சென்னை, மார்ச். 16 "சிவாஜி' படத்தை ரஜினி ரசிகர்கள் முதல் 5 நாள்களுக்குள் பார்க்கும் வகையில் ரசிகர் மன்றத்துக்கு டோக்கன் வழங்கப்படுகிறது. ஒரு டோக்கனின் விலை ரூ.1600.
"சிவாஜி' படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் பல ஏற்பாடுகள் ரஜினி மன்றத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல், ரசிகர்கள் முதல் 5 நாள்களுக்குள் படத்தைப் பார்க்கும் வகையில் ரூ.1600-க்கு, பதிவு செய்யப்பட்ட ரசிகர் மன்றங்களுக்கு தலைமை ரசிகர் மன்றம் டோக்கன் வழங்கும்.
ஒரு டோக்கனுக்கு 20 டிக்கட்டுகள் வழங்கப்படும். ஒரு நாளுக்கு 4 டிக்கட்டுகள் வீதம் ஐந்து நாள்களுக்கு இந்த டிக்கட்டுகளைப் பயன்படுத்தி படத்தைப் பார்க்கலாம். டிக்கட்டுகளுக்கு ஆகும் ஆயிரம் ரூபாயைத் தவிர்த்து, எஞ்சியுள்ள 600 ரூபாய் டெபாசிட்டில் வைக்கப்பட்டு, பின்னர் திருப்பித் தரப்படும்.
இந்த டோக்கன்களைத் தவறாகப் பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை ரசிகர் மன்றம் எச்சரித்துள்ளது. பதிவு செய்யப்பட்ட ரசிகர் மன்றங்களுக்கு மட்டுமான இந்த டோக்கனைப் பெற கடைசி நாள் 31.03.07. இது தொடர்பான விவரங்கள் சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தின் பின்புறம் உள்ள பகுதியில் போஸ்டராக ஒட்டப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது.
|