Related Articles
திருவிழா ரேஞ்சுக்கு எந்திரன் இசை வெளியீட்டை கொண்டாடிய ரசிகர்கள்
Hindi Robo audio launch
Endhiran (Robot) audio release in Telugu
மலேசியாவில் நடைபெற்ற எந்திரன் இசை வெளியீட்டு விழா
ஆஷ்ரம் பள்ளியின் 19வது ஆண்டு விழா - சூப்பர் ஸ்டார் ரஜினியின் உரை
நலத்திட்ட உதவிகள், பொதுக்கூட்டம், பாலாபிஷேகம் என தூள் கிளப்பிய சைதை ரஜினி ரசிகர் நற்பணி விழா!
முள்ளும் மலரும் வந்து 31 வருசம் ஆகுது ...
உயிரைக் குழைத்து ஓவியம் வரைந்தேன் - கமலுக்கு ரஜினியின் கண்ணீர் பரிசு
இந்தியா டுடே, இந்தியன் எக்ஸ்பிரஸ் ... தொடரும் சூப்பர் ஸ்டாரின் சாதனை!
சங்கத் தமிழ் பேரவையின் முதல்வர் பாராட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2024 2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
திரைப்பட நகர அடிக்கல் நாட்டு விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினி
(Sunday, 22nd August 2010)

சென்னையை அடுத்த பையனூரில் திரைப்பட நகரம் அமைக்க முதல்- அமைச்சர் கருணாநிதி 96 ஏக்கர் நிலம் ஒதுக்கியுள்ளார். நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் திரைத்துறையில் பணியாற்றும் பல்வேறு தொழில் நுட்ப கலைஞர் களுக்கு இங்கு 15 ஆயிரம் வீடுகள் கட்டி கொடுக்கப்படுகின்றன. 4 படப்பிடிப்பு தளங்கள், டப்பிங், ரீ ரிக்கார்டிங் தியேட்டர்கள், நீச்சல் குளம், விளையாட்டு திடல் போன்ற அனைத்தும் கட்டப்பட உள்ளன.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு நடந் தது. (பையனூரில் நடக்க இருந்த விழா மழை காரணமாக ரத்து செய்யப்பட்டு, அதற்க்கு பதில் சென்னை பல்கலைகழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்றது.) முதல்-அமைச்சர் கருணாநிதி இதில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சி கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. (இது பற்றிய அப்டேட் நமது தளத்தின் Flash Scrolling இல் அறிவிக்கப்பட்டது. அதே போல, நமது Twitter லும் (twitter.com/thalaivarfans) அப்டேட் செய்யப்பட்டது.

விழா துளிகள்:

* தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினி பளிச்சென வெள்ளை வேட்டி சட்டையில், முதல்வருக்கு அருகே இருந்த நாற்காலியில் காணப்பட்டார்.

* பெரும்பாலான நேரங்கள் சூப்பர்ஸ்டார் யோகமுத்திரையுடன் காணப்பட்டார்.

* தாசரி நாராயணராவ் பேசும்போது, இந்தியாவின் எவரெஸ்ட் சிகரம் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களே என்று குறிப்பிட்டார்.

* வாகை சந்திரசேகர் பேசுவதற்கு முன்பு வரை பேசிய அனைவரும் ஒவ்வொருவரும் ஒவ்வொருவரின் பெயரை குறிப்பிட்டு பேசினார்கள். அதில் சூப்பர் ஸ்டாரின் பெயரை குறிப்பிடும்போது கைத்தட்டல் பலமாக இருந்தது. ஆனால் என்ன காரணத்தினாலோ, பொத்தாம் பொதுவாக அனைவரின் பெயரை குறிப்பிட்டு கூறிவிட, அதற்க்கு பின்பு வந்தவர்கள் அதே பாணியை பின்பற்றினார்கள்.

* நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர், எந்திரனே, எங்களை மயக்க வந்த மந்திரனே என்று கூறி நான் யாரை குறிப்பிடுகிறேன் என்று தெரியும்… சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களை பேச வருமாறு அழைக்கிறேன் என்று பலத்த கரகோஷத்துக்கிடையே குறிப்பிட்டார்.

* நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதால், சூப்பர் ஸ்டாருக்கு கிடைத்த கைத்தட்டல்களை எந்த வித எடிட்டிங்கும் இல்லாது கேட்க முடிந்தது.

* என்னை வாழ வைத்த தெய்வங்கள் தமிழக மக்களே என்று தலைவர் சொன்னபோது எழுந்த கைதட்டல் - மெய்சிலிர்க்கவைக்கும் ரகம்.

* சூப்பர் ஸ்டார் மேடையில் அமர்ந்திருந்த வி.ஐ.பி.க்கள் முதல் முன் வரிசையில் அமர்ந்திருந்த அமைச்சர்கள் வரை ஒருவர் பெயரை கூட விடாது நிறுத்தி நிதானமாக கூறினார். முதல்வரும் அப்படியே. வாகை சந்திரசேகரின் பெயரை மறக்காது குறிப்பிட்டார் தலைவர்.

* மம்மூட்டி பிரமாதமாக பேசினார். அவரின் பேச்சு மிகவும் யதார்த்தமாக இருந்தது. மம்மூட்டி பேசும் போது இரண்டு சந்தர்ப்பங்களில் ரஜினியின் பெயரை குறிப்பிட்டார். (குட் ஸ்பீச் மம்மூட்டி சார்.)

* சரத் பேச்சு டைமிங்காக இருந்தது. நல்ல முன்னேற்றம் சரத்.

* பாரதிராஜா பேசும்போது, நடிகர்களும் நாடாளமுடியும், சினிமா கலைஞர்களும் நாடாள முடியும் என்பதை நிரூபித்தவர் கலைஞர் என்று அவர் முடிக்கும் முன்பே… அதாவது நடிகர்கள் நாடாள என்று பாராதிராஜா பேசிக்கொண்டிருக்கும்போதே, ரஜினியின் முகத்தை குளோசப்பில் காட்டியது கேமிரா. (சபாஷ்!) நடிகர்கள் நாடாள என்ற வார்த்தையை குறிப்பிட்டாலே அது சூப்பர் ஸ்டார் தான் என்று முடிவே செய்துவிட்டார்கள் போல.

* நிலமோ வீடோ வாங்கப் போய், சாக்குபோக்கு சொல்லி அதை தட்டிகழிப்பவர்களுக்கு சூப்பர் ஸ்டார் கூறிய அறிவுரை நெத்தியடி ரகம்.

* வி.சி.குகநாதன் பேசும்போது, “தொழிலாளர்களுக்கு என்றால் நான் எப்போதும் அங்கே  இருப்பேன் என்று கூறி விழாவிற்கு வர ஒப்புக்கொண்டார் ரஜினி” என்று குறிப்பிட்டார்.

* முன்னதாக உரை நிகழ்த்த வந்த சூப்பர் ஸ்டாருக்கு ராமநாராயணன் பொன்னாடை போர்த்தியபோது, வி.சி.குகநாதன் ரஜினியிடம் இறுக்கமாக முகத்தை வைத்து என்னவோ கூறினார். தலைவர் அதை அமைதியாக கேட்டுக்கொண்டார்.

* முதல்வரின் குடும்பத்தினரின் திரையுலக ஆதிக்கத்தை கிண்டல் செய்து ஏதோ பத்திரிகை கார்ட்டூன் வெளியிட்டுவிட்டதாம்.  முதல்வர் பொருமி தீர்த்துவிட்டார். தன் பொருமலில் சம்பந்தமேயில்லாது ரஜினியின் பெயரை அவர் இழுத்தது அதிர்ச்சி + ஆச்சரியம். (தன் வாதத்திற்கு சப்போர்ட்டாகத் தான் என்றாலும், அந்த இடத்தில் சூப்பர் ஸ்டாரை முதல்வர் இழுத்தது சரியல்ல என்பது பெரும்பாலான ரசிகர்களின் கருத்து.)

