Rajini History (Tamil) - List of Titles

பஸ் கண்டக்டராக வேலை பார்த்தவர் `சூப்பர் ஸ்டார்' ஆனார். திருப்பங்கள் நிறைந்த ரஜினிகாந்த் வாழ்க்க

சின்ன வயதில் நடத்திய லீலைகள்!

படிக்கப் பிடிக்காமல் சென்னைக்கு ஓடி வந்தார் கூலி வேலை பார்த்தார்; பட்டினி கிடந்தார

சினிமாவில் சேர ஆசை வந்தது எப்படி?

திரைப்படக் கல்லூரியில் 2 ஆண்டு நடிப்பு பயிற்சி

பாலசந்தருடன் முதல் சந்திப்பு

கண்டக்டர் வேலையில் இருந்து "டிஸ்மிஸ்''

3 படங்களுக்கு ஒப்பந்தம் செய்தார், பாலசந்தர் `தமிழை கற்றுக்கொண்டால், எங்கேயோ கொண்டுபோய் விடுவேன்!'

"அபூர்வ ராகங்கள்'' முதல் நாள் படப்பிடிப்பு

சிவாஜிராவ் என்ற பெயருக்கு பதிலாக `ரஜினிகாந்த்' என்று பெயர் சூட்டினார், பாலசந்தர


"அபூர்வராகங்கள் படத்தின் கதாநாயகன் நான்தான்!'' நண்பர்களிடம் ரஜினி விட்ட "ரீல்''

"மூன்று முடிச்சு'' படத்தில் முக்கிய வேடம் "அவர்கள்'' படம், நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத்தந்தத


1977-ல் 15 படங்களில் நடித்தார், ரஜினிகாந்த் திருப்புமுனை ஏற்படுத்திய படம் "புவனா ஒரு கேள்விக்குறி''  


பாரதிராஜாவின் "16 வயதினிலே'' `பரட்டை' வேடத்தில் முத்திரை பதித்தார், ரஜினி

புதுமையான வேடத்தில் நடித்த `ஆயிரம் ஜென்மங்கள்' ரஜினியின் முதல் வண்ணப்படம்

ஒரே ஆண்டில் (1978) 20 படங்கள்! இரவு - பகலாக நடித்தார


கதாநாயகனாக நடித்த முதல் படம் - "பைரவி'' கலைஞானம் தயாரித்த படம


"சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டாம்!'' ஏற்க மறுத்தார், ரஜினிகாந்த்!

ஸ்ரீதரின் `இளமை ஊஞ்சலாடுகிறது' ரஜினி - கமல் போட்டி போட்டு நடித்தனர்

திரைக்காவியமாக அமைந்த "முள்ளும் மலரும்'' தங்கைப் பாசம் மிக்கவராக ரஜினி நடித்தார்

"ரஜினிக்கு கதாநாயகன் வேடமா?' கூடவே கூடாது!' மகேந்திரனிடம் எதிர்ப்பு தெரிவித்த பட அதிபர்!

மீண்டும் பாலசந்தர் டைரக்ஷனில் ரஜினி `தப்புத்தாளங்கள்' படத்தில் சரிதாவுடன் நடித்தார்

சிவாஜியுடன் ரஜினி நடித்த முதல் படம் "ஜஸ்டிஸ் கோபிநாத்''

இடைவிடாத படப்பிடிப்பால் சந்தித்த சோதனைகள்

ரஜினிகாந்துக்கு தீவிர சிகிச்சை தமிழ்நாடெங்கும் பெரும் பரபரப்பு

"இருண்ட காலம்'' பற்றி டைரக்டர் பாலசந்தர்

சூரியனை மறைத்த கிரகணம் நீங்கியது! புதுப்பொலிவுடன் நடிக்கத் தொடங்கினார், ரஜினி


`நான் வாழவைப்பேன்' படத்தில் ரஜினியின் அற்புத நடிப்பு சிவாஜியின் பாராட்டைப் பெற்றார்

