காலை எட்டு மணி, போய்ஸ் கார்டன்.
உலகமெங்கும் உள்ள www.rajinifans.com நண்பர்களின் வாழ்த்துக்ளையும் அன்பையும் தெரிவிக்கும் அடையாளமாக சூப்பர் ஸ்டாரின் அலுவலகத்தில் பொக்கே சமர்ப்பிக்கப்பட்டது.
காலை ஒன்பது மணி, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை.
வழக்கம்போல் நீளமான போஸ்டர்கள் சென்னை நகர வாசிகளை திரும்பிப் பார்க்க வைத்தன. முதல்முறையாக மெச்சூரிட்டியான வாசகங்களைக் கொண்ட போஸ்டர்கள்தான் இந்த முறை ஆச்சர்யம்.
காலை பத்துமணி, டிநகர் ராகவேந்திரர் கோயில்.
வழக்கம் போல் இந்த ஆண்டும் டி.நகர் மற்றும் கோடம்பாக்கம் ரஜினி ரசிகர் மன்றங்கள் சார்பில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம்.
மாலை ஏழு மணி, கலைவாணர் அரங்கம், சேப்பாக்கம்
வழக்கம்போல் மாலை நேரத்தில் ஒரு ஆர்க்கெஸ்ட்ரா கச்சேரி. காமராஜர் ஹால் கிடைக்காததால் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. ரஜினி ஹிட்ஸ் மட்டுமே. இம்முறை ரசிகர்கள் குடும்பத்தோடு வந்திருந்தது முக்கியமான விஷயம்.
|