ரஜினிக்கு எதுக்குப்பா அரசியல் எல்லாம்? - இது பொதுவாக நம்மூரில் தங்களைத் தாங்களே அறிவாளிகள் என நினைத்துக்கொண்டு இருக்கும் நபர்கள் கேட்பது.
அதே ரஜினி தான் அனைத்து விஷயத்திற்கும் கருத்து சொல்ல வேண்டும் என இவர்களும் துடிப்பார்கள்.
ஒன்று இதுவரை கருத்துச் சொன்னவர்கள் ஒன்றும் கிழிக்கவில்லையென ஏற்றுக்கொள்ள வேண்டும்.... இல்லை ரஜினியின் கருத்துக்கு மட்டும் தான் இங்கே மதிப்பு இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
சரி ரஜினியின் கருத்துக்கு மட்டும் ஏன் மதிப்பு இருக்கிறது? அவர் கேட்டைத் திறந்தாலே அது ஏன் தலைப்புச் செய்தி ஆகிறது?
காரணம் இரண்டு... ஒன்று, அவருக்கு எதற்குப் பேச வேண்டும் என்பது தெரியும். இரண்டு, பிரச்னையைத் தீர்வு நோக்கி அழைத்துச் செல்லத் தெரியும். ஒரு உண்மையான தலைவனுக்குத் தேவையான குணமும் அதுவே.
ரஜினி நினைத்து இருந்தால் வேறொரு கட்சியைப் போல ஜாதி பெயரைக் குறிப்பிட்டு, உணர்ச்சிகளைத் தூண்டி விட்டுத் தன்னுடைய பொலிடிகல் மைலேஜை ஏற்றிக் கொண்டு இருக்கலாம் !!!
ரஜினி நினைத்து இருந்தால் ஈ பாஸ் விண்ணப்பித்துக் கேமரா மேன் கொண்டு 20 பேர் புடைசூழ சாத்தான்குளம் சென்று இருக்கலாம்.
ரஜினி நினைத்து இருந்தால் மக்களின் உணர்ச்சியை ஏகமனதாகத் தூண்டி விட்டு ஒரு சிக்கலான சூழல் உருவாக்கி அரசுக்கு நெருக்கடி கொடுத்து இருக்கலாம்.
ஆனால் அவர் இதை எதுவும் செய்யவில்லை.
ஏனென்றால் அவர் ரஜினி !!!
முதலில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.
பாதிக்கப்பட்டோருக்கு முதல் தேவை அதுவே.
அடுத்து அக்காவலர்கள் சட்டத்திற்கு முன் நிற்கும் போது கூட, உணராது நடந்து கொண்டதை கடுமையாகக் கண்டிக்கிறார்.
பிறகு ஒரே ஒரு வரியில் '#சத்தியமா_விடவே_கூடாது' எனக் கூறி ஒட்டு மொத்த பிரச்சனையில் தன் நிலைப்பாடு என்னவென்று விளக்குகிறார்.
இது தானே தலைமைக்கு அழகு!
எதிர் கட்சி தலைவர் எடுத்தோம் கவிழ்த்தோம் என ஒரு கருத்து சொல்கிறார். அதில் ஒட்டு மொத்த காவல் துறையையே குற்றம் சொல்கிறார்..... அவரின் கூட்டணி கட்சியின் ட்விட்டர் கணக்கில் இறந்தோரின் ஜாதி பெயரைக் குறிப்பிடுகிறார்கள்.
இதையெல்லாம் தலைமைக்கான அழகு என நினைத்துக்கொண்டு இருக்கிறார்களா?!
ரஜினிக்கும் இப்படித் தாம் தூம் எனக் கருத்து சொல்லத் தெரியும். ஆனால் அவர் ஒரு பக்குவப்பட்ட அரசியல்வாதியாகத் தன்னை நிலை நிறுத்தப் பார்க்கிறார்.
தன் மூலமாக ஒரு நல்ல அரசியல் தொடங்கப்பட வேண்டும் என எதிர் பார்க்கிறார்... அதனால் தான் பொறுமையாக முன்வைக்கிறார்.....
அவர் அவரது வேலையில் கவனமாக இருக்கிறார்.... மாற அரசியல்வாதிகளும் பொறுப்புணர்ந்து செயலாற்ற வேண்டிய நேரமிது.... வீணாகப் பழைய ரஜினியை இழுக்காதீர்கள்... தாங்க மாட்டீங்க !!!
- விக்னேஷ் செல்வராஜ்.
|