Related Articles
நலத்திட்ட உதவிகள், பொதுக்கூட்டம், பாலாபிஷேகம் என தூள் கிளப்பிய சைதை ரஜினி ரசிகர் நற்பணி விழா!
முள்ளும் மலரும் வந்து 31 வருசம் ஆகுது ...
உயிரைக் குழைத்து ஓவியம் வரைந்தேன் - கமலுக்கு ரஜினியின் கண்ணீர் பரிசு
இந்தியா டுடே, இந்தியன் எக்ஸ்பிரஸ் ... தொடரும் சூப்பர் ஸ்டாரின் சாதனை!
சங்கத் தமிழ் பேரவையின் முதல்வர் பாராட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி
சௌந்தர்யா ரஜினி - அஸ்வின் நிச்சயதார்த்தம்! அசத்தல் படங்கள் !!
கலையுலக விழா நேரடி ரிப்போர்ட்
ரஜினி கலந்துகொண்ட... ஒய்.ஜி.மகேந்திராவின் பிறந்த நாள் ... கோவா ... ஆயிரத்தில் ஒருவன் சிறப்பு காட்சி
ஜக்குபாய் பிரஸ் மீட் ... திரைத்துறையினர் மனு ... ஜக்குபாய் பிரீமியர் ... சூப்பர் ஸ்டார் ரஜினி
புனேவிலும் சூப்பர் ஸ்டாரை காண அலைமோதும் கூட்டம் - எந்திரன் ஷூட்டிங்

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
ஆஷ்ரம் பள்ளியின் 19வது ஆண்டு விழா - சூப்பர் ஸ்டார் ரஜினியின் உரை
(Friday, 23rd April 2010)

ஆஷ்ரம் பள்ளியின் 19 வது ஆண்டு விழா (22/04/2010) சென்னை காமராஜர் அரங்கத்தில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலக முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். மூத்த கலைஞர்கள் ஆஷ்ரம் பள்ளி சார்பாக திருமதி.லதா ரஜினி அவர்களால் கௌரவிக்கப்பட்டனர்.

(இவ்விழாவைப் பற்றிய புகைப்படங்களும், செய்தியும் நேற்றைய Time of India நாளிதழில் வெளியானது. Quick Update #1 இல் அதை நாம் ஏற்கனவே அளித்துவிட்டோம். இருப்பினும், சூப்பர் ஸ்டார் ஆற்றிய உரை மற்றும் பிற முக்கியப் பிரமுகர்களின் உரை, நிகழ்ச்சி விபரங்கள் புகைப்படங்களோடு வெளியாவது நமது தளத்தில் மட்டுமே.)

திருமதி.லதா ரஜினி அவர்களின் சீரிய முயற்சியால் கடந்த 1991 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட ஆஷ்ரம் பள்ளி முற்றிலும் மாறுபட்ட கல்வி முறையை (TASSC) போதித்து வருகிறது. இப்பள்ளியின் ஆண்டுவிழா ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. ஆஷ்ரம் பள்ளி சார்பாக மூத்த கலைஞர்கள், கல்வியாளர்கள், கலைத் துறையில் மேன்மை பெற்று விளங்குபவர்கள் ஆகியோரை தேர்ந்தெடுத்து அவர்களை கௌரவித்து வருகின்றனர்.

வரவேற்புரை மற்றும் மாணவர்களின் கலைநிகழ்சிகள்

இந்த ஆண்டு, பள்ளியின் 19 வது ஆண்டு விழா காமராஜர் அரங்கில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளியின் நிறுவனர் திருமதி. லதா ரஜினிகாந்த் அவர்கள் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார். அதை தொடர்ந்து நடைபெற்ற ஆஷ்ரம் பள்ளி மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வண்ணம் சிறப்பாக நடைபெற்றது.

பீஷ்ம விருதுகள் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள்

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி, இசை வல்லுநர் டாக்டர்.எம்.பாலமுரளிகிருஷ்ணா, திருமதி.ரங்கா நாயகி ஜெயராமன், திரு.சித்ராலயா கோபு, திரு. கே.வி. சேஷாத்ரிநாத சாஸ்த்ரிகள், ஆகியோருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பீஷ்ம விருதுகளை வழங்கினார். பஹ்சம்பெரும் இந்தி நடிகர் தேவ் ஆனந்த் மற்றும் வைஜயந்தி மாலை பாலி ஆகியோருக்கு வாழ்நாள் நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற னைவருக்கு பதக்கங்கள், பொற்கிழி மற்றும் நினைவுப் பரிசுகளை திருமதி.லதா ரஜினி அவர்கள் வழங்கி கௌரவித்தார்.

