Related Articles
Lingaa 100 days celebrations by Rajinikanth Fans at Albert Theater
லிங்கா பட பிச்சைக்கார்ர்கள் தொல்லையில் இருந்து தமிழ் சினிமா தப்பித்தது
நாமெல்லாம் நண்பர் T.V. ராஜேஷ்க்கு மிகவும் கடமைப்பட்டு இருக்கிறோம்
A Tamil short film inspired by the words of Legendary Super Star Rajinikanth
Rajinikanth 34th Wedding Anniversary special event by Thalaivar Foundation
Stop Lingaa Conspiracy!
Bangalore court grants temporary injunction against distributor Singaravelan and 105 medias
Rajinikanth celebrates his 34th wedding anniversary with fans
ஒவ்வொரு வராக வெளியே முகம் காட்ட ஆரம்பித்து இருக்கிறார்கள்
செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய விநியோகஸ்தர்கள்

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2013 2003
2012 2002
2011 2001

  Join Us



Subscription

 Subscribe in a reader

Article
ரஜினிக்கு பிடித்த தலைவர் லீ க்வான் யூ காலமானார்
(Tuesday, 24th March 2015)

நவீன சிங்கப்பூரை நிறுவிய லீ க்வான் யூ காலமானார். அவருக்கு உலக தலைவர்கள் லீக்கு புகழாரம் சூட்டி, அஞ்சலி செலுத்தி உள்ளனர்.

நவீன சிங்கப்பூரின் சிற்பி என்றழைக்கப்படும் லீ க்வான் யூ, உடல்நலக் குறைவால் தனது 91வது வயதில் காலமானார். சிங்கப்பூரின் தந்தை எனப் போற்றப்படும் லீ க்வான் யூ நேற்று அதிகாலை 3.18 மணிக்கு உயிரிழந்ததாக சிங்கப்பூர் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது பல பேட்டிகளில் மறக்காமல் குறிப்பிட்ட பெயர் லீ க்வான் யூ. குறிப்பாக அரசியல் பற்றிய கேள்விகளின் போது லீயின் பெயரை அவர் குறிப்பிடத் தவறியதில்லை.

ஒரு முறை விகடனுக்கு அளித்த பேட்டியின்போது, உங்களுக்குப் பிடித்த தலைவர் யார் என ரஜினியிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த ரஜினி, "சிங்கப்பூர் பிரதமர் லீ க்வான் யூ... தலைவன்னு இருந்தா அப்படி இருக்கணும்... அரசியல்னா அப்படி நடத்தணும்... அவரைப்பத்தி நிறைய நிறையப் புத்தகங்கள் படிச்சுட்டேன். ஆனா, பிரமிப்பு தீரவே இல்லை. இந்தியாவுக்கு இப்ப அப்படி ஒரு சர்வாதிகாரம் கலந்த ஜனநாயகத் தலைவர்தான் வேணும். அப்படி ஒரு தலைவர் வந்தா, கட்டாயம் நான் அவரோடு சேர்ந்து அரசியல் செய்வேன்!''

லீ க்வான் யூ பற்றி ரஜினி முதல் முதலில் குறிப்பிட்டது இந்த பேட்டியில்தான். அதன் பிறகு பல ரஜினி ரசிகர்களுக்கும் பிடித்த தலைவராகிவிட்டார் லீ.

1923-ல் பிறந்த லீ க்வான் யூ, 1959-ல் சிங்கப்பூரின் பிரதமரானார். 1990-ம் ஆண்டு வரை 31 ஆண்டுகள் சிங்கப்பூரின் பிரதமாராக இருந்தார். உலகில் மிக நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்ற பெருமைக்குரியவர்.

1990 நவம்பரில், தானே முன்வந்து பதவி விலகினார். ஆனால் அவரது நிர்வாகத் திறன் சிங்கப்பூருக்கு முழுவதுமாக பயன்பட வேண்டும் என்பதற்காக 1990-ம் ஆண்டு மூத்த அமைச்சர் என்ற பதவியை உருவாக்கினர். அவரை வழிகாட்டியாகக் கொண்டு ஆட்சியைத் தொடர்ந்தார் புதிய பிரதமர் கோ சோ டோங்.

2004-ம் ஆண்டு லீயின் மூத்த மகன் லீ ஸெய்ன் லூங் சிங்கப்பூர் பிரதமராகப் பொறுப்பேற்றார். தொடர்ந்து அமைச்சர் வழிகாட்டி என்ற புதிய அமைச்சு உருவாக்கப்பட்டு அதில் லீ க்வான் யு அமர வைக்கப்பட்டார். உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அமைச்சகம் இது. லீயின் வழிகாட்டுதல்களுடன் அமைச்சரவையை நடத்த உருவாக்கப்பட்டது இந்தப் பதவி. ஆக 1959லி-ருந்து பதவிகளின் பெயர் மாறினாலும், சிங்கப்பூர் அரசின் பிரிக்க முடியாத அங்கமாகத் திகழ்ந்தவர் லீ.


 






 
0 Comment(s)Views: 5573

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information