எக்ஸ்டிராவாக எதையும் செய்யாமல் இருந்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்று ரஜினிகாந்த் பேசினார்.
சென்னையில் ஆஷ்ரம் என்ற பள்ளியை ரஜினிகாந்த்தின் மனைவி லதா நடத்தி வருகிறார். இந்த பள்ளியின் 15-வது ஆண்டு விழா சென்னை காமராஜர் அரங்கில் நேற்று நடந்தது. இதில் கலந்துகொண்டு ரஜினிகாந்த் பேசியதாவது:
இங்கு குழந்தைங்க ரொம்ப நல்லா கலைநிகழ்ச்சி நடத்தினாங்க. ஒரு கல்வி நிறுவனத்தை 15 வருஷம் நடத்தறது மாபெரும் சாதனை. கிரேட் அச்சீவ்மென்ட். இந்த ஸ்கூல் ஆரம்பிக்க லதா எவ்ளோ கஷ்டப்பட்டாங்கங்கிறதை கூட இருந்து பாத்திருக்கேன். குழந்தைகளுக்கு இங்கு நல்ல கல்வியும், அன்பும் சொல்லிக்கொடுக்கிறாங்க. இது மேலும் மேலும் உயர்ந்து நல்ல கல்வி நிறுவனமா வளர வாழ்த்துக்கள்.
வாழ்க்கையில முன்னேறஎன்ன செய்யணும்னு ஒரு பெரியவர்கிட்ட கேட்டேன். Ôஎக்ஸ்டிராவா எதுவுமே செய்யாதேÕன்னார். எனக்கு புரியல. என்ன சொல்றீங்கன்னு மறுபடியும் கேட்டேன். லேசா சிரிச்சிட்டு அவர் சொன்னார், Ôஎக்ஸ்டிராவா தூங்காதே, எக்ஸ்டிராவா சாப்பிடாதே, எக்ஸ்டிராவா படிக்காதே, எக்ஸ்டிராவா சிந்திக்காதே, எக்ஸ்டிராவா பணம் சேக்காதே. நம்ம வேலை எதுவோ அதை மட்டும் கரெக்டா செய். எதையுமே எக்ஸ்டிராவா செய்யாதே. ஈஸியா முன்னேறிடலாம்Õனு சொன்னார். நம்ம கடமை, வேலை எதுன்னு உணர்ந்து அதை செஞ்சா வாழ்க்கையில முன்னேறலாம்.
இவ்வாறு ரஜினி பேசினார்.
முன்னதாக ரஜினிகாந்துக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. டைரக்டர் மகேந்திரன், டாக்டர் நம்பெருமாள் சாமி, பி.என்.ராமமூர்த்தி தீட்சதர், பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோருக்கு பீஷ்மா விருதை லதாரஜினி வழங்கினார். பட அதிபர் ஏவி.எம்.சரவணன், இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், நடிகர் மோகன்பாபு, ராஜாபகதூர், நடிகை சோனியா அகர்வால், ரஜினி மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா உள்பட பலர் கலந்துகொண்டனர்
|