‘கோடியில் ஒருவன்’ ரசித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’!!
Saturday January 16, 2010
செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ரீமாசென் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகியிருக்கும் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் சிறப்பு காட்சி சூப்பர் ஸ்டாருக்காக ஏ.வி.எம். ப்ரீவ்யூ தியேட்டரில் திரையிடப்பட்டது.
தயாரிப்பாளர் ரவீந்திரன், ஹீரோ கார்த்தி உள்ளிட்ட படக்குழுவினர் அவரை வரவேற்றனர்.
படத்தை பார்த்து விட்டு, கார்த்தியின் நடிப்பை வெகுவாக பாராட்டினார் கோடியில் ஒருவன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். படத்தின் டைரக்டர் செல்வராகவன் பின்னர் வந்து சேர்ந்துகொண்டார்.
ஆயிரத்தில் ஒருவனை பாராட்டிய கோடியில் ஒருவன். சரி தானே?
விஷேஷ படங்கள் உங்களுக்காக…
ட்ரைலர் பார்த்து, பாடல்களை கேட்டு… கோவா டீமை உற்சாகப்படுத்திய சூப்பர் ஸ்டார்!
Tuesday January 19, 2010
‘கோவா’ சிறப்புக் காட்சியில் சூப்பர் ஸ்டார்!
Friday January 29, 2010
கோவா படத்தின் சிறப்புக் காட்சி சூப்பர் ஸ்டாருக்காக பிரதேயேகமாக திரையிடப்பட்டது. சூப்பர் ஸ்டார் & அவரது குடும்பத்தினர் மற்றும் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு உள்ளிட்ட கோவா டீம் இந்த பிரத்யேக காட்சியை கண்டுகளித்தனர்.
அடுத்த நாள் நடைபெற்ற சிறப்புக் காட்சிக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் வந்திருந்தனர்.
நகைச்சுவையோடு கூடிய ஒரு பொழுதுபோக்கு சித்திரமாக கோவா வந்திருப்பதாக கூறப்படுகிறது.
பிரத்யேக புகைப்படங்கள் முதன் முதலில் நமது தளத்தில்…. உங்களுக்காக!!
ஒய்.ஜி.மகேந்திராவின் பிறந்த நாள் விழாவில் சூப்பர் ஸ்டார்
Saturday January 23, 2010
சூப்பர் ஸ்டாரின் நெருங்கிய உறவினரும் பிரபல நடிகருமான திரு.ஒய்.ஜி.மகேந்திரா தனது 60 வது பிறந்த நாள் விழாவை தனது சொந்த ஊரில் கொண்டாடினார். மகேந்திராவின் மகள் மதுவந்தியும் மருமகன் அருணும் இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். பிறந்த நாள் கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக பின்னர் சென்னையில் மகேந்திரா விருந்தளித்தார். பிரபல நட்சத்திரங்களும் திரு.மகேந்திராவின் நெருங்கிய நண்பர்களும் கலந்துகொண்டு மகேந்திராவை வாழ்த்தினர்.
|