31 May - இலங்கை சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக தங்கள் நாட்டிற்கு வருமாறு ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாடே கொண்டாடும் நடிகராக இருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்நிலையில் அவரை வைத்து தங்கள் நாட்டு சுற்றுலாத்துறையை மேம்படுத்த முடிவு செய்துள்ளது இலங்கை அரசு. இதையடுத்து இந்தியாவுக்கான இலங்கையின் துணை தூதர் டாக்டர் டி. வெங்கடேஸ்வரன் போயஸ் கார்டனில் இருக்கும் ரஜினியின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்து பேசியுள்ளார்.
அந்த சந்திப்பு குறித்து வெங்கடேஸ்வரன் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது, ரஜினிகாந்த் இலங்கைக்கு வந்தால் சுற்றுலாத்துறை மேம்படும். ராமாயணத்துடன் தொடர்புடைய புனித தலங்கள், மற்றும் பிற பாரம்பரிய கலாச்சார மற்றும் மத சின்னங்களை பார்வையிடலவும் இலங்கைக்கு வருமாறு ரஜினிகாந்தை அழைத்திருக்கிறோம் என்றார்.
நான் நடித்து வரும் பட வேலையை முடித்துக் கொண்டு இலங்கைக்கு வருகிறேன் என வெங்கடேஸ்வரனிடம் தெரிவித்துள்ளாராம் ரஜினிகாந்த். முன்னதாக சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகள் ரஜினியை தங்கள் நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்தன. இந்நிலையில் இலங்கையும் அழைப்பு விடுத்திருக்கிறது. இலங்கை துணை தூதர் ரஜினியை சந்தித்து பேசியிருப்பது இதுவே முதல் முறையாகும்.
|