சூப்பர் ஸ்டார் பேசியதிலிருந்து:

“மத்திய அமைச்சர் தாசரி நாராயணராவ் தெலுங்கில் பேசினார். அப்போதும் மக்கள் கைதட்டுகிறார்கள். அதுமட்டுமல்ல எந்த மொழியில் பேசினாலும் கைதட்டுகிறார்களே… எல்லா மொழியும் இந்த மக்களுக்கு தெரியுமா என்று என்னிடம் தேந்திரா கேட்டார்.

அதற்கு நான் சொன்னேன்,அவர்களுக்கு தெலுங்கு புரியும், ஆங்கிலம் புரியும், மலையாளம் புரியும், தமிழர்களுக்கு தெரியாத பாஷையே கிடையாது. அவர்களுடைய அறிவுக்கு எட்டாத விஷயமில்லை. அவர்களுடைய மனங்களை புரிந்து ஜெயித்து விட்டால், அவர்களிடம் பெயர் வாங்கிவிட்டால்  இந்தியாவிலேயே பெயர் வாங்கின மாதிரி என்று சொன்னேன். இது சினிமாவாகட்டும், அரசியலாகட்டும் இது எல்லாத்துறைக்குமே பொருந்தும்.

இந்த திட்டம் சீக்கிரம் நடக்கும்னு எதிர்பார்க்கலை கலைஞர் ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா அது முடிவுதான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நான் மும்பை, பெங்களூர், டெல்லினு நிறைய நகரங்களுக்கு போறேன். அங்கெல்லாம் கலைஞர் பற்றிதான் பேசுறாங்க. இந்த வயதில் எப்படி இவ்வளவு சுறுசுறுப்பு அவரை பார்க்கும் போது ஒரு புத்தகத்தில் மகான் சொன்னது ஞாபகம் வருகிறது. சுயநலத்துக்காக வேலை செய்றவங்க சீக்கிரம் சோர்வு ஆயிடுவாங்க. பொது நலத்துக்காக வேலை செய்ற வங்க சோர்வடைய மாட்டாங்க கலைஞர் பொது நலத்துக்காக உழைப்பதால் சோர்வாகல. உங்களுக்கு இந்த விழாவில் நன்றி சொல்லிக்கிறேன்.

பையனூரில் இவ்விழா நடக்காதது வருத்தம் தான். கட்டிடம் கட்டிய பிறகு திறந்து வைக்க வேண்டும்.

சிலர் பணப் பிரச்சினை இருக்கு… 99 வருடம் லீஸ்… என்கிறாங்க. தூரமா இருக்கு என்றும் சொல்கிறார்கள். குறை சொல்லிக்கிட்டு இருக்காம சட்டுன்னு வாங்கி போடுங்க. யாராவது நிலம், வீடு வாங்க போய் அதை பார்த்து விட்டு வேண்டாம் என்று திரும்பி வந்தால் மூதேவி போறான் பாரு. இவனுக்கு வீடு நிலம் கிடைக்கவே கிடைக்காது என்று அவைகள் சொல்லும். எனவே வீடு நிலத்தை வேண்டாம் என்று சொல்லக் கூடாது. பாங்கியில் பணம் கிடைக்க இங்கேயே உத்தரவு போட்டாச்சு. பெரியார் சமத்துவபுரம் என்பார்கள்.இது கலைஞர்களின் சமத்துவபுரமாக இருக்கும்.

இவ்வாறு ரஜினி பேசினார்.

விழாவில் நடிகர் மம்முட்டி பேசியதாவது:-

சினிமா ஆசையில் சென்னைக்கு நிறைய பேர் வர்றாங்க யாரும் பாலசந்தர், பாரதிராஜா மாதிரியோ ரஜினி, கமல் மாதிரியோ ஆக முடியறது இல்ல. நிறைய பேர் தோற்கிறார்கள். ஆனால் யாரும் சிங்கார சென்னையை விட்டு போறது இல்ல. இங்கேதான் வேலை செய்றாங்க புரொடக்ஷன் பாய் கிட்ட கேட்டா கூட ஹீரோ வாகனும்னு வந்தேன் என்பார். சினிமாவை நேசிச்சி தோற்றுப் போன வங்களுக்கு யாரும் இது வரை எதுவும் செய்தது இல்ல. அவர்களுக்கு பாதுகாப்பு இல்ல. இந்த திட்டம் அவர்களுக்கு உதவும் இது கலைஞர் நகரம் அல்ல. கலைஞர்களின் நகரம். கலைஞர் இருக்கிற விழாக்களை நான் தவற விடுறது இல்லை இந்த நோன்பு நாளில் கூட காலையில் எழுந்து இங்கு வந்து விட்டேன். இப்படி யொரு புராஜக்ட்டை எந்த மாநிலத்திலும் பார்த்தது இல்லை. இப்படி நடந்தால் ஆயிரம் கேள்வி கேட்பார்கள். ஊழல் என்பார்கள். நடக்காமல் இருக்க வேலை பார்ப்பார்கள். இங்கு அது மாதிரி இல்லை. அப்படி கேட்பவர்களையெல்லாம் கலைஞர் சமாளித்து இருக் கிறார். கலைஞர் இருக்கும் வரை கலைஞர் கருணாநிதி எல்லோரது மனதிலும் இருக்க வேண்டும்.

இவ்வாறு மம்முட்டி பேசினார்.

விழாவில் முதல்-அமைச்சர் கருணாநிதி பேசியதாவது:-

திரைப்பட கலைஞர்களுக்கு பையனூரில் 15 ஆயிரம் வீடுகள் தயார் ஆகின்றன. ராமநாராயணன், வி.சி.குகநாதன் போன்றோர் எடுத்த முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக இது கிடைத்துள்ளது.

திரைப்படத்துறையில் 60 ஆண்டுகளுக்கு மேலாக எனக்கு பற்று உண்டு கருணாநிதிக்கு கலைத் துறையால் பெயரா அரசியல் துறையால் பெயரா என்று பட்டிமன்றம் நடத்தும் அளவுக்கு தொடர்பு இருக்கிறது. கலை, அரசியல் இரண்டிலும் தான் எனக்கு அது கிடைத்து இருக்கிறது.

திரைப்படத் துறையில் நடிகர்களை மாத்திரம் பார்க்காமல் வியர்வை சிந்தும் தொழிலாளர்களும் பாடுபடும் பாட்டாளிகளுக்கும் கவலை போக்க ஏதாவது செய்ய வேண்டும் என்ற உணர்வு பல ஆண்டுகளாக என் மனதை வருத்தியது. ஸ்டூடியோக்களில் பெரிய ஆரம்பர வீடுகட்டுகிறார்கள். படக்காட்சிகளுக்காக அவை கட்டப்படுகின்றன. அவர்கள் சொந்த வீடுகளில் வாழ முடிகிறதா? என்றால் இல்லை.

அப்படி வீடு கிடைக்காத காரணத்தினால் திரைப்பட தொழிலாளர்கள் சார்பில் அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி என்னிடம் கோரிக்கை வைத்து நிறைவேற்றி தருமாறு கேட்டனர். அவர்கள் கோரிக்கைகளை முடிந்த வரை நிறைவேற்றி தரும் அரசாக தி.மு.க. அரசு இருக்கிறது. ஏற்கனவே பல சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

வெளிப்புற படப்பிடிப்பு கட்டணம் அதிகமாக உள்ளது. குறைக்க வேண்டும் என்று கேட்டனர். தொல் பொருள் ஆய்வு பகுதிகளில் ஒரு நாள் கட்டணம் ரூ.5 ஆயிரம் என்று இருந்தது. ஏனைய பகுதிகளில் ரூ.2500 என்று இருந்தது. அதனை ரூ.500 ஆக குறைத்து உத்தரவிட்டேன். ராஜாஜி ஹாலில் படப்பிடிப்பு நடத்த தி.மு.க. ஆட்சியில் ரூ.1000 படப்பிடிப்பு கட்டணம் இருந்தது. அதன் பிறகு வந்த வேறு ஆட்சியில் அந்த கட்டணம் ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டது. நாம் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் அதை ரூ.10 ஆயிரமாக குறைக்க உத்தரவு போடப்பட்டது. வெளிப்புற கட்டணம் ஏ பிரிவு ரூ.10 ஆயிரம் என்பதை ரூ.5 ஆயிரம் என்றும் ரூ.5 ஆயிரம் என்பதை ரூ.3 ஆயிரம் என்றும் குறைத்தோம்.

