முருகையன், சென்னை
* அமிதாப்பை பற்றி ராஜ் தாக்கரே சொன்னதற்கு பாலிவுட் கண்டனம் தெரிவித்திருப்பது பற்றி. நம்முரில் அப்படி நடக்குமா?
பாலிவுட்காரர்கள் நன்றி மறக்காதவர்கள். அங்கே சாத்தியம். இங்கே சினிமாக்காரர்கள் எல்லோரும் அரசியல்வாதிகள்.
* ரஜினி தவிர யார் நடித்திருந்தாலும் சந்திரமுகி ஓடியிருக்காது என்கிறாரே டைரக்டர் பிரியதர்ஷன்?
100 சதவீத உண்மை.
விஜயப்பா, லண்டன்
* அரசியலுக்கு வருவேன் அல்லது வரமாட்டேன் என்று ரஜினி உறுதியாக சொல்வாரா?
அடுத்த வாரம் செவ்வாய் கிழமை மதியம் எங்கே, எப்போது, என்ன சாப்பிடுவீர்கள்? உங்களால் சொல்ல முடியுமா?
* பாலாபிஷேகம் செய்வதை ரசிகர்கள் எப்போது நிறுத்துவார்கள்
பாலுக்கு தட்டுப்பாடு வரும்போது.
• .இரண்டு மாதம் கழித்து ஒகேனக்கல் பற்றி பேசலாம் என்று முதல்வர் சொன்னது பற்றி ரஜினி என்ன நினைத்திருப்பார்
ஆச்சர்யப்பட்டிருக்க மாட்டார். அரசியல் பற்றி அவருக்குத் தெரியாததா?
கிருஷ்ணன், கோவை.
* தென்னிந்திய நட்சத்திரமான ரஜினி இரண்டு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட பிரச்னை சம்பந்தப்பட்ட உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டது சரிதானா?
அரியாங்குப்பம் அரிமா சங்கத்து விழாவில் அப்துல் கலாம் கலந்துகொண்டு பேசுவது பொருத்தமில்லாத விஷயம்தான். இருந்தாலும் பேய்க்கு வாழ்க்கைப்பட்டால்.....
* குமுதத்திற்கும் குரங்கிற்கும் என்ன வித்தியாசம்
இரண்டுக்கும் வால் இருக்கும். பூமாலையை ஒன்று பிய்த்தெறியும். இன்னொன்று சிண்டு முடிக்கும். இன்னொரு முக்கியமான வித்தியாசம் உண்டு. வெளியே சொல்ல மாட்டேனே!
* தசாவதாரம் சிவாஜியின் சாதனையை முறியடிக்குமா
முதலில் வெளிவரட்டும்!
சந்தோஷ், மலேசியா
* ரஜினி பற்றி எடியூரப்பா சொன்னதற்கு தமிழக பா.ஜ.க வாய் திறக்கவில்லையே
தமிழக பா.ஜ.கவா? அப்படி ஒன்று இருக்கிறதா? நோ காமெடி ப்ளீஸ்!
* சொந்த காரணத்துக்காக தமிழ் சினிமாக்காரர்கள் உண்ணாவிரதம் இருந்தார்கள் என்கிறதே மக்கள் டி,வி?
புரட்'சீ'த் தமிழனை இப்படியா கேவலப்படுத்துவது?
சீனி,& சென்னை
* 'ரசிகன்னா'& அது& யாருங்க?
கண்ணாடியில்& பார்க்கவும்.
உமா& சங்கர்,& இமெயில்
ரஜினி& பட& ஸ்டில்கள்& அனுப்பி& வைக்க& முடியுமா?
கடந்த& ஆறு& வருஷங்களில்& எங்களுக்கு& வரும்& 456& ஆவது& மெயில்.& ஐயா,,.வெப்சைட்டிலிருந்து& எடுத்துக்கொள்ளக்கூடாதா?
பாலமுருகன்,& பெங்களுரு.