ஆஷ்ரம் பள்ளி மாணவர்கள், திரு.தேவ் ஆனந்த் நடித்த பிரபல இந்தி பட பாடல்களை கலை நிகழ்ச்சிகளாக நடத்தி அவரை கௌரவித்து அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். அதே போல, டாக்டர். வைஜயந்திமால அவர்கள் நடித்த பிரபல இந்தி, தமிழ் பட பாடல்களையும் கலை நிகழ்ச்சிகளாக நடத்தி அவரை நெகிழவைத்தனர்.

“மனிதாபிமானத்திற்கும் எளிமைக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கும் சூப்பர் ஸ்டார்” - சௌகார் ஜானகி

இவ்விழாவில் பேசிய திருமதி.சௌகார் ஜானகி கூறியதாவது, “நான் மதிப்பிற்குரிய அமரர். எம்.ஜி.ஆர், மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகியோரிடம் நடித்த நாட்களை இம்மேடையில் நினைவுகூர்கிறேன். இந்த தருணத்தில் எனது மதிப்பிற்குரிய திரு.கே.பாலச்சந்தர் அவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். அதேபோல ஏ.வி.எம். ஸ்டூடியோஸ் நிறுவனர் திரு.ஏ.வி.மெய்யப்ப செட்டியார், சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனர் சுந்தரம், அமரர் வாசன் ஆகியோர் ஏன் நினைவை விட்டு நீங்காதவர்கள். மனிதாபிமானத்திற்கும் எளிமைக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கிக் கொண்டு இருக்கும் நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு தாயாக நான் நடித்த தீ, சிவா போன்ற படங்கள் என்றென்றும் மறக்க முடியாதவை. அதே போல், இப்பள்ளியை திறம்பட நிர்வகித்து இது போன்ற விழாக்கள் மூலம் எங்களை எலாம் கௌரவிக்கின்ற திருமதி லதா ரஜினி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி” என்றார் உணர்ச்சிவசப்பட்டு.

“ஒரு குழந்தையாக மாறி இப்பள்ளியில் படிக்க ஏங்குகிறேன்” - சித்ராலயா கோபு

திரைப்பட எழுத்தாளர் சித்ராலயா கோபு பேசுகையில், “என்னை இங்கு அழைத்து கௌரவித்த திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கும் திருமதி.லதா ரஜினிகாந்த் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. எனக்கு வயதாகிவிட்டது. இல்லை என்றால் இப்பள்ளியில் 1 ஆம் வகுப்பிலிருந்து மீண்டும் படிக்க முடியுமா என்று ஏங்குகின்றேன். அந்த அளவுக்கு இவ்விழாவும், இம்மாணவர்கள் கலை நிகழ்சிகளும் என்னை பாதித்துவிட்டது. அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றார்.

“எனக்கும் ரஜினிக்கும் இடையே உள்ள நட்பு அபூர்வமானது, ஆழமானது” - தேவ் ஆனந்த்

பலத்த கரவொலிக்கிடையே தேவ் ஆனந்த் உரையாற்றியதாவது, “முக்கிய நகரமான சென்னையில் இந்த மாலை வேளையில் உங்களையெல்லாம் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இப்பள்ளியை சிறப்பாக நிர்வகித்து வரும் லதா ரஜினி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். எனது சகோதரர் சூப்பர் ஸ்டார் ரஜினி ஜி அவர்கள் உயர்ந்த இடத்தில் இருந்தாலும் எனக்கும் அவர்கட்கும் இடையே உள்ள நட்பு அபூர்வமானது ஆழமானது ஆகும். இந்திய திரைப்பட நடிகர்களின் அனைவரின் அன்பையும் பெற்ற சூப்பர் ஸ்டாருக்கு எனது வாழ்த்துக்கள்” என்றார்.

“ரஜினியின் எளிமையும் பிறருக்கு உதவும் எண்ணமும் என்னை பிரமிக்க வைக்கின்றன” -  வைஜயந்தி மாலா

டாக்டர் வைஜயந்தி மாலா பாலி அவர்கள் உரையாற்றும்பொழுது “இவ்வளவு பெரிய உயர்ந்த இருந்தாலும் சூப்பர் ஸ்டார் அவர்களின் எளிமையும் பிறருக்கு உதவும் எண்ணமும்தான், அவரிடத்தில் என்னை பிரமிக்க வைத்தவை. எனது மகனின் திருமணத்தில் அவரும் அவரது குடுமபத்தினரும் கலந்து கொண்டு வாழ்த்தியது என்னால் மறக்கமுடியாது. லதா ரஜினி அவர்களின் கல்விப் பணி மேன்மேலும் தொடர எனது வாழ்த்துக்களை தெறிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

“மாப்பிள்ளை படத்தில் எனக்கு மாமியாராக நடிக்க மறுத்துவிட்ட வைஜயந்திமாலா” - சூப்பர் ஸ்டார் மலரும் நினைவு!

