சினிமா தொழிலாளர்களின் அகில இந்திய 9 வது மாநில மாநாடு சென்னையில் துவங்கி நடைபெற்றுவருகிறது. காலை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் மாநாட்டு நிகழ்ச்சிகளை மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன், நடிகர் கமல்ஹாசன், பிரபல ஹிந்தி நடிகர் ராஜேஷ் கண்ணா, பெப்சி தலைவர் வி.சி.குகநாதன், தாசரி நாராயண ராவ் ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி
மாலை நேரு உள்விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற மாநாட்டு நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதிக்கு உலக கலை படைப்பாளி விருது வழங்கப்பட்டது. கே.பால்ச்சண்டர் வரவேற்று பேசினார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், ராஜேஷ் கண்ணா, நாகார்ஜுனா, மம்மூட்டி உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.
சூப்பர் ஸ்டார் குறைந்த நேரம் பேசினாலும் வழக்கம் போல தனது பொருள் செறிந்த பேச்சால் அசத்திவிட்டார். விழாவில் பேசிய பெப்சி நிர்வாகிகள் முதல்வருக்கு பெப்சி தொழிலாளர்களுக்கு நிலம் ஒதுக்குவது தொடர்பாக கோரிக்கை வைத்தனர்.
சூப்பர் ஸ்டார் வழக்கம்போல அசத்தலாக தனது பேச்சை துவக்கினார்.
“இங்கு பேசிய பெரும்பாலானவர்கள் தொழிலாளர்களுக்கு நிலம் ஒதுக்குவது தொடர்பாக கோரிக்கை வைத்தனர். ஆனால் இதற்க்கு முன்பு ஜெயலளித்த அவர்கள் முதல்வராக இருந்தபோது இத்தே பெப்சி மாநாடு ஒன்று நடைபெற்றது. அப்போதும் இதே போன்று கோரிக்கை வைத்தீர்கள். அவர்களும் உடனே செய்வதாக சொன்னார்கள். ஆனால் நீங்கள் அங்கு வேண்டாம்.. இங்கு வேண்டாம்… என்று அவர்கள் ஒதுக்குவதாக கூறிய இடத்தை எல்லாம் தட்டிகழித்துவிட்டீர்கள். இப்போ அந்த இடங்களின் விலை எங்கோ சென்றுவிட்டது. அப்பொழுதே நீங்கள் வாங்கிக்கொண்டிருந்திருக்க வேண்டும். இப்பொழுதாவது முதல்வர் கொடுப்பதை உடனே ஏற்றுக்கொள்ளுங்கள்.”
“அப்புறம் இது தொழிலாளர்கள் மாநாடு என்பதால் ஒரு விஷயத்தை கூற ஆசைப்படுகிறேன். தான் சம்பாதிக்கும் லாபத்தை மொத்தமும் தனக்கே எடுத்துக்கொள்ளும் முதலாளி அயோக்கியன். 75% தனக்கு எடுத்துக்கொண்டு 25% தொழிலாளர்களுக்கு கொடுப்பவன் கொள்ளைக்காரன். 50% தனக்கு எடுத்துக்கொண்டு 50% கொடுப்பவன் தான் நாணயஸ்தன். அவர்களை அந்த ஆண்டவன் சந்தோஷமாக வைத்துக்கொள்வான். நூறு சதவீதத்தையும் யாராலும் கொடுக்கமுடியாது. அது அந்த ஆண்டவனால் மட்டுமே முடியும். நீங்கள் உங்கள் தொழிலாளர்களுக்கு 50 சதவீதத்தையாவது கொடுங்கள். சந்தோஷமாக இருப்பீர்கள்.”
(இந்த உரை விபரத்தை அந்த விழாவிற்கு சென்ற என் நண்பர்களிடம் கேட்டு அவர்கள் கூறியதை வைத்து அளித்திருக்கிறேன். இது என் வீட்டில் பணி முடிந்து வந்து நான் எழுதுவது. நான் நேரடியாக கேட்டு எழுதுவதல்ல. கொஞ்சம் முன்னே பின்னே இருக்கலாம். ஆனால் பேசிய ESSENCE இது தான்.)
முதல்வர் கருணாநிதி பேசுகையில், பெப்சி தொழிலாளர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதாக பலத்த கரகோஷத்துக்கிடையே அறிவித்தார். முதல்வர் மேலும் பேசுகையில், “ரஜினி கமல் இருவரையும் எனக்கு கடந்து 35 ஆண்டுகளுக்கும் மேலாக தெரியும். இருவரும் எனது இரு கண்களைப் போன்றவர்கள். இப்படி சொல்வதால் மற்றவர்கள் தவறாக நினைக்கவேண்டாம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு அவயம் தான்.” என்றார்.
|