முதலாண்டிற்கான மருத்துவ கல்வித் தொகையை www.rajinifans.com ஏற்றுக்கொண்டது (2004)
இன்னொரு இனிய மாலைப்பொழுது. மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருக்கும் ஏழை மாணவனை தத்தெடுக்கும் தளபதி சத்தியநாராயணாவின் சமூகப் பணிக்கு தம்மாலான ஒரு உதவியை செய்து மூன்றாமாண்டில் அடியெடுத்து வைத்தது www.rajinifans.com.
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் தாண்டவராயபுரத்தில் ஏழைக்குடும்பத்தில் பிறந்த திரு. ஆர். சுப்ரமணி ஆரம்பப்பள்ளியிலிருந்தே முதல் மாணவனாக தேர்ச்சி பெற்று வந்திருக்கிறார். பொதுத் தேர்வில் மட்டுமல்லாமல் மருத்துவ கல்விக்கான நுழைவுத்தேர்விலும் சிறப்பான முறையில் தேர்ச்சி பெற்று 300க்கு 294.73 மார்க்குகள் பெற்று திருச்சி கே.ஏ.பி. அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து ஆகஸ்ட் மாதம் சேர்ந்து படித்து வருகிறார். (A.R. No. 1522; Entrance Exam No. 3731668; Ref.No.:1188/SCSI(2)/2004 issued by Selection Committee Directorate of Medical Education, Chennai-10 Dated 8.8.2004)
தளபதி வகுத்துக் கொடுத்த திட்டத்தின் படி முதலாண்டிற்கான கல்வித் தொகையை www.rajinifans.com ஏற்றுக்கொண்டு அதற்கான தொகையாக Rs.9720/- மாணவனின் பெற்றோரிடம் 30th August 2004 அன்று வழங்கப்பட்டது. இரண்டாமாண்டிற்கான கல்வி உதவித் தொகை, சூப்பர் ஸ்டார் அவர்களாலும் மற்ற ஆண்டிற்கான கல்வி உதவித் தொகைகள் அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றத்தின் சார்பாக வழங்கப்படும்.
மாணவனுக்கு நம்முடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளும் நேரத்தில் இத்தகையதொரு நல்ல பணிக்காக நம்முடன் தொடர்பு கொண்டது மட்டுமல்லாமல் முதலாண்டிற்கான கல்வி உதவித் தொகையை வழங்குமாறு கேட்டுக்கொண்டு எல்லாவற்றிலும் நம்மை முன்னிலைப்படுத்திய தளபதி சத்தியநாராயணா அவர்களுக்கும், தேவையான தகவல்களை சேகரித்துக்கொடுத்த ஆத்தூர் நகர ஒன்றிய தலைமை ரஜினிகாந்த் நற்பணி மன்றத்தார்களுக்கும், உதவித்தொகையை தாங்களாகவே முன்வந்து கொடுத்த www.rajinifans.com அங்கத்தினர்களுக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
|