Padaiyappa Silver Jubilee Function(1999)
.jpg)
சூப்பர் ஸ்டாருக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தை பற்றி காங்கிரஸ் கட்சியின் எண்ணற்ற தலைவர்களுள் ஒருவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தவறாக விமர்சித்தது தேர்ந்ததே. இளங்கோவனின் இந்த முறையற்ற கருத்துக்களால் வெகுண்டெழுந்த ரஜினி ரசிகர்கள், அவரது கொடும்பாவியை கொளுத்தினர். தவிர, இளங்கோவனுக்கு கண்டனமும் பதிலடியும் தெரிவித்துள்ளனர். (இளங்கோவனோட கொடும்பாவியை கொளுத்தியதால் கொடும்பாவிக்கு கேவலம்னு சிலர் சொல்றாங்க!).
தனது சுய சம்பாத்தியத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நிறுவிய ராகவேந்திரா மண்டபத்தை 12 ஆண்டுகளுக்கு முன்பே பொதுமக்களுக்கு எழுதி வைத்துவிட்டார் என்பது பலருக்கு தெரியாது. தற்போதுள்ள இளம் வயது ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்டார் ஒரு வெற்றிகரமான நடிகராக என்பது ஆதாரப்பூர்வமாக உணர்ந்திருக்கிறார்கள். அவரது கொடையுள்ளத்தை பற்றியும் அறிந்திருக்கிறார்கள். அதை ஆதரப் பூர்வமாக உணர்ந்துகொள்ள இது போன்ற பதிவு உதவும் என்பதில் ஐயமில்லை.
‘படையப்பா’ வெள்ளி விழாவில் இது பற்றிய அறிவிப்பை பகிரங்கமாக வெளியிட்ட சூப்பர் ஸ்டார் அவர்கள், மேடையிலேயே அது தொடர்பான உயிலை தனது வக்கீலிடம் ஒப்படைத்துவிட்டார். அவரது வாழ்நாளுக்கு பிறகு, இது தமிழக மக்களுக்கே போய் சேரும். இது தவிர தனது வேறு சில சொத்துக்களையும் அவர் தமிழர்களுக்கு உயில் எழுதிக் கொடுத்துவிட்டார். அதை பகிரங்கமாக மேடையில் அறிவித்தும் விட்டார். உயில் எழுதிய விஷயத்தை ஏன் அப்படி பகிரங்கமாக் அறிவித்தார் என்பதற்கு அவர் கொடுக்கும் விளக்கத்தை பாருங்கள். அவர் எந்தளவு உயர்ந்த உள்ளம் கொண்டவர் என்பதை புரிந்துகொள்வீர்கள். கலியுக கர்ணன் என்று அவரை நாம் அழைப்பதற்கு காரணமும் புரியும்.
1999 அக்டோபர் 29 ஆம் தேதி, வெளியான தினகரன் நாளிதழில் மேற்படி செய்தி தலைப்பு செய்தியாக முதல் பக்கம் இடம் பெற்றுள்ளது. உங்கள் பார்வைக்கு அந்த பேப்பர் கட்டிங்கை தந்திருக்கிறேன். அதில் சூப்பர் ஸ்டார் தனது மண்டபம் உள்ளிட்ட சில சொத்துக்களை – தமிழ்நாட்டில் சம்பாதித்த சொத்துக்களை – தமிழர்களுக்கே எழுதி வைத்த விபரம் இடம்பெற்றுள்ளது.
‘படையப்பா’ திரைப்படத்தின் வெள்ளி விழாவில் இது தொடர்பாக சூப்பர் ஸ்டார் பேசியது என்ன? அப்போது நடந்தது என்ன? என்பது குறித்து கீழே காணலாம்.
.jpg)
தமிழக மக்களுக்கே என் சொத்து – சூப்பர் ஸ்டார் ரஜினி அறிவிப்பு!
