தலைவரின் அலப்பறை… மாஸ் காட்டும் ஜெயிலர் Hukum பாடல்!
(Tuesday, 18th July 2023)
நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் செகண்ட் சிங்கிள் தற்போது வெளியாகி சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. ஹுக்கும் தலைப்பில் வெளியான லிரிக்கல் வீடியோவில் ரஜினி கொல மாஸாக இருக்கிறார்.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக இந்த பாடலை பட குழு சமூக வலைதளங்களில் வெளியிட்டு ட்ரெண்டாக்கி உள்ளனர். இந்த பாடல் முழுவதும் ரஜினி கெத்தா அவருக்கே உரித்தான ஸ்டைலில் அலப்பறை செய்திருக்கிறார். பேக்ரவுண்டில் சிறைச் சிறைச்சாலையில் துப்பாக்கி, கத்தியுடன் தலைவர் பூந்து விளையாடுகிறார்.
இந்தப் பாடலில் ரஜினியின் மேனரிஸத்தை ரொம்பவே சிலாகித்து எழுதியிருக்கிறார் பாடலாசிரியர் சூப்பர் சுபு. அனிருத் குரலில் அலப்பறையாக ஒலிக்கிறது ‘அலப்பற கெளப்புறோம்’ பாடல். அனிருத்தின் துள்ளல் இசைக்கு கேட்கவா வேண்டும்? ரசிகர்கள் கொண்டாடித் தீர்க்கிறார்கள். ஏற்கனவே வெளிவந்த ஃபர்ஸ்ட் சிங்கிள் - காவாலா பாடலில் தமன்னா பெயரைத் தட்டிச் சென்ற நிலையில், இந்த ஹுக்கும் பாடல் ரஜினி ரசிகர்களின் பசிக்கு செம தீனியாக இருக்கிறது.
ஜெயிலர் படத்தின் செகண்ட் சிங்கிள் இதோ!
பாடல் வரிகள்
அலப்பறை கிளப்புறோம்.. **தா பாரு டா
கலவரம் எறங்குனா **தா டாரு டா
நிலவரம் புரியுதா.. உக்காருடா..