Director
K. Bagyaraj
"நல்ல நேரத்துல கெட்ட நேரம் என்று ஒரு
பழமொழி சொல்வார்கள். நம்ம ரஜினி சாருக்கு அப்படியொரு நேரம்
இது.
சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் ரஜினிக்கு
வைக்கப்பட்ட கட் அவுட் குறித்து செய்திகள், படங்களைப்
பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். அவர் புகழ் ஜப்பான்,
ஹாங்காங் தாண்டி அமெரிக்கா, கனடான்னு போயிடுச்சேன்னு
சந்தோசப்பட்டேன்.
ஆனால் அடுத்த இரு வாரங்கள்ல அதே ரஜினி சாரைப் பத்தி
என்னென்னமோ எழுதறாங்க. குசேலன் அப்பிடி இப்பிடின்னு
பேசறாங்க. பத்து நாளா எந்தப் பேப்பரப் பாத்தாலும் இதே
நியூஸ்தான்.
எனக்கே மனசு கஷ்டமா போச்சு. எவ்வளவோ பேருக்கு எத்தனையோ
உதவிகளை கணக்கு வழக்கில்லாம செஞ்சவர் ரஜினி. சினிமா
நல்லாருக்கணும், சினிமால இருக்கிற எல்லாரும்
நல்லாருக்கணும்னு நினைக்கிறவர். இந்த குசேலன் படத்துல வேலை
பார்த்த அஸிஸ்டன்ட் டைரக்டர்கள் ஒவ்வொருத்தருக்கும் ரூ.1
லட்சம் ரூபாய் வரை உதவி செஞ்சவர். இதைத்தவிர படத்தோட எல்லா
டெக்னீஷியன்களுக்கும் ரூ.40 லட்சம் உதவி செஞ்சார். இந்த
மாதிரி நல்லவங்களை உற்சாகப்படுத்தினா அவங்களும்
நல்லாருப்பாங்க, அடுத்தவங்களும் நல்லாருப்பாங்க...
எனக்கே இப்படின்னா, அவர் மனசு எப்படியெல்லாம்
சங்கடப்பட்டிருக்கும். அத நினைச்சுப் பார்த்தேன், உலகத்தோடு
இயல்பு இதான்னு புரிஞ்சிக்கிட்டேன். ஆனா எனக்கு முன்னமே
அவர் புரிஞ்சிக்கிட்டிருப்பார்...”
-ரஜினியின் நலம் விரும்பிகளுள் ஒருவரான இயக்குநர் திலகம்
பாக்யராஜ் பேசியதைத்தான் இங்கே படிக்கிறீர்கள்.
தீட்டிய மரத்தில் கூர் பார்க்கும் புத்திசாலிகள்
நம்மாளுங்க... வேறு எப்படி இருப்பாங்க..!
|