குணச்சித்திர நடிப்பில் `ஆறிலிருந்து அறுபதுவரை' முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் வெற்றி

யானைகளுடன் ரஜினி நடித்த `அன்னை ஓர் ஆலயம்' சிறுத்தையை தோள் மீது சுமந்த அபூர்வ காட்சி

ரஜினிக்கு எம்.ஜி.ஆர். "அட்வைஸ்'' "உடம்பு விஷயத்தில் கவனமாக இருங்கள்''

ரஜினியின் மாபெரும் வெற்றிப்படம் `பில்லா' இரட்டை வேடங்களில் அசத்தினார்

"ஜானி''யில் புதுமையான இரட்டை வேடம் ஸ்ரீதேவியுடன் இனிய காதல் காட்சிகள்

ஏவி.எம். தயாரித்த "முரட்டுக்காளை'' கதாநாயகன் - ரஜினி; வில்லன் - ஜெய்சங்கர்

ரஜினி இதயத்தில் காதல் மலர்ந்தது! பேட்டி காண வந்த லதாவை மணக்க விருப்பம்

லதாவுடன் திருமணம்: ரஜினி அறிவித்தார் முதலில் செய்தி வெளியிட்ட `தினத்தந்தி'க்கு பாராட்டு

திருமண அழைப்பிதழ் அடிக்காதது ஏன்? திருமணத்துக்கு நிருபர்கள் ஏன் வரக்கூடாது? தேன் நிலவுக்கு வெளிநாடு போவீர்களா? சரமாரி கேள்விகளுக்கு ரஜினியின் அதிரடி பதில்கள்!

ரஜினி-லதா திருமணம் திருப்பதியில் நடந்தது அன்றே படப்பிடிப்பில் கலந்து கொண்டார்

திருமணத்துக்குப்பின் ரஜினிகாந்த்

காதலுக்கு அஸ்திவாரம் போட்ட `தில்லுமுல்லு' படம் வெற்றி நகைச்சுவையில் கொடிகட்டிப் பறந்தார


அப்பா-மகனாக ரஜினி நடித்த "நெற்றிக்கண்'' புதுமையான கதை; நடிப்பில் திருப்புமுனை

ஏவி.எம். தயாரித்த "போக்கிரிராஜா'' 148 நாள் ஓடியது

தேவர் பிலிம்ஸ் தயாரித்த "ரங்கா'' ரஜினி-ராதிகா இணைந்து நடித்தனர்

ரஜினி நடித்த காவியம் `எங்கேயோ கேட்ட குரல்' படம் முழுவதும் வெறும் வேட்டி-சட்டையுடன் நடித்தார்!

மூன்று வேடங்களில் அசத்திய "மூன்று முகம்''

"சண்டைக்காட்சிகளில் அசர வைத்தார்'' டைரக்டர் ஜெகந்நாதன் வெளியிடும் தகவல்கள்

ஏவி.எம் தயாரித்த `பாயும் புலி' "கராத்தே'', "குங்பூ'' சண்டைக்காட்சிகளில் ரஜினி

ரஜினி நடித்த இந்திப்படம் "அந்தா கானூன்'' மகத்தான வெற்றி இந்திப்பட உலகில் வெற்றி உலா

பெயர் மாற்றத்துடன் வெளிவந்த "நான் மகான் அல்ல'' கண்ணாடி மாளிகையில் பயங்கர சண்டைக்காட்சி!

கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்த `கை கொடுக்கும் கை' முன்பு வில்லனாக நடித்த ரஜினி, இப்போது கதாநாயகனாக நடித்தார்

தனிச்சிறப்பு வாய்ந்த "அன்புள்ள ரஜினிகாந்த்'' ரஜினியாகவே ரஜினி நடித்த படம்

"அன்புள்ள ரஜினிகாந்த்'' படம் உருவானது எப்படி? பட அதிபர் தமிழ்மணி வெளியிடும் தகவல்கள்

ரஜினி விரும்புவது எது? வெறுப்பது எது?

