24 November 2011
இன்று மாலை வெளியான செய்து இது. ராணா படத்திற்கு முன்பாக ஒரு 3D படத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்கவிருக்கிறார். இது போன்று ஒரு படம் வரக்கூடும் என்பதை சௌந்தர்யா சில வாரங்களுக்கு முன்பே விகடன் பேட்டியில் கூறியது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக ஈராஸ் நிறுவனமும், சௌந்தர்யா அஸ்வினும் வெளியிட்டுள்ள அறிக்கை விபரம்:
24 November 2011
சூப்பர் ஸ்டார் ‘ராணா’ படத்திற்கு முன்பு ஒரு புதிய பரிமாணத்தில் நடிக்கவிருக்கும் 3D படம் ‘கோச்சடையான்.’
இது இந்தியாவில் தயாராகும் நடிப்பை பதிவிறக்கம் செய்யும் முதல் 3D படம் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகத்திலேயே அதிக வசூலை வாரிக் குவித்த ஜேம்ஸ் காமரூன் இயக்கத்தில் வெளியான ‘அவதார்’ மற்றும் தற்போது ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘டின் டின்’ திரைப்படம் ஆகியவை இதே தொழில்நுட்பத்தில் தயாரானவை என்பது குறிப்பிடத்தக்கது.
சரித்திரப் பின்னணியில் தயாராகும் இப்படத்தின் கதை, திரைக்கதை, டைரக்ஷன் மேற்ப்பார்வை ஆகிய பொறுப்புக்களை கே.எஸ்.ரவிக்குமார் ஏற்றுள்ளார்.
இப்படத்தை ஈராஸ் நிறுவனத்துடன் இணைந்து மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தினர் தயாரிக்கின்றனர்.
இப்படத்தின் இயக்குனர் பொறுப்பை ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா அஸ்வின் ஏற்றுள்ளார். ஆகஸ்ட் 2012 இல் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கி நடக்கவிருக்கிறது.
கொச்சடையானை தொடர்ந்து ரஜினி ராணா படத்தில் நடிப்பார் என ஈராஸ் நிறுவனமும், சௌந்தர்யா அஸ்வினும் கூட்டாக தெரிவித்தனர்.
‘கோச்சடையான்’ - அதிகாரப்பூர்வ புகைப்படம் + முதல் பார்வை!
5 February 2012
‘கோச்சடையான்’ பாடல் ரெக்கார்ட்டிங்கில் சூப்பர் ஸ்டார்!
15 March 2012
‘கோச்சடையான்’ எல்லைகளை கடந்து சாதனை படைத்து உலக சினிமாவில் புதிய சரித்திரம் படைக்கும்! தயாரிப்பாளர்கள் நம்பிக்கை!!
31 March 2012
‘கோச்சடையான்’.. என்ன நடக்குது? எப்போ ரிலீஸ்? – சூப்பர் ஃபைன் அப்டேட்!
21 June 2012
‘கோச்சடையான்’ இசை உரிமையை தட்டிச் சென்ற சோனி மியூசிக் நிறுவனம் கூறுவதென்ன?
19 August 2012
ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் ‘கோச்சடையான்’ ஆடியோவின் உரிமையை சோனி நிறுவனம் தட்டிச் சென்றுள்ளது. (இது தொடர்பாக கடந்த சில நாட்கள் முன்பாகவே நமது டுவிட்டரில் தெரிவித்திருந்தோம்.).
உலகம் முழுதும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு படத்தின் ஆடியோ உரிமையை பெற்றதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்
இந்த டீல் குறித்து சோனி மியூசிக் நிறுவனத்தின் மார்கெடிங் பிரிவு இணை இயக்குனர் அஷோக் பர்வானி கூறுகையில் : “தென்னிந்தியா மட்டுமல்ல… உலகம் முழுதும் உள்ள ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு படத்தின் இசை உரிமையை பெற்றிருப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். படு ரகளையான ஒரு நட்சத்திர பட்டாளத்துடன், இந்தியாவின் சிறந்த இசையமைப்பாளர் ஒருவரின் இசையில் உருவாகியிருக்கும் கோச்சடையான் நிச்சயம் ஒரு தலைசிறந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும்.”
இந்த ஒரு வித்தியாசமான அதே சமயம் தனித்துவம் பெற்ற ஒரு படமாகும். இந்த படத்தின் இசையை இன்றைய தலைமுறையினரிடமும், பரந்து விரிந்துள்ள ரசிகர்கள் அனைவரிடமும் கொண்டு போய் சேர்க்க எங்களால் ஆன புதுப்புது உத்திகளை கையாளவிருக்கிறோம்.
விக்ரம் சிம்ஹா என்ற பெயரில் தெலுங்கில் வெளியாகவிருக்கும் ‘கோச்சடையான்’ ஒரே நேரத்தில் தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, ஜப்பான், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கிறது.
இதனிடையே ‘கோச்சடையான்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு பணிகளில் இயக்குனர் சௌந்தர்யா தயாரிப்பாளர் முரளி மனோகர் உள்ளிட்ட ‘கோச்சடையான்’ முழு மூச்சில் இறங்கியுள்ளது. ஜப்பானில் இசை வெளியீடு நடைபெறவுள்ள அரங்கும் இறுதி செய்யப்பட்டுவிட்டது.
விரைவில் இடமும் தேதியும் அறிவிக்கப்படும்.
|