ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் - சிறப்புத் தோற்றத்தில் தலைவர்
(Friday, 4th November 2022)
'பொன்னியின் செல்வன்' படத்தின் பிரம்மாண்டமான வசூல் வெற்றியை தொடர்ந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் 'லால் சலாம்' எனும் புதிய திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கிறார். இதன் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
'3', 'வை ராஜா வை' ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படம் 'லால் சலாம்'.
இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க, கதாநாயகனாக இளம் நட்சத்திர நடிகர் விஷ்ணு விஷால் நடிக்கிறார்.
இவருடன் நடிகர் விக்ராந்த் அழுத்தமான வேடத்தில் நடிக்கிறார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்துக்கு 'இசைப்புயல்' ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.
துடுப்பாட்ட விளையாட்டை மையப்படுத்தி தயாராகும் இந்த படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது.
மகளின் இயக்கத்தில் தந்தை நடிப்பதாலும், ஏராளமான ரசிகர்களையும் பார்வையாளர்களையும் கொண்ட துடுப்பாட்ட விளையாட்டை மையப்படுத்திய படைப்பு என்பதாலும், விஷ்ணு விஷால், விக்ராந்த் எனும் துடுப்பாட்ட வீரர்களே கதாநாயகர்களாக நடித்திருப்பதாலும், இந்த படத்தின் அறிவிப்பின்போது ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
மேலும், படத்தின் டைட்டில் லுக்கிற்கான போஸ்டர், ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருப்பதால் இணையவாசிகளின் கவனத்தை வெகுவாக ஈர்க்கிறது.