ஏவி.எம். தயாரித்த `நல்லவனுக்கு நல்லவன்' சிறந்த நடிப்புக்காக ரஜினி பல விருதுகள் பெற்ற படம

ரஜினியின் 100-வது படம் "ஸ்ரீராகவேந்திரர்'' ஸ்டைல்களை ஒதுக்கி விட்டு, மகானாகவே வாழ்ந்து காட்டினார்்

சிவாஜி - ரஜினி நடித்த "படிக்காதவன்'' 210 நாட்கள் ஓடியது

பிரபுவுடன் இணைந்து நடித்த "குரு சிஷ்யன்'' கவுதமி அறிமுகமான படம்

ரஜினி - பிரபு இணைந்து நடித்த "தர்மத்தின் தலைவன்'' படத்தில் குஷ்பு அறிமுகம்

ஆங்கிலப் படத்தில் நடித்து ரஜினி சாதனை! சொந்தக் குரலில் பேசினார்!

ரஜினியின் 125-வது படம் "ராஜாதி ராஜா'' 100 நாட்கள் "ஹவுஸ்புல்'' காட்சிகள்

"ஏவி.எம்''மின் "ராஜா சின்ன ரோஜா'' கார்ட்டூன்களுடன் ரஜினி நடித்தார்! 80 ஆயிரம் படங்களை வரைந்து உருவாக்கிய காட்சி!

சத்யா மூவிஸ் வெம்ளி விழா ஆண்டில் ரஜினி நடித்த வெம்ளி விழா படம் - "பணக்காரன்''

கூடு விட்டு கூடு பாய்ந்தார், ரஜினி! எமலோகத்தில் கலாட்டா!

அப்பாவியாக வாழ்ந்து காட்டிய "தர்மதுரை''

ரஜினிக்கும், கமலுக்கும் மோதலா?

தொழிலில் போட்டி இருந்தாலும் "எங்கம் நட்பை யாராலும் பிரிக்க முடியாது'' கமலஹாசன் பேட்டி  

கே.பாலசந்தர் - ரஜினி அபூர்வ சந்திப்பு மனம் விட்டுப் பேசினார்கம்

"என் கடவுளுக்கு மதம் கிடையாது'' ஆன்மீகம் பற்றி ரஜினி விளக்கம


மணிரத்னம் டைரக்ஷனில் ரஜினி நடித்த "தளபதி'' 100 தியேட்டர்களில் ஏக காலத்தில் திரையிடப்பட்டத


"படப்பிடிப்பின்போது ரஜினி கடலில் மூழ்கினார்" நடிகை சுமித்ரா வெளியிட்ட தகவல்

இல்லறமா? துறவறமா? ரஜினி ஆலோசனை

ரஜினியுடன் விஜயசாந்தி இணைந்து நடித்த `மன்னன்' 200 நாட்கள் ஓடிய படம்

"உங்கள் மனைவியை கோபித்துக் கொள்வீர்களா?" ரஜினியிடம் சிவகுமார் கேள்வி

ரஜினிக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?

ரஜினி கட்டிய திருமண மண்டபம் கருணாநிதி திறந்து வைத்தார் 14-12-1989

ரஜினியின் பெரிய வெற்றிப்படம் `அண்ணாமலை' வசூலைக் குவித்து வெள்ளி விழா கொண்டாடியது

ரஜினியுடன் சில அனுபவங்கள் ஏவி.எம்.சரவணன் வெளியிடும் தகவல்கள்

ராகவேந்திரர் மீது ரஜினிக்கு ஏற்பட்ட கோபம்

பழைய நண்பர்களை மறக்காத ரஜினி! "நட்புக்கு இலக்கணம் வகுத்தவர் அவர்''

