ஒவ்வொரு ஆண்டும் ஐயா ஆர்.எம்.வீ. அவர்கள் நிறுவிய கம்பன் கழகத்தின் ஆண்டு விழா நடைபெறும். தமிழ் ஆரவலர்கள், பண்டிதர்கள், புலவர்கள், பட்டி மன்ற பேச்சாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், மற்றும் தமிழ் பற்று கொண்ட இதர பிரிவினர் அனைவரும் இதில் பங்குகொள்வர். நான்கைந்து நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வுகளில் இறுதி நாளன்று திருக்குறள் மற்றும் இதர தொன்மையான நூல்களைப் பற்றிய பட்டிமன்றம் நடைபெறும்.
கற்றோர் சபையில் கர்ணனை கண்டுபிடிப்பது கஷ்டமா என்ன?
இந்த ஆண்டு நடைபெற்ற கம்பன் விழாவில், சுகி சிவம் அவர்கள் தலைமையில் மேற்படி பட்டிமன்றம் நடைபெற்றது. கிட்டத்தட்ட ஒரு ராஜ சபை பாணியில் நடைபெறும் இந்த பட்டி மன்றத்தில் அனேக சுவாரஸ்யங்கள் உண்டு.
நடுவரின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு கூட செய்யலாம். அதற்கென மேல் முறையீட்டு தீர்ப்பாயம் உண்டு.
விவேகானந்தரின் சட்டைப் பையில் வள்ளலார்!
இந்த ஆண்டு அப்படி திருக்குறள் குறித்து நடைபெற்ற பட்டிமன்றத்தின் தலைப்பு அறமா, பொருளா, இன்பமா என்பதுன் தான். இறுதியில் ஓட்டெடுப்பு நடைபெறும். மூன்று தலைப்புக்களில் தங்கள் தீர்ப்பை வாக்குகளாக செலுத்தவேண்டும் பார்வையாளர்கள். சூப்பர் ஸ்டார் ‘அறம்’ என்ற தலைப்பிற்கு வாக்களித்தார். ‘அறம்’ தான் அதிக ஓட்டுக்கள் பெற்று வெற்றிபெற்றது.
பிறரை பாராட்ட இல்லை தயக்கம்; உன் கைதட்டலே அதற்க்கு விளக்கம்!
நடுவராக இருந்த சுகி சிவம் அறத்துடன் மற்ற இரு பாக்களையும் சேர்த்து ஓட்டெடுப்பு விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். காரணம், அறத்துடன் எதை சேர்த்து ஓட்டெடுப்பு விட்டாலும் அறமே வெற்றி பெறும். அது உண்மையான வெற்றியும் இல்லை என மறு ஓட்டெடுப்பு நடத்த உத்தரவிட்டார். அதன்படி அறம் நீக்கப்பட்டு மறு ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதிலும் கலந்துகொண்டு வாக்களித்தார் சூப்பர் ஸ்டார்.
தர்மத்தின் தலைவா, உனக்கு நாங்கள் வாக்களிக்கப்போவது எப்பது?
சூப்பர் ஸ்டார் ஒவ்வொரு ஆண்டும் இந்த விழாவில் கலந்துகொண்டு இறுதி நாள் நடக்கும் பட்டிமன்றத்தை கண்டுரசிப்பார்.
நல்ல நண்பர்கள் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
இந்த ஆண்டு சென்ற மாதம் நடைபெற்ற இந்த விழாவில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் எந்த வித பரபரப்பும் இன்றி மிக அமைதியாக வந்து சட்டென தனக்கென போடப்பட்ட முன்வரிசை நாற்காலியில் அமர்ந்துகொண்டார். ஒரு திடீர் பரப்பு ஏற்பட்ட பிறகே சூப்பர் ஸ்டார் வந்து அமர்ந்த விபரம் பின் வரிசையில் இருப்பவர்களுக்கு தெரிந்தது.
கள்ளமில்லா சிரிப்பு; அதுவே உன் சிறப்பு!
கை தட்டவேண்டிய இடத்தில் கைதட்டி, சிரிக்க வேண்டிய இடத்தில் அகமும் புறமும் மகிழ சிரித்து, நிகழ்ச்சியை கண்டு ரசித்தார் சூப்பர் ஸ்டார்.
சூப்பர் ஸ்டாரின் சட்டை பையில் வள்ளலார் படம் ஒன்று காணப்பட்டது. எப்போது எப்படி வந்தது என்று தெரியவில்லை.
பணிவும் பாசமும் உன் இரு கரங்கள்! கருணையும் காந்தமும் உன் இரு கண்கள்!
இந்த புகைப்படத்தை பார்த்து “மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும். ஒரு மாற்று குறையாத மன்னவன் இவனென்று போற்றி புகழ வேண்டும்” என்று அமரர் எம்.ஜி.ஆர். பாடிய பாடல் தான் நினைவுக்கு வருகிறது.
எந்திரன் மட்டுமல்ல இவன் தேவலோக இந்திரன் கூட!
சூப்பர் ஸ்டாருடன் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் வந்திருந்தார். நிகழ்ச்சி முழுக்க உடனிருந்தார். மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் மற்றும் பெரியவர் ஐயா ஆர்.எம்.வீ. அவர்கள் சூப்பர் ஸ்டாருடன் அமர்ந்திருந்தனர்.
எத்துனை தெளிவாக முக மலர்ச்சியுடன் ஒரு குழந்தையை போல இருக்கிறார் தலைவர் பாருங்கள். மிகவும் ரிலாக்ஸ்டாக அவர் இருப்பது படங்களை பார்த்தால் தெரிகிறது.
|