Deepika Padukone (Actress)
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நான் நடிக்க மறுத்ததாகக் கூறப்படுவதில் உண்மையில்லை.
எந்திரன் படம் குறித்து யாருமே என்னிடம் பேசவில்லை என்பதே உண்மை, என்கிறார் பாலிவுட்டின் கனவுக் கன்னி தீபிகா படுகோன்.
ஏற்கெனவே "தைனிக் பாஸ்கர்" நாளிதழில் அவர் இதுகுறித்து விரிவாகப் பேட்டி அளித்திருந்தார். அதில். ரஜினியை தான் நேரில் சந்திக்கவில்லை என்றாலும், அவரைப் பற்றி வரும் செய்திகள் மற்றும் அவரது நல்ல பண்புகளை அறிந்த்திலிருந்து அவர் மீது தனி மரியாதையும் அன்பும் வந்துவிட்டதாகவும், அவருடன் எப்படியாவது ஒரு படத்தில் நடிக்கும் விருப்பம் உள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.
"இந்த அளவு மீடியாவை ஆதிக்கம் செலுத்தும் ஒருவரை நான் வேறு எந்த நாட்டிலும் கேள்விப்பட்டது கூட இல்லை. அவருடன் நடிக்க ஒரு வாய்ப்புக் கிடைத்தால் சந்தோஷப்படுவேன்... ரோபோ (எந்திரன்) படத்துக்காக என் பெயர் பேசப்பட்டதே பெரிய விஷயம்தான்..." என்று தீபிகா கூறியது நினைவிருக்கலாம்.
இந்நிலையில் அவரை சில தமிழ்பட தயாரிப்பாளர்கள் அணுகியுள்ளனர். ஆனால தமிழில் நடிக்கும் எண்ணமே இப்போது இல்லை என்று கூறி திருப்பி அனுப்பியுள்ளார்.
ரஜினியின் படத்தில் வாய்ப்புக் கிடைத்தால் நடிப்பேன் என்றும் வேறு தென்னிந்திய மொழிப் படங்களில் நடிக்கும் எண்ணம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
ரோபோ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததா என ஒரு நிருபர் அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அவர் கூறிய பதில்:
தமிழ், இந்தி, தெலுங்கில் உருவாகும் ரஜினியின் "எந்திரன் - தி ரோபோ" படத்தில் நான் நடிக்க மறுத்ததாகக் கூறப்படுவது தவறு. அதில் கொஞ்சமும் உண்மையில்லை. இந்தப் படம் குறித்து யாருமே என்னிடம் பேசவில்லை. வாய்ப்பு வந்திருந்தால் கண்டிப்பாக நடித்திருப்பேன்.
மற்றபடி ரஜினி படத்தில் எப்போது வாய்ப்பு வந்தாலும் நடிக்க தயாராக உள்ளேன். ஆனால் வேறு எந்த தமிழ்ப் படத்திலும் நடிக்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை (இதை வேறு மாதிரி திரித்துக் எழுதியுள்ளது ஒரு தமிழ்ப் பத்திரிகை. அதனுடன் ஒப்பிட்டு இந்தச் செய்தியை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம்.)
-சங்கநாதன்
Article Year : 2014
|