Sujatha (Writer)
ரஜினிகாந்த் நடித்த "ப்ரியா''
படத்தின் கதாசிரியரான பிரபல எழுத்தாளர் சுஜாதா கூறியதாவது:-
"ப்ரியா'' படப்பிடிப்பின்போது ரஜினிகாந்த் எனக்குப்
பழக்கமானார். அப்போது அவர் உச்சியை நோக்கி
ஓடிக்கொண்டிருந்தார். இருந்தும் என்னை விமானத்திலோ,
படப்பிடிப்பிலோ சந்தித்தால் தனியாக மதிப்புக் கொடுத்துப்
பேசிக் கொண்டிருப்பார். நான் சொல்வதைக் கவனமாகக் கேட்பார்.
ரஜினிகாந்துக்கு தற்காலிக "நெர்வ்ஸ் பிரேக் டவுன்'' (நரம்பு
மண்டல பாதிப்பு) ஏற்பட்ட காரணங்களை, அப்போதே என்னால்
அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது.
பெங்களூரில் இரவு எட்டரை மணிக்குப் பாலசந்தர் படத்தின்
படப்பிடிப்பில் (தப்புத்தாளங்கள் என்று நினைக்கிறேன்)
சைக்கிள் செயின் சுழற்றிக் கொண்டிருக்கிறார்.
எட்டு நாற்பத்தைந்துக்கு, ஏணியை விலக்குவதற்கு இரண்டு
நிமிஷம் முன்னால் பெங்களூரில் விமானம் ஏறி, சென்னை போய்,
அங்கேயிருந்து ராத்திரி பன்னிரண்டு மணிக்கு மற்றொரு பிளேன்
பிடித்து சிங்கப்பூர் போய், அதிகாலையில் அங்கே `ப்ரியா'
சூட்டிங். மூன்று நாள் கழித்துத் திரும்பிப் பெங்களூர்
வந்து சைக்கிள் செயின் சுழற்றி விட்டு மறுபடி சிங்கப்பூர்!
இந்த மாதிரி அலைந்தால் ஒரு திபேத்திய லாமாவுக்குக்கூட "நெர்வ்ஸ்
ப்ரேக் டவுன்'' வந்து விடும்.''
இவ்வாறு சுஜாதா கூறினார்.
|