`நான் நடிகனாக காரணம் - என் உயிர் நண்பன் ராஜ்பகதூர்' ரஜினி நெகிழ்ச்சி பேட்டி


எஸ்.பி.முத்துராமன் �னிட்டின் உதவிக்காக ரஜினி நடித்துக் கொடுத்த "பாண்டியன்''

மனைவி மறைந்த துயரத்தை அடக்கிக்கொண்டு `பாண்டியன்' படத்தை முடித்து வெளியிட்டார், முத்துராமன்

ரஜினிக்கு குஷ்பு பாராட்டு `நல்ல நடிகர்; நல்ல மனிதர்'

ஆர்.வி.உதயகுமார் டைரக்ஷனில் ஏவி.எம். தயாரித்த "எஜமான்'' வெள்ளி விழா கொண்டாடியது

`ரஜினிக்குள் ஒரு டைரக்டரே இருக்கிறார்' பாரதிராஜா புகழாரம


"மனித நேயம் மிக்கவர்கள் தமிழர்கள்'' ரஜினி நெகிழ்ச்சி

நண்பர்களுக்கு உதவ ரஜினி எடுத்த படம் `வள்ளி' பிரியாராமன் அறிமுகம்

நாட்டாமை படத்தின் தெலுங்குப் பதிப்பு ரஜினி நடித்த `பெத்தராயுடு' வெற்றி விழாவில் தங்கக்காப்பு அணிவித்தார், நாகேசுவரராவ்

மீனா, ரோஜா 2 கதாநாயகிகளுடன் ரஜினி நடித்த "வீரா'' நகைச்சுவை கலந்த வெற்றிப்படம்

தடையை மீறி தயாரான "உழைப்பாளி''

ரஜினியுடன் திரைப்பட விநியோகஸ்தர்கள் சமரசம்

ரஜினி எங்கே? டைரக்டர் பி.வாசு தவிப்பு! ஓட்டலில் ரூம் கிடைக்காததால் காருக்குள் படுத்து தூங்கினார்

ரஜினியின் வெற்றி மகுடத்தில் ஒரு வைரம் "பாட்ஷா''

"பாட்ஷா'' வெள்ளி விழா ரஜினி பேச்சு எழுப்பிய புயல்

பாட்ஷா விழாவில் ரஜினி பேச்சு எதிரொலி ஆர்.எம்.வீரப்பன் பதவி இழந்தார்

ரஜினியின் "முத்து'' அபார சாதனை! ஜப்பானில் 23 வாரம் ஓடியது

"முத்து'' படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது எப்படி? டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி

தி.மு.க - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணிக்கு ரஜினி ஆதரவு டெலிவிஷனில் பிரசாரம்

ஏழைப் பெண்களுக்கு இலவச திருமணம் ரஜினி நடத்தி வைத்தார


8 பேருக்கு உதவ ரஜினி தயாரித்த "அருணாச்சலம்'' லாபத்தை பங்கிட்டுக் கொடுத்தார்

`சரியானவர்களுக்கு, சரியான நேரத்தில் உதவுபவர்' ரஜினி பற்றி பட அதிபர் கலைஞானம்

ரஜினி - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் மகத்தான வெற்றிப்படம் "படையப்பா'' சென்னையில் 30 வாரம் ஓடியத


21 ஆயிரம் அடியில் உருவான "படையப்பா'' 2 இடைவேளையுடன் படத்தை திரையிடலாமா? கமலஹாசனிடம் யோசனை கேட்டார், ரஜினி!

"பாபா'' - எதிர்பாராத தோல்வி

காவிரி தண்ணீர் பிரச்சினை ரஜினிகாந்த் உண்ணாவிரதம் `நதிகள் இணைப்பு திட்டத்துக்கு ரூ.1 கோடி கொடுக்கத் தயார்' 13-10-2002

2004 பாராளுமன்ற தேர்தல்: பாரதீய ஜனதாவுக்கு ரஜினி ஆதரவு

சரித்திர சாதனை படைக்கும் "சந்திரமுகி'' உருவானது எப்படி? டைரக்டர் பி.வாசு வெளியிடும் தகவல்கள்

"சந்திரமுகி''யில் சிம்ரனுக்கு பதில் ஜோதிகா நடித்தது ஏன்?