கேளிக்கை வரியையும் ரத்து செய்யும்படி கேட்டார்கள். படங்களுக்கு தமிழ் பெயர் சூட்டினால் கேளிக்கை வரி இல்லை என உத்தரவு விடுவதாக சொன்னேன் சரி என்றனர். அநேகமாக இப்போது எடுக்கப்படும் எல்லா படங்களுக்கும் தமிழ் பெயர் தலைப்பாக வைக்கப்படுவதால் கேளிக்கை வரி இல்லை என்ற நிலைமை உருவாகி இருக்கிறது.

அரசியல் செய்தாலும் குற்றம் செய்யா விட்டாலும் குற்றம். இன்று காலை பத்திரிகையொன்றில் ஒரு துணுக்கு பார்த்தேன். அடடே என்ற தலைப்பில் கலைஞர் வரலாற்றிலேயே முதல் முறையாக கலைஞர் கதை வசனத்தில் கலைஞர் பேரன், தயாரிப்பில் கலைஞர் பேரன் இயக்கத்தில் கலைஞர் பேரன் நடித்த புத்தம் புதிய திரைக்காவியம் கலைஞர் டி.வி.யில் மிக விரைவில் காணத் தவறாதீர்கள் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

ரஜினி மருமகன் தனுஷ் நடிகராக இருக்கிறார். பிருதிவி ராஜ் மகன் ராஜ் கபூர் அவரது மகன்கள் சினிமாவில் இருக்கிறார்கள். சிவாஜி மகன் பிரபு நடிகராக இருக்கிறார். கலைஞர் மகன் இருக்க கூடாதா? பேரன், பேத்தி இருக்க கூடாதா? அவர்களை எதுவும் சொல்லவில்லை. என்னைப் பற்றி கேலிச் சித்திரம் போடுகிறார்கள். அதற்கு ஒரே காரணம் திராவிட இயக்கத்துக்காக நான் உழைப்பது தான். ஒழிக்க வேண்டும் என்ற குறுகிய மனப்பான்மையால் தான் இதை செய்கிறார்கள்.

ரஜினி அரசியலில் இல்லாததால் அவரை விட்டு விடுகிறார்கள். நான் அரசியலில் இருப்பதால் இப்படி செய்கிறார்கள். கலையுலகத்துடன் எனக்குள்ள தொடர்பை யாரும் தடுக்க முடியாது. அதை பலமான சுவராகத் தான் 15 ஆயிரம் பேருக்கு வீடுகள் கட்டி கொடுக்கும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. என்பணி இதே முறையில் என்றென்றும் தொடரும்.

இவ்வாறு கருணாநிதி பேசினார்.

துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரிகள் ஜெகத்ரட்சகன், தாசரிநாராயணராவ், அமைச்சர் பரிதி இளம் வழுதி, நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், டைரக்டர் பாலச்சந்தர், இயக்குனர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா, சின்னத்திரை கூட்டமைப்பு தலைவர் விடுதலை, நடிகர் சங்க பொருளாளர் வாகை சந்திரசேகர், பிலிம் சேம்பர் தலைவர் கல்யாண், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, ஆற்காடு வீராசாமி, நடிகர் பாக்யராஜ், கார்த்திக் நடிகைகள் ராதிகா, ரோஜா, தயாரிப்பாளர்கள் காஜா மைதீன், முரளிதரன், சிவசக்தி பாண்டியன், அன்பாலயா பிரபாகரன் ஆகியோர் பங்கேற்றனர்.பெப்சி தலைவர் வி.சி.குகநாதன் நன்றி கூறினார்.






 
0 Comment(s)Views: 1077

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information