நட்சத்திரங்களுக்கிடையே உச்ச நட்சத்திரம் - கோலிவுட்டை கலக்கிகொண்டிருக்கும் ஒரு Flashback சந்திப்பு
கோலிவுட்டின் தற்போதைய பரபரப்பு சமீபத்தில் நடைபெற்ற நட்சத்திர சந்திப்பு தான். 1980 களில் ஜொலித்த நட்சத்திரங்களுக்கான get-together ஒன்று லிஸ்ஸி ப்ரியதர்ஷன் மற்றும் சுஹாசினி ஆகியோரின் ஏற்பாட்டின்படி ப்ரியதர்ஷனின் வீட்டில் சமீபத்தில் நடைபெற்றது.
இதில் திரளான நட்சத்திரங்கள் கலந்துகொண்டார்கள். சூப்பர் ஸ்டார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். சூப்பர் ஸ்டார் வந்தபோது கைத்தட்டல், விசில் என தூள் பறந்தது கூடுதல் தகவல்.
படங்கள் லீக்கானது நட்சத்திரங்களுக்கு ஒரு பக்கம் அதிர்ச்சியளித்தாலும் ஊடங்களுக்கு ஒரு பக்கம் கொண்டாட்டம் தான்.
இந்த நட்சத்திர கொண்டாட்ட நிகழ்ச்சியில் அனைவரையும் புகைப்படம் எடுத்தது இயக்குனரும் நடிகருமான பிரதாப் போத்தன். பிரதாப் போத்தனின் Facebook அக்கவுண்ட்டில் இருந்து இப்படங்கள் லீக்காகி இணையத்தில் ஈ.மெயில் forwarding மூலமாக பரவியதாக தெரிகிறது.
இந்த சந்திப்பின் ஹைலைட்டே சூப்பர் ஸ்டார் தான் . அவருடன் புகைப்படமெடுத்துக்கொள்ள அவருடைய முன்னால் கதாநாயகியரிடையே பெரும் தள்ளுமுள்ளே நடந்ததாக கூறப்படுகிறது.
பழைய மாணவர்கள் தாங்கள் படித்த கல்லூரியில் பல ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று கூடுவது போல் இந்த சந்திப்பு “ஆட்டோகிராப்” மகிழ்ச்சிகளை அள்ளி தெளிப்பதாக அமைந்தது.
குறிப்பு 1: மேற்படி விருந்தில் கலந்துகொண்ட நட்சத்திரங்களில், ஃபீல்டில் இன்னும் ஹாட்டாக, அதுவும் முதலாவதாக இருப்பது நமது சூப்பர் ஸ்டார் மட்டுமே.
குறிப்பு 2: இதில் கலந்துகொள்ள அழைக்கபடாத நட்சத்திரங்கள், “எங்களை ஏன் அழைக்கவில்லை? எங்களையும் அழைத்திருக்கக் கூடாதா?” என்று பொருமிக்கொண்டிருப்பதாக தகவல்.
.jpg)
.jpg)

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

.jpg)