முத்துவேல் பாண்டியனின் என்ட்ரி - ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
(Saturday, 6th May 2023)
நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால் இந்த படத்தின் மூலம் தரமான வெற்றியை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறார்.
இந்த படத்தில் கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ் குமார், மலையாள நடிகர் மோகன்லால், தமன்னா, யோகி பாபு, பிரியங்கா அருள் மோகன், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், வசந்த் ரவி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். மேலும் இதில் ஜெயிலராக முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார்.
இந்நிலையில் ரிலீஸ் தேதியுடன் ஒரு வீடியோவை ஜெயிலர் பட தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. இதில் எல்லா கதாபாத்திரங்களையும் காண்பித்து கடைசியாக மாஸ் லுக்கில் ரஜினி வருகிறார். ரஜினி பார்ப்பதற்கு இளமையாக காரில் இருந்து வரும் காட்சி இடம் பெற்றுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம், இவ்வாண்டின் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது.