சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகள் செல்வி.சௌந்தர்யாவின் திருமண நிச்சயதார்த்தம் சென்னை பார்க் ஷெராட்டன் ஓட்டலில் புதன் மாலை நடைபெற்றது.
இரு குடும்பத்தாரின் நண்பர்களும் உறவினர்களும் முக்கியஸ்தர்களும் திரளாக பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
பட்டு பைஜாமா குர்தா உடுத்தியிருந்தார் தலைவர். ஒரு நல்ல தகப்பனாக விருந்தினர்களை வரவேற்று, உபசரித்து அங்குமிங்கும் ஓடியாடி பம்பரமாக சுழன்றுகொண்டிருந்தார்.
முதல்வர் கலைஞர் தமது குடும்பத்துடன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும், திரையுலக முக்கியஸ்தர்களும் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். இது முழுக்க முழுக்க குடும்ப நிகழ்ச்சியாக நடத்தப்பட்டதால் ரசிகர்களோ பத்திரிக்கையாளர்களோ நிகழ்ச்சியில் அழைக்கப்படவில்லை. மணமக்கள் வீட்டார் ஏற்பாடு செய்திருந்த போட்டோக்ராபர்ஸை தவிர வேறு புகைப்படக்காரகள் அனுமதிக்கப்படவில்லை.
தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் உரிய நேரத்தில் பத்திரிக்கைகளுக்கு நேற்று இரவு அனுப்பிவைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் வருமாறு: சூப்பர் ஸ்டாரின் நண்பர்கள், துக்ளக் சோ ராமசாமி, இயக்குனர் ஷங்கர், அஜீத், ஷாலினி அஜீத், பிரபு, இயக்குனர் சிகரம் கே.பி, நடிகர் அலெக்ஸ், மோகன் பாபு, முத்தப்பா, உள்ளிட்ட சிவாஜி குடும்பத்தினர், நடிகர் கமல் ஹாசன், விஜயகுமார், சன் டி.வி. இயக்குனர் ஹன்ஸ்ராஜ் சக்சேனா மற்றும் பலர்.
|