சென்னை அடையாறில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணி மண்டபம் திறப்பு விழா இன்று (30 September 2017) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:
'சிவாஜிகணேசன் ஒரு நடிகராக இருந்திருந்தால் மட்டும் கண்டிப்பாக அவருக்கு சிலை, மணிமண்டபம் அமைத்திருக்க மாட்டார்கள். அவர் நடிப்புத்துறையிலிருந்து, தன் நடிப்பு ஆற்றலிலிருந்து வரலாறு படைத்த சுதந்திர போராட்ட வீரர்களையும், சுதந்திரத்திற்கு பாடுபட்ட சரித்திர புருஷர்களையும், அவர்களுடைய வரலாற்றையும் படமாக்கி கடைகோடி மக்கள் வரைக்கும் சென்றார். 'சிவபுராணம்', 'கந்தபுராணம்' மாதிரி படங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்த்தார். கடவுள் மறுப்புக் கொள்கை உச்சத்தில் இருந்த போதே நெற்றியில் விபூதி போட்டு தன்னுடைய நடிப்பு ஆற்றலை மட்டுமே நம்பி உச்சத்தை தொட்டவர் சிவாஜி கணேசன். எனவேதான் அவருக்கு இந்த மணிமண்டபம்!'' என்று சொல்லிவிட்டு,
''இது சினிமாத்துறை, அரசியல் துறை இரண்டும் கலந்த விழா. சிவாஜி நடிப்பில் மட்டுமல்ல, அரசியலிலும் அவரது ஜூனியர்களுக்கு ஒரு பாடத்தை சொல்லி கொடுத்துப் போயிருக்கிறார். அவர் அரசியலில் தனிக்கட்சி ஆரம்பித்து, அவர் சொந்தத் தொகுதியிலேயே தோற்றுப்போனார். அது அவருக்கு நடந்த அவமானம் அல்ல. அந்த தொகுதி மக்களுக்கு நடந்த அவமானம். இதில் ஒரு செய்தியை அவர் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். அரசியலில் வந்து வெற்றியடைய வேண்டும் என்றால் சினிமா பெயர், புகழ், செல்வாக்கு மட்டும் போதாது. அதுக்கு மேல் ஏதோ ஒன்று இருக்க வேண்டும். அது மக்களுக்கு மட்டும்தான் தெரியும். எனக்கு சத்தியமாக தெரியாது!'' என்கிறார். அதற்கு பிறகு வந்த வசனங்கள்தான் வெகு சாமர்த்தியமாக கமலை நோக்கி வீசப்படுகிறது.
''அது கமல்ஹாசனுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். தெரிந்து இருந்தாலும் அதை எனக்கு சொல்ல மாட்டார். ஒருவேளை இரண்டு மாதத்துக்கு முன்னால் கேட்டிருந்தால் சொல்லியிருப்பாரோ என்னவோ? திரையுலகில் மூத்த அண்ணன்..நீங்க .. எங்ககிட்ட சொல்லனும்னு.. சொல்லுங்க நான் உங்க தம்பி அப்படி என்று சொன்னால் "கூட வா" சொல்றேன் என்கிறார் கமல்ஹாசன்.
|