தலைவர் பிறந்த நாளை அர்த்தமுள்ளதாக்கிய சோளிங்கர் ரசிகர்கள்!
சூப்பர் ஸ்டார் ரஜினியின் 58-வது பிறந்த தினத்தையொட்டி வேலூர் மாவட்டம் சோளிங்கரில் மிகச் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அமைப்பு ரீதியான பெரிய கட்சிகளையே மிரட்டும் வகையில் கட்டுப்பாட்டுடன் பிறந்த நாளைக் கொண்டாடினர்
சோளிங்கர் ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தினர்.
500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த பிரமாண்ட பிறந்த நாள் நிகழ்ச்சியை இரு பகுதிகளாக ஏற்பாடு செய்திருந்தனர்.
முதல் கட்டமாக, மும்பை தீவிரவாதத் தாக்குதல் மற்றும் தமிழகத்தில் கோரத் தாண்டவம் ஆடிய நிஷா புயலில் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அமைதி ஊர்வலமும் நடத்தப்பட்டது. சோளிங்கர் நகரையே திரும்பிப் பார்க்க வைக்கும் விதத்தில் அமைதியாகவும், கட்டுப்பாட்டுடனும் இந்த ஊர்வலம் நடைபெற்றது.
பஸ் நிலையத்திலிருந்து அண்ணா சாலை வழியாக ரசிகர் மன்றத்தினர் ஊர்வலமாக சென்று காந்தி சிலை அருகே மவுன அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து சோளிங்கர் அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு பால், பழம், ரொட்டி, பிஸ்கேட் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ரசிகர் மன்ற பொருளாளர் என்.ரவி தலைமை தாஙஅகினார். சோளிங்கர் ஒன்றிய செயலாளர் இளங்கேவன், ஆர்கே பேட்டை ஒன்றிய செயலாளர் பாண்டியன், சோளிங்கர் ஒன்றிய துணைத் தலைவர் சண்முகம், மார்லின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட தலைவர் ரஸ்சுதீன், செயலாளர் நீதி என்கிற அருணாச்சலம் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த ஊர்வலத்தில் சாரதி, ரவி, வேலு, எஸ்.என்.கணேஷ், வடிவேல், தாஸ், லோகேஷ், ரஜீத் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கண்சிகிச்சை முகாம்:
இரண்டாம் கட்டமாக கடந்த 14.12.2008 அன்று கோவை சங்கரா கண் மருத்துவமனையுடன் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.
இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று, தங்கள் கண்களை இலவசமாக பரிசோதனை செய்து கொண்டனர்.
நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. முழுமையான விவரங்கள் கிடைத்ததும் அதுபற்றி தெரிவிக்கப்படும்.
ரஜினி பிறந்த நாள் பற்றிய விரிவான செய்திகள் தினத்தந்தி மற்றும் மாலைமலர் நாளிதழ்களில் விரிவாக வந்திருந்தது. அந்த கட்டிங்குகளையும் இணைத்துள்ளோம்.
-எஸ்.சங்கர்
படங்கள் ஏற்பாடு: எஸ்.என்.கணேஷ்




<