அரசியல் அல்லது ஆன்மீகம் என்று எந்த வழியில் சென்றாலும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ரசிகர்களான நாங்களும் அவ்வழியே நடப்போம் என்பது தீர்மானமாக எடுக்கப்பட்டது.
வரமாட்டேன் என்பதை வெட்டவெளிச்சமாக அறிவித்து விட்டார் ரஜினி என்றாலும், ரசிகர்களின் மனநிலை இன்னும் முழுமையாக மாறியபாடில்லை.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தாலோ அல்லது ஆன்மீக வழியில் சென்றாலோ அவர் வழியில் ரசிகர்கள் பயனிப்போம் என்று தூத்துக்குடி மாவட்ட ரஜினிகாந்த் மக்கள் மன்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் ரசிகர்கள் முடிவு எடுத்துள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பயன முடிவை நிராகரித்ததை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் மக்கள் மன்றத்தின் மாவட்ட,மாநகர, ஒன்றிய பகுதிகளில் உள்ள ரசிகர்கள் கலந்துகொண்ட செயல் வீரர்கள் கூட்டம் ரஜினிகாந்த் மக்கள் மன்றத்தின் தூத்துக்குடி மாவட்ட தொழில்நுட்ப செயலாளர் விஜய் ஆனந்த் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.
இதில் நடிகர் ரஜினிகாந்த் வழியில் பயனிப்போம் என்று ரசிகர்கள் மத்தியில் முடிவு செய்யப்பட்டது. மேலும் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் அல்லது ஆன்மீகம் என்று எந்த வழியில் சென்றாலும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ரசிகர்களான நாங்களும் அவ்வழியே நடப்போம் என்று செயல் வீரர்கள் மற்றும் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.
|