*& அறை& எண்& 605ல்& கடவுள்& படம்& சொல்லும்& செய்தியைத்தான்& பாபாவும்& சொன்னது.& விகடன்& விமர்சனக்குழு& செய்திருக்கும்& அநியாயத்தை& படித்தீர்களா?
விகடன்& விமர்சனத்தையெல்லாம்& சீரியஸாக& எடுத்துக்கொள்ள& வேண்டிய& அவசியமில்லை.& விகடன்& பாராட்டினால்& படம்& ஓடாது& என்கிற& கோலிவுட்& சென்டிமெண்ட்& உங்களுக்கு& தெரியாதா?
சபியா& ஸ்ரீதர்,& சிங்கப்பூர்
*& ரஜினி& மன்றங்களில்& ஏகப்பட்ட& பிரச்னைகள்& இருக்கிறதே.& சம்பந்தப்பட்டவர்களை& நேரில்& அழைத்து& ரஜினி& ஏன்& பேசித்& தீர்க்கக்கூடாது?
ரசிகர்& மன்ற& செயல்பாடுகளில்& நேரடியாகவே& மறைமுகமாகவோ& தலையிடாதவர்& என்கிற& பெயர்& (அது& நல்ல& பெயரோ& கெட்ட& பெயரோ)& ரஜினிக்கு& இருக்கிறது.& அதை& தியாகம்& செய்ய& வேண்டியிருக்கும்.& பரவாயில்லையா?&
*& மணிரத்னம்& படத்தில்& ரஜினி& நடிப்பாரா?
நடிக்கலாம்.& ஆனால்& அது& தளபதியை& விட& பெட்டராக& வராது& என்பது& மட்டும்& நிச்சயம்.
ரமேஷ்,& சென்னை
*& ஒகேனக்கல்& பிரச்னையில்& ரஜினியின்& நிலைப்பாடுதான்& சரி& என்று& வை,& கோ& கூறியிருக்கிறாரே
பாராட்டப்பட& வேண்டிய& விஷயம்.& & வை.கோவுக்கு& இருக்கும்& நன்றியுணர்ச்சி& கூட& ரஜினியின்& பெயரைச்& சொல்லிக்& கொண்டு& பிழைப்பு& நடத்திய& அரசியல்& வியாதிகளுக்கு& இல்லையே,
*& ரஜினிக்கும்& மோகன்& பாபுவுக்கும்& பிரச்னையாமே
அப்பாடா& தலைவர்& தப்பிச்சுட்டார்.
*& இது& ரீமேக்& காலம்.& ரஜினியே& தன்னுடைய& பழைய& படத்தை& ரிமேக்& செய்தால்& எதைச்& செய்யலாம்
நோ& டவுட்.& & முன்று& முகம்& தான்.& & இந்தியாவே& கொண்டாடிய& அந்தப்படத்தைத்தான்& ரசிகர்களும்& தேர்வு& செய்திருக்கிறார்கள்.& & சர்வே& பக்கத்தை& பார்க்கவும்.
குமார்,& சென்னை.
*& தி& நேம்& ஈஸ்& ரஜினிகாந்த்& படித்துவிட்டீர்களா?
எனக்கு& இங்கிலீஷ்& வராது.& நெக்ஸ்ட்& கொஸ்டின்& ப்ளீஸ்!
*& சிவாஜியின்& பிரம்மாண்டத்தை& கிண்டலடித்தவர்களுக்கு& கேசட்& வெளியீட்டையே& பிரம்மாண்டமாக்குவது& & கண்ணுக்குத்& தெரியவில்லையா?
ஹி...ஹி..& இது& கலைச்சேவையாம்!
ராம், மலேசியா
* அடுத்த சூ்ப்பர் ஸ்டார் விஜய்யா, அஜித்தா?
இருபத்தெட்டு வருஷமாக அவ்வப்போது உலா வரும் கேள்வி. விஜயகாந்த், சரண்ராஜ், பிரபுதேவா, சரத்குமார், விக்ரம் என்று மீடியாவால் சவால் விட்டு சரிந்து போனவர்கள் லிஸ்ட்டில் விஜய் அல்லது அஜீத் உண்டா என்பது ஆண்டவனுக்குத்தான் தெரியும்!