இறுதியில் அனைவரின் பலத்த கரவொலிக்கிடையே சூப்பர் ஸ்டார் உரையாற்றியதாவது, “நான் பெரிதும் மதிக்கக்கூடிய மூத்த கலைஞர்களில் தேவ் ஆனந்த் முக்கியமானவர். இந்த வயதிலும் இவ்வளவு இளமையாக அவர் இருப்பதன் ரகசியம் தான் எனக்கு இன்னும் புரியவில்லை. எங்களது அழைப்பை ஏற்று வருகை தந்தது எங்களை கௌரவப்படுத்தியமைக்கு அவருக்கு மனமார்ந்த நன்றி. அடுத்து டாக்டர். வைஜயந்தி மாலா பாலி அவர்களைப் பற்றி நான் இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும். எவ்வளவு பெரிய மூத்த நடிகை அவர்கள்.. அவரது நடிப்பாற்றல் மற்றும் டான்ஸ் ஆகியவைகளை பார்த்து நான் வியந்திருக்கிறேன். முக்கியமான இன்னொன்றை நான் இந்த மேடையில் சொல்லியே ஆகவேண்டும். நான் நடித்த ‘மாப்பிள்ளை’ படத்தில் எனக்கு மாமியாராக நடித்தவர் ஸ்ரீவித்யா. ஆனால் அந்த கேரக்டரில் முதலில் தயாரிப்பாளர்கள்  ஒப்பந்தம் செய்ய நினைத்தது வைஜயந்தி மாலா அவர்களை தான். படத்தின் தயாரிப்பாளர் எனது நண்பர் நடிகர் சிரஞ்சீவி வைஜயந்தி அவர்களை ஒப்பந்தம் செய்வதற்காக ஒரு பெருந்தொகையை செக் போட்டு என்னிடம் கொடுத்தார். அது எவ்வளவு பெரிய தொகை என்று சொன்னால் தலையே சுற்றிவிடும். ஆனால் வைஜயந்தி அவர்களை எனக்கு மாமியாராக நடிக்க அணுகி விஷயத்தை சொன்னபோது “உங்களுக்கு எதிரான, உங்களுடன் மோதும் ஒரு கேரக்டரில் நடிக்க முடியாது” என்று கூறி தன்னடக்கமாக மறுத்துவிட்டார். அப்பேர்ப்பட்ட ஒரு உயர்ந்த நடிகை கலந்துகொண்டு வாழ்த்தியது நமக்கு பெருமை. இங்கு நடைபெற்ற இப்பள்ளி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் மிகவும் சிறப்பாக இருந்தது. இந்த இளம் வயதில் இத்துனை சிறப்பாக ஒவ்வொருவரும் ஆடியதும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியதையும் கண்டு நான் ஆடிப்போய்விட்டேன்.” என்றார்.

லதா ரஜினி திடீர் மயக்கம் - தலைவர் உருக்கம்

இறுதியில் திருமதி.லதா ரஜினி நன்றியுரை ஆற்றியபோது, அவருக்கு லேசான தலைசுற்றல் மற்றும் மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து விழா அரங்கம் பரபரப்படைந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினி உடனே லதா அவர்களிடம் இருந்து மைக்கை வாங்கி அவரது உரையை தொடர்ந்தார். “இவ்விழா இத்துனை சிறப்பாக நடைபெறுவதற்கு காரணம் என்னுடைய மனைவி லதா தான் என்றாலும், அவருக்கு உடல் நலம் சற்று சரியிலாத காரணத்தால் “எல்லாத்தையும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நீ ரிலாக்ஸ்ஸா இரு” என்றோம். ஆனாலும் அவர் பிடிவாதமாக அனைத்தையும் தனது தோளில் போட்டுக்கொண்டு இவ்விழாவை சிறப்பாக நடத்தியுள்ளார். அவருக்கு என் நன்றி. பாராட்டுக்கள். மற்றும் வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கும், பள்ளி மாணவர் மாணவியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். (மருத்துவ சிகிச்சைக்கு பிறகு, தற்போது லதா ரஜினி அவர்கள் நலமாக இருக்கிறார்கள்.)

இவ்விழாவில், சூப்பர் ஸ்டாரின் சகோதரர் திரு.சத்தியநாராயணா ராவ் கெய்க்வாட், இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர், மற்றும் திரையுலகப் பிரமுகர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதுமட்டுமன்றி, ஆஷ்ரம் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பள்ளியில் தாங்கள் படித்த விதம், வளர்ந்த விதம், பள்ளி போதித்த  ஒழுக்கக் கட்டுபாடுகள் ஆகியவற்றை நினைவு கூர்ந்தனர். பள்ளியின் முன்னாள் மாணவர்கள் என்ற முறையில் சூப்பர் ஸ்டாரின் மகள்கள் ஐஸ்வர்யா தனுஷும், சௌந்தர்யாவும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். சௌந்தர்யா தனது வருங்காலக் கணவர் அஸ்வினுடன் அமர்ந்து நிகழ்சிகளை ரசித்தார்.






 
0 Comment(s)Views: 558

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information