தாக்குதல்கள் தொடர்ந்து வருவது குறிப்பிடதக்கது.
Courtesy : Polimer News
|