* ரஜினி அரசியலுக்கு வந்தால் யாருக்கு பாதிப்பு?
அரசியலையே முழு நேரத்தொழிலாக நடத்துபவர்களுக்கு.
* குசேலன் படப்பிடிப்பில் சாப்பாடு கூட கொடுக்காமல் துரத்தியடித்தார்கள் என்கிறதே மஞ்சள் ரிப்போர்ட்டர்.
எல்லாம் வியாபாரம்தான்.
அருள்குமார், கோயம்புத்துர்
* ரஜினி விஜயகாந்திடம் அரசாங்கம் எப்போது வரும் என்று கேட்டாராமே...
விஜயகாந்தின் அரசாங்கம் எப்போது வரும் என்று கூட& கேட்டதாக& பில்டப் கொடுக்கிறார்கள். அட, தேவுடா
ரமேஸ், சென்னை
* எங்கே போனவாரம் ஆளையே காணோம்?
சென்னை டு ஹாட்டு கண்ணா... அதான் இமயமலை வரைக்கும் போய்ட்டு வந்தேன்.
* ஷாஜகான், மயிலாடுதுறை
தீயும் கழுகுவும் எனக்குப் பிடித்தமான படங்கள். இரண்டும் சரியாக ஓடவில்லையே. என்ன காரணம்?
பில்லாவும் முரட்டுக்காளையும் ஏற்படுத்தி வைத்திருந்த எதி்ர்பார்ப்புதான் காரணம். இந்திக்கு டப்பிங் செய்யப்பட்ட ரஜினி படங்களில் கழுகு முக்கியமான வெற்றிப்படம். மதியான நேரங்களில் ஜீ டி.வி பக்கம் வந்தால் எப்போதாவது கழுகு ரஜினி, இந்தியில் பேசுவதைப் பார்க்கலாம்
* ரஜினி அரசியலுக்கு வந்தே ஆகவேண்டும் என்று நினைக்கும் ரஜினி ரசிகர்கள் பற்றி.
ஓவரான பொதுநலமோ அல்லது ஓவரான சுயநலமாகவோ இருக்கலாம். ரஜினி சொல்படி இயங்குபவர்கள் மட்டுமே ரஜினி ரசிகர்களாக இருக்க முடியும். ரஜினியை இயக்க நினைப்பவர்கள் நிச்சயம் ரஜினி ரசிகர்களாக இருக்க முடியாது.
* ரஜினியை புகழ்ந்து எழுதினாலே மீடியாவுக்கு ஏகப்பட்ட பணம் கிடைக்கிறதே.. அப்புறம் ஏன் திட்டியும் எழுதுகிறார்கள்?
நடுநிலையை நிலைநாட்டி பலதரப்பட்டவர்களையும் கவர் செய்கிறார்களாம்! எப்படி எழுதினாலும் பிச்சைக் காசு கிடைக்கிறது என்பதுதான நிஜமான உண்மை.
* ரஜினியின் திறமையை இதுவரை முழுக்க பயன்படுத்திக்கொண்ட இயக்குநர் யார்?
அப்படி யாரும் இதுவரை பிறக்கவில்லை. ஓரளவுக்கு பயன்படுத்திக்கொண்டவர்கள் என்று அரை டஜன் பேரைச் சொல்லமுடியும். அதில் ராஜசேகரும் சுரேஷ் கிருஷ்ணாவும் உண்டு.
* வசந்த ராஜா, துபாய்
சிவாஜியால் வந்த நஷ்டத்தை சரிக்கட்டத்தான் ரஜினி குசேலனில் நடிப்பதாக தட்ஸ் தமிழ் சொல்கிறதே...
தட்ஸ் தமிழுக்கு அஜீரணக் கோளாறு ஜாஸ்தி. எதையாவது பார்த்துவிட்டு வாந்தி எடுத்து வைத்திருக்கும். பி கூல்!
|