‘படையப்பா’ வெள்ளி விழாவில் சூப்பர் ஸ்டாரின் உரை விபரம் பின்வருமாறு…
“இந்த நாளை என் வாழ்நாளை மறக்க முடியாத நாளாக மாற்ற நினைத்தேன். இந்த கல்யாண மண்டபத்தை திறந்த போதே, இது எனது இல்லை. தமிழக மக்களுக்கே சொந்தம் என்று என் மனதிற்கு தோன்றியது. ராகவேந்திரா சாரிட்டபிள் ட்ரஸ்ட் தொடங்கி அதன் மூலம் வருடா வருடம் 20 ஏழைகளுக்கு திருமணம் செய்து வைத்து வருகிறேன். நான் செய்து வைக்காவிட்டாலும் அவர்கள் செய்துகொள்வார்கள் என்று எனக்கு தெரியும்.
படையப்பா படம் மூலம் ரூ.3.5 கோடி செலவில் ஒரு ட்ரஸ்ட் தொடங்கி கல்விக்காக வருடா வருடம் ரூ.30 லட்சம் கொடுக்க முடிந்தது. இது போதாது. என்னை இந்த நிலைக்கு உயர்த்தியது தமிழக மக்கள் தான். அவங்க உழைச்சி 10 பைசா, 50 பைசா, 1 ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய் என கொடுத்து வாங்கிய டிக்கட்டு தான் எனது சொத்து.
அந்த தமிழக மக்களுக்கு என் பெயரில் இருக்கும் இந்த ராகவேந்திரா திருமண மண்டபத்தை ராகவேந்திரா சாரிட்டபிள் பப்ளிக் ட்ரஸ்ட் மூலமாக தமிழக மக்களுக்கு உயில் எழுதி வைத்திருக்கிறேன். என்னுடைய லைஃபுக்கு அப்புறம் இந்த ட்ரஸ்ட்லிருந்து வரும் ஒவ்வொரு பைசாவும் என் குடும்பத்துக்கு போகாது. எல்லாம் தமிழக மக்களுக்கு தான் போய் சேரும். இதை செய்யனும் என்று என் மனசுக்கு பட்டது. செய்துட்டேன். இதற்காக நான் எழுதிய உயிலை உங்கள் அனைவரது முன்னிலையிலும் என் வக்கீல் வரதாச்சாரியிடம் ஒப்படைக்கிறேன். (உயிலை வக்கீலிடம் மேடையிலேயே ஒப்படைத்தார்).
.jpg)
உயிலை ஏன் இப்போவே எழுதணும் என்று கேட்கலாம். நாம நல்லது செய்யனும் என்று நினைக்கும்போது அதை அப்போவே செய்துவிடவேண்டும். அதனால் தான் இப்போவே உயில் எழுதி வைத்துவிட்டேன். உயிலை எப்போ வேண்டுமானாலும் மாத்தி எழுதலாம். அப்படி செய்யக்கூடாது என்பதற்காகத் தான் இந்த மேடையிலேயே சொல்கிறேன். பேச்சை மாற்ற முடியாது அல்லவா?
இது பற்றி என் மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா ஆகியோர் கிட்டே கருத்து கேட்டேன். மிகவும் சந்தோஷமாக இதற்கு ஒப்புக்கொண்டார்கள். அவங்களுக்கு என் நன்றி. வாழ்க தமிழ்நாடு. வளர்க தமிழ் மக்கள். ஜெய் ஹிந்த்.”
(முழு உரைக்கு, விரைவில் அப்லோட் செய்யப்படவுள்ள வீடியோவை பார்க்கவும்).
படையப்பா திரைப்படம் சூப்பர் ஸ்டாரின் அந்தஸ்த்தை பன்மடங்கு உயர்த்திய படம் என்றால் மிகையாகது. பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிய அந்த படத்தின் மூலம், விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் பெறும் லாபம் சம்பாதித்தனர். தயாரிப்பாளர் என்ற வகையல், சூப்பர் ஸ்டாருக்கும் லாபத்தை கொட்டி கொடுத்தது அப்படம். அதற்கு நன்றிக் கடனாக தான் தமது சொத்தை தமிழர்களுக்கு உயில் எழுதி கொடுத்தார். அப்படத்தின் வெள்ளி விழா ராகவேந்திரா திருமண மண்டபத்தில் 1999 ஆம் ஆண்டு அக்டோபர் 28 ஆம் தேதி நடைபெற்றது.
.jpg)

|