தமிழ்நாட்டில் ரஜினிக்கு 30 ஆயிரம் ரசிகர் மன்றங்கள்! வெளிநாடுகளிலும் ரசிகர்கள் குவிகிறார்கள்

"ரஜினிகாந்த் சிறந்த நடிகர்; மாமனிதர்'' நட்சத்திரங்கள் மனம் நெகிழ்ந்த பேட்டி

பிரமாண்டமாக உருவாகியுள்ள "சிவாஜி'' ரஜினி படமா? ஷங்கர் படமா? டைரக்டர் ஷங்கர் வெளியிட்ட "ரகசியங்கள்''

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் குடும்பம்

`சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் ஜாதகம் அரசியலா? ஆன்மீகமா? சனிப்பெயர்ச்சிக்கு பிறகு தெரியும்

  Join Us

Rajini's History (Part 31)                              

ரஜினிக்கு எம்.ஜி.ஆர். "அட்வைஸ்''
"உடம்பு விஷயத்தில் கவனமாக இருங்கள்''

ரஜினிகாந்த் உடல் நலம் குன்றியிருந்தபோது அவரை எம்.ஜி.ஆர். சென்று பார்த்தார். "உடம்பு விஷயத்தில் கவனமாக இருங்கள்'' என்று கனிவுடன் கூறினார்.

ரஜினிகாந்த், யானையுடன் நடித்த "அன்னை ஓர் ஆலயம்'' படத்தை டைரக்ட் செய்தவர், ஆர்.தியாகராஜன். (சாண்டோ சின்னப்ப தேவர் மருமகன்)

இந்தப் படத்தை இயக்கியபோது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி அவர் கூறியதாவது:-

"1979-ல் `அன்னை ஓர் ஆலயம்' படத்தை இயக்கினேன். இது அந்த வருடம் தீபாவளிக்கு ரிலீசானது. "தாய்ப்பாசம் என்பது மிருகங்களுக்கும் உண்டு'' என்பதை மையக்கருத்தாக்கி வந்த படம். பெரிய வெற்றி.

இந்தப் படத்தில், ஒரு சிறுத்தையை ரஜினி தோள் மீது தூக்கிச் செல்லும் காட்சி, ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

இந்தப்படம் தமிழில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, "அம்மா வெருகேனு அம்மா'' என்ற பெயரில் தெலுங்கிலும் தயாரித்தோம். அதிலும் ரஜினி நடித்தார். தெலுங்கும் வெற்றிப்படமே.



எளிமை

சினிமாப்புகழ் எப்போதுமே அவரை பாதித்ததில்லை. திடீர் திடீரென எங்கள் ஆபீசுக்கு வருவார். களைப்பாக இருந்தால், எங்கேயாவது ஒரு ஓரத்தில் கையை தலைக்கு வைத்து படுத்துக்கொள்வார். சாதாரண ஓட்டலில் இடியாப்பம் - பாயா வாங்கி வரச்சொல்லி அதையே சாப்பிடுவார்.

ஒரு படத்தில் நடித்ததுமே, `நட்சத்திர ஓட்டல் டிபன்தான் வேண்டும்' என்று கேட்கிற சினிமா உலகில், எந்த பந்தாவும் இல்லாமல் ரஜினி எளிமையாக இருந்தார்.

"அன்னை ஓர் ஆலயம்'' படத்தில் ரஜினி நடித்த நேரத்தில், தூங்காமல் - ஓய்வு எடுக்காமல் உழைத்தார். அவருக்குள் ஒருவித குழப்ப நிலை நீடித்ததை உணர்ந்து கொண்டோம். இதனால் எங்கள் கம்பெனி தயாரிப்பு நிர்வாகி, உதவி இயக்குனர் விஜயசிங்கம், கார் டிரைவர் மூவரையும் எப்போதும் ரஜினியுடன் இருக்கும்படி ஏற்பாடு செய்தோம்.

