நம் நாடு விடுதலை அடைந்ததை கொண்டாடும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், 75ஆவது சுதந்திர தின விழா, நடப்பாண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இதை சிறப்பிக்கும் வகையில் இல்லங்கள் தோறும் இன்று (13-ந்தேதி ) முதல் 15-ந்தேதி வரை தேசிய கொடி ஏற்றுங்கள் என கடந்த 22-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
இதனால், மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி வருகின்றனர்.
கொடி பறக்குது
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தேசியக் கொடியை புரொஃபைல் பிக்சராக வைத்து தனது தேசிய பக்தியை வெளிப்படுத்தி உள்ளார். அது மட்டும் அல்லாமல், தனது வீட்டின் முன்பு தேசிய கொடியை ஏற்றி வைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து அவர் தன்னுடைய டுவீட்டர் பதியில் பதிவிட்ட வீடியோவில், நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழாவை நாம் அனைவரும் நமது வீட்டில் தேசிய கொடியை ஏற்றி கொண்டாட வேண்டும் என கூறியுள்ளார்.
|