எம்.ஜி.ஆருக்கு தகவல்

ஆனால், இதையும் தாண்டி அவருக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தில், சத்யா ஸ்டூடியோவில் ரஜினி நடிக்க வந்த நேரத்தில் எம்.ஜி.ஆரின் செயலாளராக இருந்த பத்மநாபனிடம் இதுபற்றி கவலை தெரிவித்தோம்.

எம்.ஜி.ஆர். அப்போது முதல்-அமைச்சராக இருந்தார். ரஜினி பற்றிய தகவல் பத்மநாபன் மூலம் அவருக்குத் தெரிந்தது. எம்.ஜி.ஆர். சத்யா ஸ்டூடியோவுக்கு வந்து, ரஜினியை பார்த்துப் பேசினார். "உடம்பு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். சுவரை வைத்துத்தான் சித்திரம் எழுத முடியும்'' என்று ரஜினிக்கு அன்புடன் `அட்வைஸ்' செய்துவிட்டுப் போனார்.



லாபமா, நஷ்டமா?

"அன்னை ஓர் ஆலயம்'' கடைசி நாள் படப்பிடிப்பு. பூசணிக்காய் உடைத்த பிறகு, காரில் ஏறப்போன ரஜினி நேராக என்னிடம் வந்தார். என்னை எப்போதும் `மாப்பிள்ளை' என்றுதான் அழைப்பார்.

"என்ன மாப்பிள்ளை! இந்தப்படம் உங்களுக்கு லாபமா? நஷ்டமா?'' என்று கேட்டார். தனது உடல் நலம் காரணமாக, படப்பிடிப்பு கொஞ்சம் தள்ளிப்போனதால், தயாரிப்பு செலவு அதிகமாகியிருக்குமோ என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் அப்படிக் கேட்டார்.

நான் அவரிடம், "ரஜினிபாய்! உங்களை வைத்து தயாரிக்கும் படத்தால் நஷ்டம் வராது. லாபத்தில் கொஞ்சம் குறைவு. அவ்வளவுதான்!'' என்றேன் சிரித்தபடி.

உடனே, தனது கையில் வைத்திருந்த ஒரு கடிதத்தை என் கையில் தந்தார் ரஜினி. "நாளைக்கு இதை படிச்சுப் பாருங்க'' என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்.

அவர் புறப்பட்டுப் போனதும், ஆவலை அடக்க முடியாமல் அந்தக் கடிதத்தை அப்போதே பிரித்துப் பார்த்தேன். பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் என்று 3 மாதங்களுக்கான தேதிகளை எங்கள் பட நிறுவனத்துக்கு (படப்பிடிப்பு நடத்திக்கொள்ள) கொடுத்திருப்பதாக அதில் குறிப்பிட்டு இருந்தார். அந்த தேதிகளில் ஒரு தெலுங்குப் படத்தையும், ஒரு தமிழ்ப்படத்தையும் எடுத்து முடித்தோம்.''



இவ்வாறு தியாகராஜன் கூறினார்.

தனித்து நடிக்க முடிவு

அபூர்வ ராகங்கள், அவர்கள், 16 வயதினிலே, இளமை ஊஞ்சலாடுகிறது, நினைத்தாலே இனிக்கும் உள்பட பல படங்களில் இணைந்து நடித்த கமலஹாசனும், ரஜினிகாந்தும் இனி தனித்தனியே நடிப்பது என்று முடிவு செய்தனர்.

இருவருடைய வளர்ச்சிக்கும் அதுதான் நல்லது என்று அவர்கள் கருதினர்.

இதுபற்றிய அறிவிப்பை, பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் கமலஹாசன் அறிவித்தார். அப்போது ரஜினிகாந்த் உடன் இருந்தார்.


Next Page>>> Part 32



 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information